என் மலர்
சினிமா

நட்பே துணை
பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி - அனகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நட்பே துணை’ படத்தின் முன்னோட்டம். #NatpeThunai #HipHopThamizha
அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நட்பே துணை’.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனகா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பாண்டியராஜன், விக்னேஷ்காந்த், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - ஹிப் ஹாப் ஆதி, படத்தொகுப்பு - பென்னி ஆலிவர், கலை இயக்குநர் - பொன்ராஜ், நடன இயக்குனர்கள் - சந்தோஷ் & சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி - ப்ரதீப் தினேஷ், நிர்வாக தயாரிப்பாளர் - அன்புராஜ், தயாரிப்பு - சுந்தர்.சி., இயக்குநர் - டி.பார்த்திபன் தேசிங்கு.

இவர் ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ உள்ளிட்ட படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு படம் உருவாகி இருக்கிறது.
படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சுந்தர்.சி பேசியதாவது:-
இப்படத்துக்காக அனைவருமே உழைத்துக் கொண்டே இருந்தார்கள். நான் இயக்கும் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை. என் படங்களில் பொழுது போக்கை மட்டுமே எதிர்பார்த்து வருவார்கள். கருத்து சொன்னால் ‘அன்பே சிவம்‘ மாதிரி ரிசல்ட் கொடுத்து விடுகிறார்கள். ‘நட்பே துணை’ கதையைக் கேட்டவுடன் ரொம்ப பாசிட்டிவாக இருந்தது. காதல், காமெடி, எமோஷன் என அனைத்துமே இருக்கிறது. இதெல்லாம் கடந்து நல்ல ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தது. மீசையை முறுக்கு போலவே இந்த படமும் பெரிய வெற்றி பெறும்’. இவ்வாறு அவர் பேசினார். #NatpeThunai #HipHopThamizha #Anagha #SundarC
நட்பே துணை டிரைலர்:
Next Story






