search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு வெடி விபத்து"

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்தது.
    • வட்டாட்சியர் கனிமொழி, ஆர்.ஐ.பொன்மணி, விஏஒ அம்பேத்கர், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    அரூர்:

    ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நவீன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில் கடந்த 7ம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 17பேர் உயிரிழந்தனர்.

    இதில் தரும்புரி மாவட்டம் அரூர் அருகே உள்ள டி.அம்மாபேட்டை கிராமத்தைச் சேர்ந்த வேடப்பன், ஆதிகேசவன், இளம்பரிதி, விஜயராகவன், ஆகாஷ், கிரி, சச்சின், என 7 பேர் மற்றும் நீப்பதுரை கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

    உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில் நேற்று அம்மாபேட்டை கிராமத்திற்கு வந்த கர்நாடகா மாநிலம் ஆனைக்கல் தாலுக்காவை சேர்ந்த தாசில்தார் கரியநாயக், சித்தராஜ், விஏஓ நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஒவ்வொரு வீடாக சென்று உயிரிழந்த நபர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ. 5 லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கினர்.

    இதில், அரூர் வட்டாட்சியர் கனிமொழி, ஆர்.ஐ.பொன்மணி, விஏஒ அம்பேத்கர், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்கிழக்கு மாவட்ட செயலாளர் சாக்கன் சர்மா பொதுமக்கள் உடன் இருந்தனர்.

    • தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம்
    • கலெக்டர் குடும்பத்தினரிடம் வழங்கினார்

    ஆலங்காயம்:

    கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 16 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உயிரிழந்த தினேஷ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் முதல் அமைச்சர் நிவாரண நிதி ரூ.3 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த தினேஷ்குமாரின் தயார் தனலட்சுமியிடம் வழங்கினார். அப்போது சப் கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • லோகேஷ் மற்றும் பீமாராவ் இருவரும் தப்பி வெளியில் வந்துள்ளனர்.
    • அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம் அரூர் டி.அம்மாபேட்டை சேர்ந்த இளைஞர்கள் 25க்கும் மேற்பட்டோர், ஓசூர், கர்நாடக பகுதிகளில் உள்ள பட்டாசு குடோன்களில் வேலை செய்வதற்காக சென்று உள்ளனர். இதில் 15 இளைஞர்கள் ஒரு பகுதிக்கு சென்றுள்ளனர். இதில் 10 இளைஞர்கள் தமிழ்நாடு- கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு குடோனில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பட்டாசு குடோனுக்கு தேவையான பட்டாசுகள் கன்டெய்னர் லாரி மூலம் வந்துள்ளது. இதனை இறக்கும் பணியில் குடோனில் வேலை செய்த 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ முழுவதுமாக பரவி குடோனில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்து சிதறியது.

    அப்போது வெளியில் வேலை செய்திருந்த லோகேஷ் மற்றும் பீமாராவ் இருவரும் தப்பி வெளியில் வந்துள்ளனர். ஆனால் குடோனுக்குள்ளாக இருந்த மற்றவர்கள் விபத்தில் சிக்கினர். இந்த நிலையில் இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதில் தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி.அம்மாபேட்டையை சேர்ந்த 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சார்ந்த வேடப்பன், இளம்பரிதி, ஆதிக்கேசவன், விஜயராகவன், ஆகாஷ், கிரி, முனிவேல் உள்ளிட்ட 7 வாலிபர்கள் உயிரிழந்தனர். இதனால் டி.அம்மாபேட்டை கிராமம் முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் இறந்தவர்களின் வீட்டு அருகே உறவினர்கள் சூழ்ந்து கதறி அழுதனர். இந்த காட்சி பார்ப்பவர்கள் நெஞ்சை உருக்கும் நிலையில் இருந்தது. மேலும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 இளைஞர்கள் பட்டாசு வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் இந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • வெடிவிபத்தில் பலியான 14 பேரில் உடல்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    • வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் ஆக்ஸ்போர்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் நடைபெற்ற பட்டாசு வெடி விபத்தில் இறந்த தமிழகத்தைச் சார்ந்த 14 குடும்பத்தினருக்கும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் உயர் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் நிதி உதவி வழங்கவும் இறந்தவர்களின் உடல்கள் அவருடைய உறவினர்களிடம் பாதுகாப்பாக வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான ஆர்.சக்கரபாணி ஆகியோர் இன்று காலை பெங்களூரு வருகை தந்தனர்.

