search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Appreciation ceremony"

    • வருகிற 11-ந் தேதி நடக்கிறது
    • ஐயப்ப பக்தர்கள் 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்

    ராணிப்பேட்டை:

    சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் வேலூர் மண்டலத்தில் ஹரிவராசனம் நூற்றாண்டு விழா மற்றும் குரு வந்தனம் அழைப்பு நிகழ்ச்சி வருகிற ஜூன் 11-ந்தேதி ரத்தினகிரி அடுத்த அரப்பாக்கத்தில் உள்ள ரமணி சங்கர் மஹாலில் நடைபெறகிறது.

    இந்த நிகழ்ச்சியில் வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகள் சேவா சமாஜத்தின் நிர்வாகிகள், குருமார்கள், ஐயப்ப பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு மற்றும் மாநில நிர்வாகிகள், குருமார்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாநகராட்சி மேயர், ஹரிவராசனம் நூற்றாண்டு விழா குழு தேசிய கமிட்டி நிர்வாகிகள், சபரிமலை ஐயப்ப சேவா சமாஜ தேசிய பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஐயப்ப பக்தர்கள் என 5 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். அவர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற உள்ளது.

    இந்த தகவலை சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வட தமிழ்நாட்டின் மாநில தலைவரும் சிப்காட் ஸ்ரீ நவசபரி ஐயப்பன் கோவில் குருசாமியுமான ஜெயச்சந்திரன் ெதரிவித்துள்ளார்.

    • சேலியமேடு அரசு நடுநிலைப் பள்ளியின் 4 வகுப்பறைகளுக்கு கரும் பலகைகள் வழங்கப்பட்டது.
    • பக்கிரிசாமி, பழனிசாமி, ஜீவரத்தினம் ஆதிநாராய ணன், லட்சுமி, ரமணி, பத்மா, சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    சேலியமேடு கவிஞரேறு வாணிதாசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு 1977-ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் குமரவேலு தலைமையில் பள்ளி அளவில் 425 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாணவி ரோஷினிக்கு ரூ.5 ஆயிரமும் , 410 மதிப்பெண் பெற்று 2-ம் இடம் பிடித்த மாணவி அபிநயாவுக்கு ரூ.3 ஆயிரமும், 400 மதிப்பெண் பெற்று 3-வது இடம் பிடித்த மாணவி அனுப்பிரியாவுக்கு ரூ.2 ஆயிரமும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் சேலியமேடு அரசு நடுநிலைப் பள்ளியின் 4 வகுப்பறைகளுக்கு கரும் பலகைகள் வழங்கப்பட்டது.

    இதில் தலைமை ஆசிரியர் மணிவண்ணன், பிரான்ஸ் கண்ணபிரான், நிர்வாகிகள் பாலசுந்தரம், தட்சிணா மூர்த்தி, அய்யனார், கனகராசு, புவனேஸ்வரன், தமிழ்வளவன் சுப்பிரமணி, விஸ்வநாதன், முரளி, கிருஷ்ணமூர்த்தி, நாகமுத்து, பக்கிரிசாமி, பழனிசாமி, ஜீவரத்தினம் ஆதிநாராய ணன், லட்சுமி, ரமணி, பத்மா, சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி மனோ ஸ்ரீக்கு ரொக்கப்பரிசுவழங்கினார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு அரசின் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு, மாநில அளவில் முதலிடம் பிடித்த நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, ஆலங்குளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் செல்லத்துரை, வடக்கு ஒன்றியச் செயலாளர் அன்பழகன், நெட்டூர் ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியர் சங்கர் வரவேற்றார்.


    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலந்துகொண்டு, கலைத் திருவிழாவில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் மற்றும் பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளித்து, வாழ்த்திப் பேசினார். மேலும், ஈட்டி எறிதல் போட்டியில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி மனோ ஸ்ரீக்கு ரொக்கப் பரிசும் வழங்கினார்.

