search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாக்கி"

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகள் வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது
    தஞ்சாவூர்,மே.29-

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக 2021-2022ம் ஆண்டிற்கு வளைகோல்–பந்து லீக் விளையாட்டுப் போட்டிகள் மண்டல அளவில் ஜூன் 2022ம் மாதத்தில்  நடைபெற இருப்பதனை தொடர்ந்து மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் விளையாட்டு போட்டிகள் வருகின்ற 1.6.22 அன்று தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

    மாவட்ட அளவிலான வளைகோல்பந்து விளையாட்டு போட்டியில் முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட உள்ளது.

    மாவட்ட அளவிலான வளைகோல்பந்து லீக் போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக, ஹாக்கி கழக மற்றும் கிளப் அணிகளில் உள்ள ஆண்கள் அணி மட்டுமே கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

     வளைகோல்பந்து லீக் போட்டிகள் 1.6.22 அன்று காலை 9 மணிக்கு துவங்கும். வளைகோல்பந்து லீக் போட்டியில் கலந்து கொள்ள உள்ள அணிகள் தங்கள் அணியினை தஞ்சாவூர் மாவட்டப் பிரிவு வளைகோல்பந்து பயிற்றுனர் கைப்பேசி எண்.9865662797 மற்றும் அலுவலக தொலைபேசி எண்.04362-235633-ல் தொடர்பு கொண்டு 31.5.22ம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும்.

    முதல் இடத்தில் வெற்றி பெறும் ஹாக்கி அணி மண்டல அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.  மேலும், மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் அணியி–னருக்கு பயணப்படியோ, தினப்படியோ தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவு அலுவலகத்தின் மூலம் வழங்கப்படமாட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி இன்று வெற்றிபெற்று பழிதீர்க்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
    ஜகார்த்தா:

    11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. 

    8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் ஜப்பான், நடப்பு சாம்பியன் இந்தியா, 'பி' பிரிவில் மலேசியா, தென்கொரியா ஆகிய அணிகள் சூப்பர் 4 எனப்படும் 2-வது சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 

    இந்நிலையில் சூப்பர் 4 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் பிரேந்திர லாக்ரா தலைமையிலான இந்திய அணி ஜப்பானை இன்று எதிர்கொள்கிறது. ஏற்கனவே லீக் சுற்றில் ஜப்பானிடம் 2-5 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த இந்திய அணி இன்று வெற்றிபெற்று பழிதீர்க்குமா என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    இந்திய அணியை பொறுத்தவரை 12 வீரர்கள் புதுமுகங்கள். இளம் வீரர்களை கொண்ட இந்தியா கடைசி லீக்கில் இந்தோனேசியாவை 16-0 என்ற கோல் கணக்கில் புரட்டி எடுத்தது. இருப்பினும் பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவதில் இந்திய வீரர்கள் தடுமாறுகிறார்கள். இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். 

    லீக் சுற்றில் 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்த ஜப்பான் வீரர்கள் அதே உத்வேகத்துடன் தாக்குதல் ஆட்டத்தை தொடுப்பதில் தீவிரம் காட்டுவதால் இந்திய வீரர்களுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 
    ×