search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AR Murugadoss"

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் `தர்பார்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மும்பையில் துவங்கியது. #Darbar #Rajinikanth
    ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரஜினியின் 167-வது படத்திற்கு `தர்பார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. மும்பையில் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. படத்தின் பூஜையில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

    மும்பை பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 



    அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், டி.சந்தானம் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, விவேக் பாடல்களை எழுதுகிறார்.

    படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகும் தர்பார் படம் 2020 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss
    ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ரஜினியின் 167-வது படத்திற்கு `தர்பார்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு மும்பையில் நாளை தொடங்குகிறது.

    போஸ்டரில், மும்பையில் உள்ள இந்தியாவின் நுழைவாயில் இடம்பெற்றிருப்பதுடன், போஸ்டரை தலைகீழாக பார்க்கும் போது மும்பை என்ற எழுத்தும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், படம் மும்பை பின்னணியில் உருவாகுவதும், இதில் ரஜினிகாந்த் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிப்பதும் உறுதியாகியுள்ளது.



    மேலும், நான் நல்லவனா இருக்கனுமா, கெட்டவனா இருக்கனுமா, இல்ல கேடு கெட்டவனா இருக்கனுமா என்பதை நீயே முடிவு செய் என்ற வாசகமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

    படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளையும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பையும், டி.சந்தானம் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர். ராம் லக்‌ஷ்மன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, விவேக் பாடல்களை எழுதுகிறார்.

    படம் 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2.0 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கிறார். #Darbar #Rajinikanth #Nayanthara #ARMurugadoss #Anirudh

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் 167 வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை வெளியாக இருக்கிறது. #Thalaivar167 #ARM
    பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

    இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா நடிக்கிறார். ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.



    இந்நிலையில், நாளை காலை 8.30 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட இருப்பதாக இப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. #Thalaivar167 #ARM
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் பரவி வரும் நிலையில், இதுகுறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Rajinikanth166
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வருகிற 10-ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தில் நடிக்கவிருக்கும் கதாபாத்திரங்கள் குறித்து பல்வேறு விதமான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 

    இதுவிர கீர்த்தி சுரேஷ் ஒரு கதாபாத்திரத்திலும், நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிப்பதாக ஒவ்வொரு நாளும் புதுப்புது தகவல்கள் பரவி வருகின்றன.


    இந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கமாவது, ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்து வெளியாகும் தகவலில் உண்மையில்லை. தற்போது வரை நயன்தாரா மட்டுமே ஒப்பந்தமாகி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கவும். வதந்திகளை பரப்ப வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss #Nayanthara

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Rajini
    ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் இந்தியில் இருந்தே கொண்டு வரப்படுகின்றனர். காலா படத்தில் நானா படேகர், 2.0 படத்தில் அக்‌‌ஷய் குமார், பேட்ட படத்தில் நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்துக்கு யார் வில்லனாக நடிக்க உள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டிருந்தது.

    ஏப்ரல் 10ந்தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. கதாநாயகிகளாக நயன்தாராவும், கீர்த்தி சுரேசும் நடிக்க வாய்ப்புள்ளது. மேலும், ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் புதிதாக அணியில் இணைந்துள்ளார். இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவை வில்லனாக நடிக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.



    ‘மெர்சல்’ மற்றும் ‘ஸ்பைடர்’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம்கவர்ந்த வில்லனாக எஸ்.ஜே.சூர்யா வலம் வந்தார். தற்போது அவர் கள்வனின் காதலி இயக்குநர் தமிழ்வாணனின் இயக்கத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ரம்யா கிருஷ்ணனுடன் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பும் மும்பையில்தான் நடைபெற்று வருகிறது. இது அமிதாப் பச்சன் நடிப்பில் வெளிவரும் முதல் நேரடி தமிழ்த் திரைப்படமாகும். இந்தப் படத்தின் போஸ்டரையும் ரஜினிகாந்த் வெளியிட்டிருந்தார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் அவரது மகளாக நடிக்க பிரபல நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss
    ‘பேட்ட’ படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தயாராகி உள்ளார். ரஜினியின் 166-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 10–ந்தேதி மும்பையில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க பிரபல நடிகை நிவேதா தாமஸ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக படத்தில் வரும் ரஜினியின் தோற்றத்தை புகைப்படம் எடுக்கும் பணி கடந்த வாரம் நடந்தது. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பாக திரைக்கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.



    ஒரு மாதம் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்துகின்றனர். இடையில், வருகிற 18-ந் தேதி மட்டும் சென்னை வந்து ஓட்டு போட்டு விட்டு மீண்டும் மும்பை சென்று படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். ரஜினியின் கதாபாத்திரம் சமூக வலைத்தளங்களில் வெளியாவதை தடுக்க படப்பிடிப்பில் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளனர். 

    இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Rajinikanth166 #ARMurugadoss #NivethaThomas

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் துவங்க இருக்கிறது. #Rajinikanth166 #ARMurugadoss
    பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த படக்குழு, தற்போது படப்பிடிப்புக்கு முழுமையாக தயாராகி விட்டது. ஏப்ரல் 10-ந் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

    முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏற்கெனவே வெளியான ‘துப்பாக்கி’ படம், மும்பையை கதைக் களமாகக் கொண்டு உருவாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ரஜினியின் ‘பேட்ட’ படத்துக்கும் முருகதாசின் கத்தி படத்துக்கும் இசையமைத்த அனிருத், இந்தப் படத்துக்கும் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.



