search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதிஉதவி வழங்கிய அமைச்சர்
    X

    பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதிஉதவி வழங்கிய அமைச்சர்

    • வெடிவிபத்தில் பலியான 14 பேரில் உடல்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
    • வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் ஆக்ஸ்போர்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஓசூர்:

    கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் நடைபெற்ற பட்டாசு வெடி விபத்தில் இறந்த தமிழகத்தைச் சார்ந்த 14 குடும்பத்தினருக்கும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் உயர் சிகிச்சை அளிக்க வழிவகை செய்யவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் நிதி உதவி வழங்கவும் இறந்தவர்களின் உடல்கள் அவருடைய உறவினர்களிடம் பாதுகாப்பாக வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அவரது உத்தரவின் பேரில் இன்று காலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான ஆர்.சக்கரபாணி ஆகியோர் இன்று காலை பெங்களூரு வருகை தந்தனர்.

    வெடிவிபத்தில் பலியான 14 பேரில் உடல்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    வெடி விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் ஆக்ஸ்போர்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களையும் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

    முன்னதாக அத்திப்பள்ளிக்கு வருகை தருவதற்காக அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ஆர்.சக்கரபாணி ஆகியோரை பெங்களூரு விமான நிலையத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலா ளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. வரவேற்றார். அப்போது, ஓசூர் மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா உடன் இருந்தார்.

    Next Story
    ×