search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhavani sagar dam"

    • பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
    • நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை குறைந்து வந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக பலத்த மழை கொட்டியது.

    இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அணைக்கு 24 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து இருந்தது. ஆனால் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை குறைந்து வந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து நேற்று 2 ஆயிரத்து 500 கன தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அது மேலும் குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1944 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 99.35 அடியாக இருந்தது.

    அணையில் இருந்து தடப்பள்ளி- அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு 800 கனஅடியும், குடிநீருக்கு 100 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் 905 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பவானிசாகர் அணை 100 அடியை எட்டும் நிலையில் உள்ளதால் அதிகாரிகள் அணையின் நிலவரம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    • பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 1,955 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 82.57 அடியாக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் திறப்பதாலும், குடிநீருக்காகவும், நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.57 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,955 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .

    • நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
    • பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது .

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்நிலையில் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

    எனினும் நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து பாசனத்துக்காக அதிக அளவில் பவானிசாகர் அணையின் நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.55 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 298 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 800 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 905 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது . 

    பவானி கரையோரப் பகுதியை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 4 ஆயிரம் கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இன்று மேலும் அதிகரித்து 6 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 104 அடியை நெருங்கி உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.72 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6,757 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 1,500 கன அடியும், பவானி ஆற்றுக்கு 6 ஆயிரத்து 500 கன அடி என மொத்தம் 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    பவானி ஆற்றில் 6,500 கன அடி நீர் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கன அடிக்கு மேல் பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டால் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருக்கும் என்பதால் பவானி கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பவானி கரையோரம் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கால்நடைகளை நீர்நிலைகளில் குளிப்பாட்டக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பவானி கரையோரப் பகுதியை வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணை மற்றும் அதனையொட்டிய பூங்காவில் காலை முதலே ஏராளமான பேர் குடும்பத்துடன் வந்திருந்தனர். அவர்கள் அணையின் அழகை கண்டு ரசித்து செல்பி எடுத்துக் கொண்டனர்.

    மேலும் பூங்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் சுடச்சுட மீன்களை வாங்கி சாப்பிட்டனர். இதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு கூட்டம் அலைமோதியது.

    சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்ததால் பவானிசாகர் அணை பகுதியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இன்று காலையும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் பவானிசாகர் அணை பகுதிகளை கட்டியது.

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 3 நாட்களில் 100 அடியை எட்டி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #BhavaniSagarDam
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், லட்சக்கணக்கான விவசாய விளைநிலங்களின் ஆதாரமாக விளங்கி வருவது பவானிசாகர் அணையாகும். அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். இதில் சேறும், சகதியும் போக 105 அடிக்கு தண்ணீர் சேமித்து வைக்க முடியும்.

    கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலை பகுதியில் மிதமான மழை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகளவில் வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 27 அடி உயர்ந்து உள்ளது. இன்னும் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 97.02 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,142 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து பாசனத்திற்காக தடப்பள்ளி-அரக்கன் கோட்டை வாய்க்காலுக்கு வினாடிக்கு 850 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு 650 கனஅடியும், குடிநீருக்காக கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்து விடப்படுகிறது.

    பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் 3 நாட்களில் 100 அடியை எட்டி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #BhavaniSagarDam

    பவானி சாகர் அணையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் சிறுமுகை அருகே வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உயர் மட்ட மேம்பாலம் மூழ்கியது.
    மேட்டுபாளையம்:

    தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து, ஆறுகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    கடந்த 10-ந்தேதி அணைக்கு அதிக பட்சமாக வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியும், குறைந்த பட்சமாக வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரும் வந்து கொண்டு இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணைக்கு வினாடிக்கு 4,656 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின் நீர் மட்ட உயரம் 91.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இதே போல ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணைக்கு வினாடிக்கு 4,869 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையின்நீர் மட்ட உயரம் 96.13 அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 5,505 கன அடி தண்ணீர் வெளியேற்ற படுகிறது.

