என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Santosh Sivan"

    • இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு ‘தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி’ என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.
    • இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும்.

    2024 கேன்ஸ் திரைப்பட விழாவில் அடுத்தடுத்து இந்திய குறும் படங்களுக்கும், திரைப்படங்களுக்கும், நடிகருக்கும் அங்கீகாரம் கிடைத்த நிலையில் தற்பொழுது இந்திய ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவனுக்கு 'தி பியர் ஆஞ்ஜெனியக்ஸ் எக்ஸ்லன்ஸ் இன் சினிமாடோகிராஃபி' என்ற கவுரவ விருதை வழங்கியுள்ளனர்.

    இது ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு கொடுக்கப்படும் கவுரவ விருதாகும். சந்தோஷ் சிவன் அவருக்கென ஒரு ஸ்டைலில் கதையை ஒளிப்பதிவில் காண்பிக்கும் திறனுள்ளவர். ஒரு குழந்தை எப்படி இந்த உலகை வியந்தும், புதுமையாக ஒவ்வொரு விஷயத்தை பார்க்கிறதோ. அதுப்போல தான் சந்தோஷ் சிவனின் காட்சிபதிவு இருக்கும்.

    இவரின் இந்த காட்சிபதிவு திறனுக்கு இவரின் அப்பா மிக முக்கிய காரணம். இவரது தந்தையான  சிவசங்கரன் நாயர் பிரபலமான மலையாள இயக்குனர் ஆவார். இவர் ஒரு போட்டோ ஸ்டூடியோவை சொந்தமாக வைத்து இருந்தார். சிறு வயதில் இருந்தே தன் அப்பாவுடன் போட்டோ ஸ்டூடியோக்கு செல்வதும், அவர் எடுக்கும் போட்டோ ஷூட்டுகளுக்கு உதவி செய்து வந்து, ஒளிப்பதிவின் மீது ஆர்வம் பற்றிக் கொண்டது.

    1986 ஆம் ஆண்டு வெளியான `நிதியுடே கதா' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் தனது ஒளிப்பதிவாளர் பயணத்தை தொடங்கினார். மணி ரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா மற்றும் தளபதி படங்களில் இவரது ஒளிப்பதிவின் திறமை அபாரமாக இருக்கும்.

    ரோஜா படத்தில் வரும் இயற்கை காட்சிகள், தளபதி படத்தில் ரஜினி கதாப்பாத்திரத்திற்கும் சூரியனுக்கும் ஒரு தொடர்பு இருந்துக் கொண்டே இருக்கும், அதை மிக அழகாக காட்சி படுத்திருப்பார். இவர் ஒளிப்பதிவில் உருவான சாருக்கான் ஓடும் ரெயிலில் ஆடிய 'சையா சையா' பாடல் இன்று வரை மக்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.

     

    இந்தியன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் என்ற சங்கத்தை தொடங்கி வைத்தது சந்தோஷ் சிவன் ஆகும்.அமேரிகன் சொசைட்டி ஆஃப் சினிமாடோகிராஃபர்ஸ் பட்டியலில் இடம் பெற்ற முதல் ஆசிய ஒளிப்பதிவாளர் பெருமை இவரே சேறும். இதுவரை 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் 50-மேற்பட்ட டாக்குமண்டரிகளுக்கும் ஒளிப்பதிவு ஆற்றியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

    சர்வதேச அளவில் இதுவரை பல பிரபல ஒளிப்பதிவாளர் பெற்ற இந்த கேன்ஸ் கவுரவ விருதை நம் இந்தியாவை சேர்ந்த சந்தோஷ் சிவன் தற்பொழுது பெற்றுள்ளது மிகப் பெரிய ஒரு அங்கீகாரம் இந்திய சினிமா பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    பேட்ட படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தேசிய விருது வென்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். #Rajinikanth166 #SanthoshSivan
    2.0, பேட்ட படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இந்த மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த நடிகர்கள் தேர்வையும் முடித்துவிட்டு, மார்ச் இறுதியில் படப்பிடிப்பை துவங்க படக்குழு முடிவு செய்துள்ளது.