    விழாவின் சிறப்பு அம்சமாக, மாநில அளவிலான கலைத் திருவிழாவில் முதலிடம் பெற்ற இளங்குமரன் தலைமையிலான மாணவர்கள் அசோக்குமார், மகராஜா, சமேஷ் ஸ்ரீராம், ஞானபிரகாஷ் ஆகியோரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில், தொழிலதிபர்கள் இசக்கிதுரை, மணிகண்டன், தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சேக்முகமது, ஊராட்சி மன்றத் தலைவர்கள் சுப்பையாபுரம் முத்துலெட்சுமி, அய்யனார்குளம் நீதிராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன், நெட்டூர் ஊராட்சி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், பேச்சித்துரை, கிளைச் செயலாளர் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்தையா, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அருணாசலம், மேலாண்மைக் குழு கல்வி ஆர்வலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சிகளை முதுகலை ஆசிரியர் ஷேக் அப்துல்காதர் தொகுத்து வழங்கினார். முதுகலை ஆசிரியர் பொன்னுச்செல்வி நன்றி கூறினார்.

    • மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது
    • போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பூவிதா மாநில அளவில் நான்காம் இடம் பெற்று கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றார்

    கரூர்:

    கரூரில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. போட்டியில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி பூவிதா மாநில அளவில் நான்காம் இடம் பெற்று கோப்பையும், பாராட்டுச் சான்றிதழும் பெற்றார். மாணவி தனனி 15வது இடம் பெற்றார். மேலும், ஹேமஸ்ரீ, திகழ், அஸ்வந்த், பத்ரிநாத், சர்வேஸ் ஆகியோர் தகுதி சான்று பெற்றனர்.

    தொடர்ந்து, பள்ளியில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது. இதில், மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளித்த ஓய்வுபெற்ற ஆசிரியர் வீரமலை, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டினர். விழாவில் தலைமை ஆசிரியர் சாகுல் அமீது உட்பட பலர் பங்கேற்றனர்.


    • பாளை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து.
    • பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    நெல்லை:

    பாளை போக்குவரத்து இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து. இவர் பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். போக்குவரத்து நெரிசல் நிறைந்த இடங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமித்து மக்கள் சிரமமின்றி செல்வதற்கு வழிவகை செய்துள்ளார்.

    மேலும் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகளை பாளையங்கோட்டையில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் நடத்தி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார். இவரது பணியை சோலைக்குள் நெல்லை அமைப்பினர் பொன்னாடை அணிவித்து, மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினர்.

    இதுகுறித்து சோலைக்குள் நெல்லை அமைப்பின் தலைவர் நாகராஜன் கூறும் போது,

    போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து பதவி ஏற்ற பிறகு பாளையங்கோட்டையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்தார். போக்குவரத்து காவலர்கள் இல்லாத போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தை சீர் செய்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தான் பணிபுரியும் ஒவ்வொரு இடத்திலும் முடிந்தவரை மரங்களை நட்டு அந்த இடத்தை பசுமையாக மாற்றியவர். ஊனமுற்றவர்களை எங்கு கண்டாலும் அவர்களுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்பவர். இவரை சோலைக்குள் நெல்லை அமைப்பின் சார்பில் பாராட்டுகிறோம் என்றார். நிகழ்ச்சியில் சோலைக்குள் நெல்லை அமைப்பை சார்ந்த மீனாட்சி சுந்தரம், விநாயகம், செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.
    • மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட வழங்கினார்‌.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சௌராஷ்டிரா மேல ராஜவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். முன்னாள் சௌராஷ்டிர சபை தலைவர்கள் சுப்பராமன், ராமச்சந்திரன், கோவிந்தராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட பல்வேறு வகையான பொருட்களை வழங்கி பாராட்டினார் ‌‌.

    இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூய்மை பணவர்களுக்கான உதவிப் பொருட்கள் அனைத்தையும் மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தனது சொந்த நிதியில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ரூ.1300 கோடி பட்ஜெட் செலவில் திறன் மேம்பாடு கிடைத்தது என்றார்.

    மங்கலம் :

    கோவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பல்வேறு ஜவுளி தொழில் அமைப்புகள் ,சைமா,மற்றும் பல்வேறு வர்த்தக அமைப்பினர் சார்பில் ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் மேற்கொண்ட நடவடிக்கைககளுக்காக அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது .

    விழாவிற்கு தலைமை வகித்து பேசிய இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் ,அமைச்சர் ஸ்மிருதி இரானி ஜவுளித்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரின் முயற்சியால் ஜவுளித்துறையில் ரூ.1300 கோடி பட்ஜெட் செலவில் திறன் மேம்பாடு கிடைத்தது என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் செயலாளர் இரா.வேலுச்சாமி, ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிரமணியன்,அமைப்புச்செயலாளர் பா. கந்தவேல், தலைமை ஆலோசகர்வி.டி.கருணாநிதி,தொழில்நுட்ப ஆலோசகர் ஆர். சிவலிங்கம், பல்லடம் விசைத்தறி சங்க துணைச் செயலாளர் பாலாஜி, கண்ணம்பாளையம் விசைத்தறி சங்க செயலாளர் செல்வகுமார்,மங்கலம் விசைத்தறி சங்க செயலாளர் பழனிச்சாமி, மங்கலம் விசைத்தறி சங்க துணைத்தலைவர் சுல்தான்பேட்டை ஆர். கோபால் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டனர். 

    • சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா பாளை புதுக்குளத்தில் நடைபெற்றது
    • புதுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு அமைச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்ற 2-வது மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற வர்களுக்கான பாராட்டு விழா பாளை புதுக்குளத்தில் நடைபெற்றது.

    சிலம்பம் பள்ளியின் தலைவர் ஜோசப்குமார் வரவேற்றார். புதுக்குளம் ஊராட்சிமன்ற தலைவர் முத்துக்குட்டி பாண்டியன் தலைமை தாங்கினார். ஊராட்சிமன்ற துணைத் தலைவி அந்தோணியம்மாள் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நெல்லை அமைச்சூர் சிலம்பம் சங்கம் பொருளாளர் காணி, மின்சார வாரியத்தின் இளநிலை பொறியாளர் விஜயநாராயணம், ஊசிகாட்டான் ரூபன், இந்திரன் சிலம்பம் பள்ளி செயலாளர் சிவக்குமார், வேந்தன் நெல்மணி, செயலாளர்களான சின்னத்துரை சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முடிவில் செயலாளர் ஜென்சி நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை பதிவை சிலம்பம் பள்ளியின் பொருளாளர் சாமுவேல், பானுமதி, டேனியல், மரிய கோல்டா சிறப்பாக செய்திருந்தனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட கபடி அணி வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
    • மாநில அளவிலான ஆண்களுக்கான 48-வது ஜூனியர் கபடி போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்தது.

    ராமநாதபுரம்

    மாநில அளவிலான ஆண்களுக்கான 48-வது ஜூனியர் கபடி போட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மாதம் நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட அணி 3-ம் பரிசை வென்றது. இந்த அணி வீரர்களுக்கு பாராட்டு விழா கராத்தே பழனிச்சாமி தலைமையில் நடந்தது.

    மருதம் விளையாட்டு குழு தலைவர் ஜெயகணேஷ், அ.தி.மு.க. மாவட்ட மாணவரணி செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கபடி அணி வீரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டு சான்றிதழ், பதக்கம், கேடயம் மற்றும் கபடி விளையாட்டு உபகரணங்கள், 5 லட்சம் மதிப்பில் காப்பீடு செய்யப்பட ஆவணம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை சாண்டா ஸ்போர்ட்ஸ் கிளப் அருண்குமார், பெரியார் நகர் பசுபதி ஆகியோர் செய்திருந்தனர். தேசிய கபடி நடுவர் குழந்தை, தேசிய கபடி வீரர்கள் மனோஜ், செல்வின், வேல் அழகன், துரை.ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தேசிய அளவில் நடைபெற உள்ள கபடி போட்டியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வீரர்களை அனுப்புவதற்காக சிறப்பு பயிற்சி விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் கல்லணைக்கால்வாய் பாசனதார் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மறைந்த மூத்த நிர்வாகிகளுக்கு நினைவேந்தல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

    நாகுடி தனியார் மண்டபத்தில் சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்க நிர்வாகிகளாக சிறப்பாக செயலாற்றிய, மறைந்த சங்க செயலாளர் பழசுப்பையா, ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், துணை தலைவர் ஆத்மநாதன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு நினைவு கேடயம் மற்றும் தென்னங்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த 28 ஆயிரம் ஏக்கர் நில விவசாயிகளுக்கு உரிய பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், தனியார் கடைகளில் உரங்களின் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது, இதனை அரசு கவனத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி அரசு நிர்ணயித்த விலையிலேயே கூட்டுறவு சங்கம் மூலம் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும், 100 நாள் வேலை பணியாளர்களை, விவசாய காலங்களில், விவசாய பணிகளில் ஈ.டுபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் முகமதுஇக்பால், மாதவன், இளைய ஜமீன்தார் ஜெயேந்திரன், ஒருங்கிணைப்பாளர் பொன்கணேசன், கௌரவ தலைவர் கணேசன், ஆலோசகர் ராமசாமி, பொருளாளர் கோவிந்தராஜ், சட்ட ஆலோசகர் சிவசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • குளித்தலை நகராட்சியில் கடந்த ஓராண்டுகளாக மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி, சிறப்பாக பணியாற்றிய நகராட்சி ஆணையர் சுப்புராம் பணி நிறைவு பெரும் பிரிவு உபச்சார விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.
    • விழாவில் நகராட்சி தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா மற்றும் துணைத் தலைவர் கணேசன் நகராட்சி பொறியாளர் ராதா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்/

