என் மலர்
உள்ளூர் செய்திகள்

விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் பாராட்டு விழா
- விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் பாராட்டு விழா நடந்தது
- பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் கல்லணைக்கால்வாய் பாசனதார் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மறைந்த மூத்த நிர்வாகிகளுக்கு நினைவேந்தல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
நாகுடி தனியார் மண்டபத்தில் சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்க நிர்வாகிகளாக சிறப்பாக செயலாற்றிய, மறைந்த சங்க செயலாளர் பழசுப்பையா, ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம், துணை தலைவர் ஆத்மநாதன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு நினைவு கேடயம் மற்றும் தென்னங்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த 28 ஆயிரம் ஏக்கர் நில விவசாயிகளுக்கு உரிய பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், தனியார் கடைகளில் உரங்களின் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது, இதனை அரசு கவனத்தில் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி அரசு நிர்ணயித்த விலையிலேயே கூட்டுறவு சங்கம் மூலம் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும், 100 நாள் வேலை பணியாளர்களை, விவசாய காலங்களில், விவசாய பணிகளில் ஈ.டுபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் முகமதுஇக்பால், மாதவன், இளைய ஜமீன்தார் ஜெயேந்திரன், ஒருங்கிணைப்பாளர் பொன்கணேசன், கௌரவ தலைவர் கணேசன், ஆலோசகர் ராமசாமி, பொருளாளர் கோவிந்தராஜ், சட்ட ஆலோசகர் சிவசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






