search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "asia cup"

    • இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறுகிறது.
    • ஆசிய கோப்பைக்கான இறுதிப்போட்டி செப்டம்பர் 17ம் தேதி நடைபெறுகிறது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

    பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.

    இதற்கிடையே இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆசிய கோப்பை போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஒரு பிரிவிலும், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றொரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளது.

    அதன்படி, தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி நேபாளம் அணியை ஆகஸ்ட் 30-ம் தேதி எதிர்கொள்கிறது.

    ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும், பரபரப்பை ஏற்படுத்தும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 2-ம் தேதி இலங்கையின் கண்டி நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை.
    • இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறும்.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 31-ம் தேதி முதல் செப்டம்பர் 17-ம் தேதி வரை நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.

    இதற்கிடையே, பாகிஸ்தானில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றால் அதில் பங்கேற்க மாட்டோம் என பி.சி.சி.ஐ. அறிவித்திருந்தது.

    இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் அருண் துமால் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அருண் துமால் கூறுகையில், ஆசியகோப்பைக்கான அட்டவணை இறுதி செய்யப்பட்டது. பாகிஸ்தானில் லீக் கட்டத்தில் 4 ஆட்டங்கள் இருக்கும். இலங்கையில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி உள்பட 9 ஆட்டங்கள் இருக்கும். இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடினால் மூன்றாவது ஆட்டம் நடக்கும் என தெரிவித்தார்.

    2010-ம் ஆண்டு போலவே இலங்கையின் தம்புல்லாவில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடும்.

    பாகிஸ்தானில் அந்த அணி நேபாளத்துக்கு எதிராக மோதுகிறது. ஆப்கானிஸ்தான்-வங்கதேசம், வங்கதேசம்-இலங்கை மற்றும் இலங்கை-ஆப்கானிஸ்தான் ஆகியவை பாகிஸ்தானில் நடைபெறும் மற்ற 3 ஆட்டங்கள் ஆகும்.

    • பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என பிசிசிஐ தெரிவித்தது.
    • நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

    பாகிஸ்தான் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய தீர்மானித்திருந்த போது இந்தியர் ஒருவர் பாகிஸ்தான் அணியை மிரட்டினார் என ஷாஹித் அப்ரிடி சுட்டிக் காட்டியுள்ளார்.

    ஆசிய நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டி இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெற வேண்டுமென விரும்புகிறது.

    ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.

    இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஷாஹித் அப்ரிடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சில வருடங்களுக்கு முன்பு இந்திய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியை இந்தியர் ஒருவர் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார். ஆனாலும் நாங்கள் இந்தியா சென்று விளையாடினோம். மேலும், ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடிவு செய்தால், அவர்கள் மீது பாகிஸ்தான் மிகுந்த கவனம் செலுத்தும் என உறுதியளிக்கிறேன்.

    நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். இதற்கு முன், மும்பையைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் எங்களை மிரட்டினார். அதை எங்கள் அரசு பொறுப்பாக ஏற்று பாகிஸ்தான் அணி இந்தியா சென்றது. எனவே மிரட்டல்கள் எங்கள் உறவை சிதைக்கக்கூடாது.

    இந்தியா ஆசிய கோப்பைக்கு வர சம்மதித்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இது போர்கள் மற்றும் சண்டைகளின் தலைமுறை அல்ல. உறவுகள் நன்றாக இருக்க வேண்டும். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளோம்.

    நாங்கள் இந்தியாவுக்கு வந்தபோது எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது நினைவிருக்கிறது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள அழகான உறவு.

    என அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    • முதலில் ஆடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹசரங்கா டி சில்வா 36 ரன்னும், தனஞ்செய டி சில்வா 28 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்டும், நசீம் ஷா, சதாப் கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்கியது. இலங்கை அணியினரும் பந்து வீச்சில் மிரட்டினர்.

    இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதமடித்து 55 ரன்னில் அவுட்டானார். இப்திகார் அகமது 32 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் 6-வது முறையாக ஆசிய கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது.

    இலங்கை அணி சார்பில் பிரமோத் மதூஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இலங்கை வீரர் பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஹரீஸ் ரவூப் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பங்கேற்றுள்ளன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. தொடக்க வீரர் குஷல் மெண்டிஸ் டக் அவுட்டானார். மற்றொரு வீரர் நிசங்கா 8 ரன்னுடன் வெளியேறினார். குணதிலகா ஒரு ரன்னுடன் பெவிலியன் திரும்பினார். 


    தனஞ்செய டிசெல்வா 28 ரன் அடித்தார். அதிரடி காட்டிய பானுகா ராஜபக்சே 45 பந்துகளில் 71 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கேப்டன் தசுன் சனகா 2 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஹசரங்கா டிசெல்வா 36 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். கருணாரத்னே 14 ரன் அடித்தார்.

    இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் ஹாரீஸ் ராவூப் 3 விக்கெட்களை கைப்பற்றினார். நசீம் ஷா, சதாப்கான், இப்திகார் அகமது தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களம் இறங்குகிறது. 

    • ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.
    • ஆசிய கோப்பையை இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.

