search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானிசாகர் அணை இன்று 91 அடியை எட்டியது
    X

    பவானிசாகர் அணை இன்று 91 அடியை எட்டியது

    மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதையொட்டி இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91 அடியை எட்டியது.
    ஈரோடு:

    மேற்கு தொடர்ச்சி மலையில் கன மழை பெய்து வருவதை யொட்டி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 8 அயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    நேற்று நீலகிரி மலை பில்லூர் அணை நிரம்பிய தால் அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் பவானி சாகர் அணைக்கு பாய்ந்து வருவதால் இன்று காலை அணைக்கு நேற்றை விட மூன்று மடங்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று அதிகாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் இன்று காலை 9 மணிக்கு அணையின் நீர் மட்டம் 91 அடியை எட்டியது.

    அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் அணை மேலும் உயர வாய்ப்பு ஏற்படுவடன் முழு கொள்ளவை எட்டும் வாய்ப்பும் உள்ளது.

    அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு குடிநீருக் காக 200 கனஅடி வீதம் தடப் பள்ளி- அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு கனஅடியும் திறந்து விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×