    வெடிவிபத்தில் பலியான 14 பேரில் உடல்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் ஆக்ஸ்போர்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களையும் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

    முன்னதாக அத்திப்பள்ளிக்கு வருகை தருவதற்காக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோரை பெங்களூரு விமான நிலையத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலா ளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. வரவேற்றார். அப்போது, ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா உடன் இருந்தார்.

    • விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த 29-ந் தேதி பட்டாசு குடோனில் வெடிவிபத்து நடந்தது 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தருமபுரி மாவட்ட தடயவியல் துறை ஆய்வு செய்ததில் சிலிண்டர் வெடித்ததால்தான் இந்த விபத்து நடந்தது என்று அமைச்சர் கூறினார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வெடிவிபத்து தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கான காரணம் பட்டாசா? கியாஸ் சிலிண்டரா? என்பது குறித்து பாராளுமன்றத்திலும் விவாதம் நடந்ததால் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் இன்று கிருஷ்ணகிரிக்கு வந்தார். அவர் பழையபேட்டையில் சம்பவ நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாகூர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    அப்போது சம்பவம் குறித்து தகவல்களை ஐ.ஜி. சுதாகர், மாவட்ட எஸ்.பி.யிடம் கேட்டறிந்தார். மேலும், பட்டாசு குடோன் வெடித்து பலியானவர்களின் உடல் சிதறி கிடந்த அனைத்து இடங்களையும், சுமார் 250 மீட்டர் தொலைவு வரை சுற்றி பார்வயைிட்டும் ஐ.ஜி. ஆய்வு செய்தார். மேலும், விபத்தில் பலியான ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் ஐ.ஜி. விசாரணை நடத்தினார்.

    இதேபோன்று சென்னையில் இருந்து தடயஅறிவியல் துறை இயக்குனர் விசாலாட்சி விஜயலட்சுமி, துணை இயக்குனர்கள் நளினி, சண்முகசுந்தரம் ஆகியோர் வெடிவிபத்து நடத்த கிருஷ்ணகிரிக்கு இன்று நேரில் வந்து பார்வையிட்டனர். அப்போது அவர்கள் வெடிவிபத்து நடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர். மேலும், அந்த பகுதி முழுவதும் பார்வையிட்டு தொடர்ந்து 2 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

    • ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த போது பட்டாசு மின் கம்பத்தில் பட்டு மீண்டும் அந்த சரக்குவாகனத்தில் விழுந்தது.
    • பட்டாசு வெடி விபத்தில் இறந்த சிறுவன் ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் கடந்த இரு தினங்களாக மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 10 மணி அளவில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

    அப்போது சாமியை அலங்கரித்து சரக்கு வாகனத்தில் வைத்து பொதுமக்கள் ஊர் வலம் எடுத்து சென்றனர். இந்த சரக்கு வாகனத்தை அதே பகுதியை சேர்ந்த டிரைவர் ராகவேந்திரன் (வயது26) என்பவர் ஓட்டி சென்றார்.

    சாமி ஊர்வலத்தின் போது வானவேடிக்கைகள் பட்டாசுகள் வெடித்தனர். மேலும் வெடிப்பதற்காக பட்டாசு உள்ளிட்ட வெடிபொருட்கள் அந்த சரக்கு வாகனத்திலேயே வைத்திருந்தனர்.

    ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த போது பட்டாசு மின் கம்பத்தில் பட்டு மீண்டும் அந்த சரக்குவாகனத்தில் விழுந்தது. இதில் சரக்கு வாகனத்தில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. பின்னர் அந்த சரக்குவாகனமும் தீப்பிடித்து எரிந்து நாசமானது.

    இந்த விபத்தில் பட்டாசு வெடித்ததை வேடிக்கை பார்த்த அசோகன் மகன் ஆகாஷ் (7) சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் படுகாயம் அடைந்த ராகவேந்திரன், நொச்சிப்பட்டியை கிராமத்தை சேர்ந்த ஆதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த ராகவேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பட்டாசு வெடி விபத்தில் இறந்த சிறுவன் ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×