    கரூர் :

    குளித்தலை நகராட்சியில் கடந்த ஓராண்டுகளாக மக்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றி, சிறப்பாக பணியாற்றிய நகராட்சி ஆணையர் சுப்புராம் பணி நிறைவு பெரும் பிரிவு உபச்சார விழா நகராட்சி வளாகத்தில் நடைபெற்றது.

    விழாவில் குளித்தலை எம்எல்ஏ இரா.மாணிக்கம் கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி சிறப்பாக பணியாற்றியது குறித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்,

    விழாவில் நகராட்சி தலைவர் சகுந்தலா பல்லவி ராஜா மற்றும் துணைத் தலைவர் கணேசன் நகராட்சி பொறியாளர் ராதா ஆகியோர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்/

    இதில் நகர அவைத்தலைவர் வழக்கறிஞர் சாகுல்அமீது, நகர துணை செயலாளர் ,கே.எம்.செந்தில்குமார், நகர துணை செயலாளர் எம்.கே.வடிவேல், நகர்மன்ற முன்னாள் துணை தலைவர் ஜாபருல்லா, நகர்மன்ற உறுப்பினர்கள் பொன்னர், சரோஜா, இந்திரா, சையத்உசேன், சமீமா, சரவணன், ராணி, சாந்தி சுரேஷ், ஜெயந்தி, கே.எம்.எஸ்.ஆனந்தலெட்சுமி, சக்திவேல், மஞ்சு, கீதா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • எஸ் .ஆர் .ரங்கநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிறைவாக நூலகர் கணேசன் ஏற்புரையாற்றினார்.

    உடுமலை:

    உடுமலை கிளை நூலகம் எண் 2ல் நூலகராக பணியாற்றி இம்மாதம் ஓய்வு பெறும் நூலகர் வீ. கணேசனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. உடுமலை தேஜஸ் மகாலில் நடந்த பணி நிறைவு பாராட்டு விழாவிற்கு திருப்பூர் மாவட்ட நூலக அலுவலர் மாதேஸ்வரன் தலைமை வகித்து நூலகத் தந்தை எஸ் .ஆர் .ரங்கநாதன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில்உடுமலை கிளை நூலகம் எண் இரண்டின் நூலக வாசகர் வட்ட தலைவர் இளமுருகு வரவேற்று பேசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.முன்னாள் மாவட்ட நூலக அலுவலர்கள் மனோகரன், தண்டபாணி, நூலகர்கள் மாணிக்கம், முத்து மணி, திருஞான சம்பந்தம் ,வெங்கட்ராமன், ராதா ருக்மணி, சக்திவேல் ,சிவசக்தி காலனி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உடுமலை பகத்சிங் சிலம்பம் களரி அறக்கட்டளை ஆசான் வீரமணி ,பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் விஜயலட்சுமி மற்றும் நூலகர்கள் வாழ்த்தி பேசினர். திருப்பூர் மாவட்ட நூலக ஆணை குழு சார்பில் நூலகர் கணேசனுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்கத்தினர், ஓய்வூதிய சங்கத்தினர் ,உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம் ,அரிமா சங்கம் மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர், உடுமலை சாதனைப் பெண்கள் குழுவினர் வாழ்த்தி பேசினர்.

    நிறைவாக நூலகர் கணேசன் ஏற்புரையாற்றினார். இதில் உடுமலை ,பொள்ளாச்சி, கோவை ,திருப்பூர், தாராபுரம் ,காங்கேயம், மூலனூர் வட்ட நூலகர்கள் கலந்து கொண்டனர். உடுமலை கிளை நூலகம் எண் இரண்டில் நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார், ஆலோசகர் அய்யப்பன் ,கனரா வங்கி பணி நிறைவு மேலாளர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர் . முடிவில் நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார்.

    ×