பட்டாசு வெடி விபத்தில் வாணியம்பாடி வாலிபர் பலி

தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம்கலெக்டர் குடும்பத்தினரிடம் வழங்கினார்
பட்டாசு வெடி விபத்தில் வாணியம்பாடி வாலிபர் பலி
Published on

ஆலங்காயம்:

கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 16 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உயிரிழந்த தினேஷ்குமாரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் முதல் அமைச்சர் நிவாரண நிதி ரூ.3 லட்சத்திற்கான காசோலையை உயிரிழந்த தினேஷ்குமாரின் தயார் தனலட்சுமியிடம் வழங்கினார். அப்போது சப் கலெக்டர் பிரேமலதா, தாசில்தார் சாந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com