    முருகதாஸ் திரைக்கதை வடிவத்தை இறுதி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்.



    இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, தளபதி படத்திற்கு பிறகு மீண்டும் ரஜினி சாருடன் இணைவதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் 27 வருடங்களுக்கு பிறகு ரஜினி படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Rajinikanth166 #ARMurugadoss #SantoshSivan



    தயாரிப்பாளர்களை விமர்சித்து ட்விட் பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவனுக்கு தயாரிப்பாளர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், தனது ட்விட்டர் பதிவை நீக்கிவிட்டார். #SanthoshSivan #Producers
    பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். ரோஜா, தளபதி, இருவர், உயிரே உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘‘செக்கச் சிவந்த வானம்’’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இந்தியில் டெரரிஸ்ட் உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார். 12 முறை தேசிய விருது பெற்றுள்ளார்.

    சந்தோஷ் சிவனின் சமீபத்திய ட்விட் பதிவு தயாரிப்பாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் தனது டுவிட்டை மீம்ஸ் வடிவில் பதிவிட்டிருக்கிறார். அதில் இரண்டு நாய்கள் இடம்பெற்றுள்ளதோடு நடிகைகளின் சம்பளத்தை சந்தோ‌ஷமாக கொடுக்கும் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்கும் போது கடுகடுவென கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.



    இதற்குத் தயாரிப்பாளர்கள் சிலர் விமர்சனங்களையும் பதிவிட்டனர். தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் இது குறித்து கடுமையாக விமர்சித்து தனது கருத்தை பதிவிட்டிருந்தார். தயாரிப்பாளர் சங்கம் வரை இந்த பிரச்சினை சென்றது.

    தயாரிப்பாளர் தேனப்பன் இதுபற்றி கூறும்போது ‘‘எனக்கு இப்படியொரு மீம்சை பார்த்தவுடன் மிகவும் கோபம் வந்தது. ஏனென்றால், திரையில் பி.சி.ஸ்ரீராமுக்கு பிறகு, வியந்து ரசிக்கும் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன். அவர் இப்படியொரு மீம்சை வெளியிட்டாரா என்று ஆதங்கப்பட்டேன்.

    அவர், அதிகமாக மணிரத்னம் படங்களில் வேலை பார்த்திருக்கிறார். லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ் படங்களிலும் வேலை பார்த்திருக்கிறார். தெலுங்கு, இந்தி படங்களிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அவர் எந்த மொழியைச் சேர்ந்த தயாரிப்பாளரை குறிப்பிடுகிறார் என்ற சந்தேகம் இருந்தது.

    யாரைச் சொல்லியிருந்தாலும் தயாரிப்பாளரை சொல்லி இருக்கிறாரே என்று எண்ணி வருத்தப்பட்டேன். இதைப் பற்றி மற்றவர்களிடம் கேட்பதைவிட சந்தோஷ் சிவனிடமே கேட்டுவிடலாம் என்று அவரிடம் பேசினேன். ‘’நான் எந்தப் போஸ்டையும் போடவில்லை. ரீ ட்விட் மட்டுமே செய்தேன். என்ன வென்று தெரியவில்லை. நிறைய நண்பர்கள் போன் செய்தார்கள். உடனே நீக்கிவிடுகிறேன்’’என்று சொன்னார். அவருடைய பதில் என்னை ஆறுதல் படுத்தியது’’ என்று தெரிவித்தார்.



    ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் நேற்று தனது சர்ச்சைக்குரிய ட்விட்டை நீக்கி உள்ளார். தனது ட்விட்டை நீக்கிய அவர், ‘‘நல்ல தயாரிப்பாளர்கள் பலருக்கு அந்தக் கருத்து ஆட்சேபனை தெரிவிக்கும் விதத்தில் இருந்ததால் அந்த டுவிட்டை நீக்கிவிட்டேன். நான் முன்பு தெரிவித்த கருத்து யாரையும் குறிப்பிட்டு வெளியிடவில்லை” என்று தெரிவித்துள்ளார். #SanthoshSivan #Producers

    ×