    ரஜினிகாந்த் வழக்கமாக தேர்தல் நடக்கும் சமயத்தில் வெளியூரில் இருப்பார். பிரசாரத்துக்கு அழைப்பதற்காகவோ ஆதரவு கேட்டோ அரசியல் நண்பர்கள் நெருக்கடி கொடுப்பார்கள் என்பதற்காகவே தேர்தலுக்கு முன்பே தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்துவிட்டு ஏதேனும் ஒரு வேலையில் பிசியாகிவிடுவார்.

    அப்படி இந்த தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என்று அறிவித்தவர், தேர்தல் சமயத்தில் படப்பிடிப்பில் இருக்கப்போகிறார். #Rajinikanth166 #ARMurugadoss

    சர்கார் படத்தை அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கும் முருகதாஸ், அடுத்ததாக பிரபல நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறார். #ARMurugadoss
    தமிழ், தெலுங்கு, இந்தித் திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி வரும் முருகதாஸ் கடந்த ஆண்டு விஜய்யை வைத்து சர்கார் படத்தை இயக்கினார். வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றிபெற்ற நிலையில் தற்போது ரஜினிகாந்தைக் கதாநாயகனாக கொண்டு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

    இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஏப்ரல் மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து முருகதாஸ் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கதாநாயகனாக கொண்டு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.



    இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக தெலுங்கில் சிரஞ்சீவியைக் கதாநாயகனாக வைத்து ஸ்டாலின் படத்தை இயக்கினார். அங்கு நல்ல வரவேற்பு பெற்ற அந்தப் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 2017-ம் ஆண்டு மகேஷ் பாபுவைக் கதாநாயகனாக வைத்து ஸ்பைடர் படத்தைத் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இயக்கியிருந்தார்.
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ரஜினியின் 166-வது படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது. #Rajinikanth166 #ARMurugadoss
    ரஜினிகாந்தும் ஏ.ஆர்.முருகதாசும் இணைவது கடந்த சில ஆண்டுகளாக தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இப்போது ஒரு வழியாக இருவரும் கைகோர்த்திருப்பதால் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

    ரஜினி படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையிலேயே நடக்கிறது. ஒரே கட்டமாக முழு படத்தையும் முடிக்க தெளிவாக திட்டமிட்டிருக்கிறார் முருகதாஸ். சந்தோஷ் சிவன் கால்ஷீட்டை முன்கூட்டியே மொத்தமாக வாங்கிவிட்டார். ரஜினி மொத்தமாக 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.



    படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில் அவை வதந்தி என்பது தெரிய வந்துள்ளது. ரஜினி ஒரு வேடத்தில் மட்டுமே நடிக்கிறார் என்று படக்குழு தெரிவித்தது. மார்ச் இறுதிக்குள் படப்பிடிப்பு துவங்குகிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Rajinikanth166 #ARMurugadoss

    பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கும் அனிருத் இசையமைக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. #Rajinikanth166 #ARMurugadoss #Anirudh
    கார்த்திக் சுப்புராஜ் இயக்க ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்திற்கும் அனிருத்தே இசையமைக்க இருக்கிறார்.

    ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அனிருத் அளித்த பேட்டியில், ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.



    விரைவில் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்புக்குச் செல்ல தயாராகி வருகிறது படக்குழு. முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ரஜினிகாந்த் 45 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். பெரும்பாலான காட்சிகளை மும்பையில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது. #Rajinikanth166 #ARMurugadoss #Anirudh

    மார்வெல் சீரியசின் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதவிருக்கிறார். #AvengersTheEndGame #ARMurugadoss
    சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையே பிரபல ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் படங்களின் தொடர்ச்சியாக உருவாகி வரும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு வசனம் எழுதுகிறார்.

    இதுபற்றி அவர் கூறும்போது ‘எனக்கு எப்போதுமே அவெஞ்சர்ஸ் கதைகள் மிகவும் பிடிக்கும். நாடே எதிர்பார்க்கும் ஒரு படத்துக்கு தமிழில் வசனம் எழுதுவதில் மகிழ்ச்சி. என் மகன் ஆதித்யாவுக்கு தான் இதற்கு நன்றி சொல்லவேண்டும். அவர் கேட்டுக் கொண்டதால் தான் இதை ஒப்புக்கொண்டேன்.



    உலக புகழ்பெற்ற சூப்பர்மேன் கதாபாத்திரங்கள் என் வசனத்தை பேசப்போகிறார்கள். முடிந்தவரை தமிழ் ரசிகர்கள் படத்தோடு தங்களை இணைக்கும் வகையில் வசனங்கள் இருக்கும்’ என்று கூறி இருக்கிறார். #AvengersTheEndGame #ARMurugadoss

    பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Rajinikanth166 #SanthoshSivan
    2.0, பேட்ட படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது.


    முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்.



    இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 27 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth166 #ARMurugadoss #SantoshSivan



    ×