    பவானி சாகர் அணையில் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதால் பவானி சாகர் அணை நீர்தேக்கப் பகுதியில் தேங்கி வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகின்றது. நீர்தேக்க பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கோவை மாவட்டம் சிறுமுகை அருகே லிங்காபுரத்தில் இருந்து காந்தவயலுக்கு செல்லும் வழியில் காந்தையாற்றின் குறுக்கே கட்டப்பட்ட உயர் மட்ட பாலம் சிறிது சிறிதாக தண்ணீரில் மூழ்கத் தொடங்கி உள்ளது .

    பாலத்தின் அடிப்பகுதியை தொட்டுக் கொண்டிருந்த தண்ணீர் சிறிது சிறிதாக அதிகரித்து தற்போது பாலத்தின் மேல் பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி விட்டது. 20 அடி உயரமுள்ள பாலத்தை மூழ்கிய படி தண்ணீர் செல்கிறது. தண்ணீரில் மூழ்கிய வாழைகள் அழுகி காணப்படுகின்றன.

    உயர் மட்டப்பாலம் முழுவதும் மூழ்கி விட்டதால் காந்த வயல் பகுதியில் உள்ள காந்தவயல், காந்தையூர் உளியூர், ஆளூர் ஆகிய 4 கிராம மக்கள் போக்குவரத்து வசதியில்லாமல் அவதிப்படக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

    பாலத்தின் மீது பஸ், லாரி, டெம்போ மற்றும் வேன்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.#tamilnews
    மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதையொட்டி இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியது.
    ஈரோடு:

    மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதை யொட்டி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 8 அயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    நேற்று நீலகிரி மலை பில்லூர் அணை நிரம்பிய தால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் பவானி சாகர் அணைக்கு பாய்ந்து வருவதால் இன்று காலை அணைக்கு நேற்றை விட மூன்று மடங்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று அதிகாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் இன்று காலை 9 மணிக்கு அணையின் நீர் மட்டம் 91 அடியை எட்டியது.

    அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் அணை மேலும் உயர வாய்ப்பு ஏற்படுவடன் முழு கொள்ளவை எட்டும் வாய்ப்பும் உள்ளது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு குடிநீருக் காக 200 கனஅடி வீதம் தடப் பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

    தெற்மேற்கு பருவமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஒரே நாளில் அணையின் நீர்மட்டமும் 2 அடி உயர்ந்தது.
    ஈரோடு:

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தெற்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்திருப்பதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கிடு...கிடுவென உயர்ந்துள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 729 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 81.50 அடியாக இருந்தது.

    இன்று அதிகாலை நிலவரப்படி நேற்றை விட 2 மடங்காக அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரத்து 865 கனஅடி வீதம் புதுவெள்ளம் பாய்ந்து வருவதுபோல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் அணையின் நீர்மட்டமும் 2 அடி உயர்ந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.36 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு இதே வேகத்தில் நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் முழு கொள்ளளவை வேகமாக எட்டும் என விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    பவானிசாகர் அணை நீர்தேக்கப்பகுதியில் அணையின் இருபுறமும் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தது. பவானிசாகர் அணையையொட்டி உள்ள சித்தன்குட்டை பகுதியில் விவசாயிகள் கதலி, நேந்திரம் வாழைகளை பயிரிட்டிருந்தனர்.

    தண்ணீர் பாய்ந்து வருவதையொட்டி இந்த வாழை தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து ஏராளமான வாழைகள் மூழ்கியது. இதனால் அவை அழுகும் நிலையில் உள்ளது.

    இதனால் வாழை பயிரிட்டிருந்த விவசாயிகள் சேதமான வாழைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பவானிசாகரில் 4.2 மி.மீ மழையும், பெரும்பள்ளம் அணை பகுதியில் 4 மி.மீ மழையும் பெய்தது.
    தென்மேற்கு பருவ மழை கர்நாடகம், கேரள மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளதால் பவானிசாகர், பாபநாசம் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. #SouthwestMonsoon
    சென்னை:

    தென்மேற்கு பருவ மழை கர்நாடகம், கேரள மாநிலங்களில் தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது.

    கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியதால் உபரி நீர் திறக்கப்பட்டது. அதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    கேரளா எல்லையையொட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவை, வால்பாறை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்கிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மழை நீடித்து வருகிறது.

    தென்மேற்கு பருவ மழையால் தமிழகத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. அதனால் அணைகளின் நீர் மட்டம் உயர்கிறது.



    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஒகேனக்கல் வந்து மேட்டூர் அணைக்கு செல்கிறது.

    இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று அணையில் 31.36 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது. கடந்த ஆண்டு இதே நாளில் 4.62 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.

    இதே போல் ஈரோட்டில் உள்ள பவானிசாகர் அணை, திருப்பூரில் உள்ள அமராவதி அணை, முல்லை பெரியாறு, கோவை மாவட்டம் சோலையாறு, பாபநாசம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    தமிழகத்தில் உள்ள அணைகளில் 198.37 டி.எம்.சி. தண்ணீர் தேக்க முடியும். தற்போது தென்மேற்கு மழையால் அணைகளில் மொத்தம் 78.34 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. சுமார் 40 சதவீதம் நிரம்பி இருக்கிறது.

    கடந்த ஆண்டு இதே நாளில் தமிழக அணைகளில் 19.02 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது.

    பவானிசாகர் அணைக்கு நேற்று வினாடிக்கு 8 ஆயிரத்து 729 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 81.50 அடியாக இருந்தது.

    இன்று அதிகாலை நேற்றை விட 2 மடங்காக அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரத்து 865 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் அணையின் நீர்மட்டமும் 2 அடி உயர்ந்தது.

    இன்று பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.36 அடியாக உயர்ந்தது.

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணைக்கு கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 18 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அப்போது அணையின் நீர் மட்டம் 97அடியாக இருந்தது.

    தொடர்ந்து நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி வந்ததால் அந்த தண்ணீர் அப்படியே பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் பல ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு வரும்தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த 8 ஆயிரம் கனஅடி தண்ணீரும் பவானி ஆற்றில் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. #SouthwestMonsoon #BhavaniSagar #Papanasam
    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் பவானிசாகர் அணை 69 அடியாக உயர்ந்து உள்ளது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்வது பவானிசாகர் அணை ஆகும். மேட்டூர் அணைக்கு அடுத்தப்படியாக 2-வது பெரிய அணையாக இது திகழ்கிறது.

    கேரள வனப்பகுதி மற்றும் ஊட்டி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை தண்ணீர் பவானி ஆறு மூலமாகவும், மற்றும் காட்டாறான மாயாறு வழியாகவும் பவானிசாகர் அணைக்கு வருகிறது.

    கடந்த 3 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் அணைக்கு கிடு..கிடுவென நீர்வரத்து உயர்ந்தது. இதனால் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 55 அடியாக இருந்தது. இது மள..மளவென உயர்ந்து நேற்று 66 அடியாக உயர்ந்தது.

    இன்று காலை மேலும் 3 அடி கூடி 69 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 832 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கேரள மற்றும் நீலகிரி மலை பகுதியில் இன்று காலை 6 மணியில் இருந்து தொடர்ந்து மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் மதியத்துக்கு மேல் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என பொதுப்பணிதுறையினர் தெரிவித்தனர்.

    குடிநீருக்காக பவானி ஆற்றில் வழக்கம் போல் 200 களஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதே போல் கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் பவானிசாகர் அணை ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழையால் நீண்ட நாளுக்குப் பிறகு பவானிசாகர் அணைக்கு காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் நீலகிரி மலை பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதாலும், பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 6436 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை முதல் அது மேலும் பல மடங்கு உயர்ந்து அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 186 கனஅடி வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர் மட்டம் நேற்று 57.46 அடியாக இருந்தது. இன்று ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 62 அடியாக இருந்தது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணைக்கு தண்ணீர் வரும் பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள மாயாற்றில் செந்நிறத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.

    தொடர்ந்து வரும் வெள்ளப் பெருக்கால் மாயாற்றில் வனப்பகுதி கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க வேண்டாம், துணி துவைக்கவும் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் வன அதிகாரிகளும், பொதுப்பணி துறையினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.



    ×