என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள காளியம்மன் கோவில் உண்டியல் கொள்ளை
- கொள்ளை சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- திருடப்பட்ட உண்டியலில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை காணிக்கை இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்ததனர்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் எதிரே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கூரைக்குண்டு கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அனைத்து சமுதாயத்திற்கும் உட்பட்டது.
இந்த கோவிலில் வருடந்தோறும் நடைபெறும் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் விசேஷ நாட்களில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கோவிலின் பூட்டை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த 2 அடி உயரமுள்ள சில்வர் உண்டியலை பெயர்த்து எடுத்துக் கொண்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். இன்று அதிகாலை கோவில் கதவு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் சூலக்கரை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் தடயங்களை சேகரித்தனர். அப்போது அங்குள்ள மர்த்தடியில் கோவில் கதவின் பூட்டு கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் கைரேகைகளை சேகரித்தனர்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் கைவரிசை காட்டிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
திருடப்பட்ட உண்டியலில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை காணிக்கை இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்ததனர்.
கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் நடந்த துணிகர கொள்ளை சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