    துபாய்:

    15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 27-ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இலங்கை தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தான் அணி 3 ஆட்டத்தில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில், ஆசிய கோப்பையை வெல்வதற்கான இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    இதில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான், பகர் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளார். பந்து வீச்சில் நசீம்ஷா, ஹரிஸ்ரவுப், ஷதப்கான் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் முகமது நவாஸ் பேட்டிங், பந்து வீச்சில் அசத்தி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இலங்கையிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது.

    இதற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது தகன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தது. அதன்பின் அந்த அணி எழுச்சி பெற்று இறுதிப் போட்டியில் தகுதி பெற்றுள்ளது.

    இலங்கை அணி பேட்டிங்கில் நிசாங்கா, குசால் மெண்டிஸ், பானுகா ராஜபக்ச ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்‌ஷனா, பிரமோத் மதுஷன் ஆகியோர் உள்ளனர். ஆல்- ரவுண்டர் கருணரத்னே கடைசி ஆட்டத்தில் அதிரடியாக விளையாட கூடியவர். வெற்றி உத்வேகத்தை இறுதிப் போட்டியிலும் தொடர இலங்கை முயற்சிக்கும்.

    இரு அணிகளும் சமபலத்துடன் உள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கோப்பையை இலங்கை அணி 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வென்றுள்ளன.

    • பாகிஸ்தான் வீரரும், ஆப்கானிஸ்தான் வீரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • அவர்களுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்தது.

    துபாய்:

    ஆசிய கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றின் 4-வது போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இதில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஆப்கானிஸ்தானை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.

    இதற்கிடையே, இப்போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணியின் 19-வது ஓவரை அந்த அணியின் பரீட் அகமது வீசினார். பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி களத்தில் இருந்தார். 18.5 ஓவரை வீசியபோது ஆசிப் அலி அவுட்டானார். விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் அகமது கொண்டாடியபோது, ஆட்டமிழந்த ஆசிப் அலி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு வீரர்களின் வாக்குவாதத்தால் மைதானத்தில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், போட்டியின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர் பரீட் அகமது ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    • டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன.
    • இதில் இந்தியா 17 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் இடையே தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில், இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்த மைதானத்தில் 2-வது பேட்டிங் செய்யும் அணியே பெரும்பாலும் வெற்றி பெறுவதால் 'டாஸ்' முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் டாசில் வெற்றி பெறும் அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 7-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது. 

    • ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அக்‌ஷர் பட்டேல் களம் இறங்குவார் என தகவல்.
    • இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்ப்பு.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் சூப்பர்4 சுற்று 2-வது ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

    காயம் காரணமாக விலகிய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக இன்றைய போட்டியில் அக்‌ஷர் பட்டேல் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியில் காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஷாநவாஸ் தஹானிக்கு பதிலாக ஹசன் அலி அல்லது முகமது ஹஸ்னைன் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என தெரிகிறது.

    பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி தனது முழுபலத்தையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி எல்லா வகையிலும் போராடும் என்று தெரிகிறது.

    எனவே இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விருந்தாக அமையும். துபாயில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 175 ரன்களை எடுத்தது.
    • இலங்கை வீரர் மெண்டிஸ் 36 ரன் அடித்தார்.

    சார்ஜா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. சார்ஜாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    தொடக்க ஆட்டக்காரர் ஹசரத்துல்லா ஷஷாய் 13 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரன் 40 ரன்னில் அவுட்டானார். நஜிபுல்லா சட்ரன் 17 ரன்னிலும், கேப்டன் முகமது நபி ஒரு ரன்னிலும் வெளியேறினர். இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் நிசங்கா 35 ரன்னும், மெண்டிஸ் 36 ரன்னும் அடித்தனர். குணதிலகா 33 ரன் அடித்தார். பானுகா 31 ரன் எடுத்தார். ஹசரங்கா டிசெல்வா 16 ரன்னுடன் களத்தில் இருந்தார். இலங்கை அணி 19.1 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் அடித்தது. இதையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

    • ஆசியக் கோப்பை சூப்பர்4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.
    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 175 ரன்களை எடுத்துள்ளது.

    சார்ஜா:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்தன. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களைப் பிடித்த இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

    சூப்பர் 4 சுற்றுக்கு வந்துள்ள 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    இந்நிலையில், சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் சார்ஜாவில் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் ஹசரத்துல்லா ஷஷாய் 13 ரன்னில் அவுட்டானார்.

    மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த இப்ராகிம் சட்ரான் 2வது விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்தது.

    அதிரடியாக ஆடிய குர்பாஸ் 45 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இப்ராகிம் சட்ரன் 40 ரன்னில் அவுட்டானார். நஜிபுல்லா சட்ரன் 17 ரன்னிலும், கேப்டன் முகமது நபி ஒரு ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி இன்று வெற்றிபெற்று பழிதீர்க்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 

    இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை இன்று எதிர்கொள்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி இன்று வெற்றிபெற்று பழிதீர்க்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்திய அணியை பொறுத்தவரை 12 வீரர்கள் புதுமுகங்கள். இளம் வீரர்களை கொண்ட இந்தியா கடைசி லீக்கில் இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் புரட்டி எடுத்தது. இருப்பினும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் இந்திய வீரர்கள் தடுமாறுகிறார்கள். இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 

    லீக் சுற்றில் 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்த ஜப்பான் வீரர்கள் அதே உத்வேகத்துடன் தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் தீவிரம் காட்டுவதால் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 
    ×