என் மலர்
நீங்கள் தேடியது "Avengers The End Game"
‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தின் ரிலீசை முன்னிட்டு இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் அந்தமை உருவாக்கியிருக்கிறார். #AvengersEndGame #ARRahman
உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் மார்வெல் சீரியசில் இடம்பெற்றிருந்த அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒன்றாக இணைந்துள்ள கடைசி பாகம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் அந்தமமை உருவாக்குகிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஒரு புதிய கீதத்தை இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக உருவாக்கியிருக்கிறார். இந்த பாடல் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகிறது.

இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறும்போது, என் குடும்பம் மற்றும் என்னை சுற்றியே பல மார்வெல் ரசிகர்கள் இருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றை கொடுக்க அதிக அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். #AvengersEndGame #ARRahman #MarvelIndia
மார்வெல் சீரியசின் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்திற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதவிருக்கிறார். #AvengersTheEndGame #ARMurugadoss
சர்கார் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இதற்கிடையே பிரபல ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் படங்களின் தொடர்ச்சியாக உருவாகி வரும் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு வசனம் எழுதுகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது ‘எனக்கு எப்போதுமே அவெஞ்சர்ஸ் கதைகள் மிகவும் பிடிக்கும். நாடே எதிர்பார்க்கும் ஒரு படத்துக்கு தமிழில் வசனம் எழுதுவதில் மகிழ்ச்சி. என் மகன் ஆதித்யாவுக்கு தான் இதற்கு நன்றி சொல்லவேண்டும். அவர் கேட்டுக் கொண்டதால் தான் இதை ஒப்புக்கொண்டேன்.

உலக புகழ்பெற்ற சூப்பர்மேன் கதாபாத்திரங்கள் என் வசனத்தை பேசப்போகிறார்கள். முடிந்தவரை தமிழ் ரசிகர்கள் படத்தோடு தங்களை இணைக்கும் வகையில் வசனங்கள் இருக்கும்’ என்று கூறி இருக்கிறார். #AvengersTheEndGame #ARMurugadoss






