search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "anitha radhakrishnan"

    • உடன்குடி துணைமின்நிலை யத்திலிருந்து மின்விநியோகம் தொடங்கும் போது வீடுகளுக்குத் தனியாகவும், விவசாய மின்மோட்டார்களுக்குத் தனியாகவும் மின்விநியோகம் செய்ய முடியும்.
    • மேலும் மின்சாரத்தை மலிவு விலையிலும் வழங்கமுடியும்.

    உடன்குடி:

    உடன்குடி தேரியூர் துணை மின்நிலைய வளாகத்தில் ரூ.4.22 கோடி மதிப்பில் கூடுதல் துணை மின் நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவிற்கு யூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கினார்.

    செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், மின்சார மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள், செயற்பொறியாளர் ரெமோனா, திருச்செந்தூர் செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன், உடன்குடி உதவி செயற்பொறியாளர் ராம்மோகன், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் சந்தைடியூர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ரூ.4.22கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்ட திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    மறு சீரமைக்கப்பட்ட மின் பகிர்மான துறைக்கான திட்டம் என்பது விவசாயம் தவிர்த்த ஏனைய மின் இணைப்புகளுக்கும், விவசாய பணிகளுக்கும் தடையற்ற மின்சாரத்தை தனித்தனி வழித்தடம் மூலம் ஏற்றத்தாழ்வுகள் இன்றி சீரான வகையில் வழங்குவதை உறுதிசெய்யும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது வீடுகளுக்கு 24மணி நேரமும் மின்சார விநியோகத்தை உறுதி செய்ய முடியும், அதே போல் விவசாயத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு மின்விநியோகம் தடையின்றி கிடைக்கும்.

    மேலும் மின்சாரத்தை மலிவு விலையிலும் வழங்கமுடியும். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் மின்பாதைகள் பிரிக்கப்பட்டு புதிய விநியோக மின்மாற்றிகளுடன் புயல், வெள்ளம் உள்ளிட்ட இயற்கை இடற்பாடுகளை தாங்கி நிற்கும் வகையில் புதிய மின்வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளது.

    இத்திட்டம் முழுமை அடைந்து உடன்குடி துணைமின்நிலை யத்திலிருந்து மின்விநியோகம் தொடங்கும் போது வீடுகளுக்குத் தனியாகவும், விவசாய மின்மோட்டார்களுக்குத் தனியாகவும் மின்விநியோகம் செய்ய முடியும்.

    மாவட்டத்திலேயே உடன்குடி துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் 11கேவி பரமன்குறிச்சி மின்பாதையில் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது செட்டியாபத்து, வாத்தியார்குடியிருப்பு தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, குருநாதபுரம், சீருடையார்புரம் கிராமங்களைச் சேர்ந்த 4300 பயனீட்டார்களும், 760 விவசாயிகளும் பயனடைவர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் நாசரேத் முத்துகிருஷ்ணன், ஆறுமுகநேரி ஜெயக்குமார், சாத்தான்குளம் ரவிந்திரகுமார், ஆறுமுகநேரி முத்துகணேசன், தூத்துக்குடி வேலாயுதம், உதவி பொறியாளர்கள் மகாலிங்கம், ராஜேஷ், வேலாயுதம், இம்மானுவேல், நிர்வாக அலுவலர் கலைக்கண்ணன், திருச்செந்துர் நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், ஆவின் சேர்மன் சுரேஷ், தி.மு.க. மாவட்ட மகளிரணி ஜெஸிபொன்ராணி,

    இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட துணைஅமைப்பாளர்கள் விவசாயஅணி சக்திவேல், வர்த்தகஅணி சந்தையடியூர் ரவிராஜா, மாணவரணி அலாவூதீன், மாவட்ட பிரதிநிதிகள் ராஜாபிரபு, மகேஸ்வரன், ஜெயபிரகாஷ், ஹீபர், தாண்டவன்காடு தன்ராஜ், பேரூராட்சி நியமனக்குழு ஜான்பாஸ்கர், கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, பேரூராட்சி துணைச்செயலாளர் தங்கம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், நகர இளைஞரணி செயலாளர் அஜய், ஒன்றிய பிரதிநிதி ஷேக்முகமது, முருகன், ராஜேஸ்வரி, கோமதி நாயகம், தினகர், எள்ளுவிளை கிளை செயலாளர் மோகன், ஒன்றிய தகவல்தொழில்நுட்பஅணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
    • அனைத்து சாதி மதத்தினரை அரவணைத்து அமைதியான தமிழகம் ஆக மாற்றிஆட்சி செய்து வருகிறார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கோட்டாளம் ஏற்பாட்டில் ஏரல் பேரூராட்சி 4 -வது வார்டு அ.ம.மு.க. பெரியசாமி என்ற ஆனந்த் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் விக்னேஷ், சுரேஷ், சுரேஷ் குமார், சதீஷ், மணிகண்டன், மாரியப்பன், அற்புதராஜ் உள்பட பலர் அக்கட்சியில்இருந்து விலகி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை சந்தித்து பொன்னாடை அணிவித்து தங்களை தி.மு.க.வில் இணைத்துக்கொண்டனர்.

    அப்போது அமைச்சர் கூறியதாவது:-

    தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்தி.மு.க. ஆட்சி மிகவும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. எந்த குறைபாடும் சொல்ல முடியாத அளவுக்கு அனைத்து சாதி மதத்தினரை அரவணைத்து அமைதியான தமிழகம் ஆக மாற்றிஆட்சி செய்து வருகிறார்.இவரது திறமையை பார்த்து மாற்று கட்சியினர் கூட்டம் கூட்டமாக தி.மு.க.வில் இணைந்து கொண்டே இருக்கின்றனர்.

    இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என்ற நிலை உருவாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அப்போது தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மணிவண்ணன், ஊராட்சி துணைத்தலைவர் ஜான் உட்பட தி.மு.க.வினர் பலர் உடனிருந்தனர்.


    திமுக தலைவர் முக ஸ்டாலின் 25-ந் தேதி தூத்துக்குடி வருகை தருகிறார். ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிகிறார். #mkstalin

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ் ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊராட்சிகளுக்கு நேரடியாக சென்று ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி மக்களிடம் கருத்துக்களை, கோரிக்கைகளை கேட்டறிந்து வருகிறார்.

    அதே போல் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி வருகிறார். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி தெற்கு மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தூத்துக்குடி ஒன்றியம், கூட்டுடன்காடு ஊராட்சியில் வருகிற 25-ந்தேதி காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ள ஊராட்சி சபை கூட்டத்தில் பங்கேற்று கிராம மக்களிடம் கருத்துக்களை கேட்டறிகிறார்.

    அன்று காலை 10 மணிக்கு தூத்துக்குடி-நெல்லை நான்கு வழிச்சாலை, புதுக்கோட்டை அருகில் உள்ல மங்களகிரி விலக்கில் நடைபெற உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்துகிறார். இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் மிக அவசியம் பங்கேற்க வேண்டும்.

    முன்னதாக காலை 8 மணிக்கு தூத்துக்குடி வருகை தரும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பாக வரவேற்பு வழங்கப்பட உள்ளது. இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் சார்பு அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #mkstalin

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ஸ்பிக் நகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடக்கிறது. #anitharadhakrishnanmla
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு ஸ்பிக்நகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.அருணாசலம் தலைமை தாங்குகிறார். 

    கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.  கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #anitharadhakrishnanmla
    உடன்குடி அருகே உள்ள மணப்பாட்டில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் 2 புதிய ரேசன் கடைகளில் அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள மணப்பாடு மீனவ கிராமத்தில் தற்காலிகமாக செயல்படும் 2 ரேசன் கடைகளும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதை புதுபித்து கட்ட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ண எம்.எல்.ஏ. தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சத்தில் ஊர் நுழைவு பகுதியில் ஒரு ரேசன் கடையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் ரூ. 10 லட்சத்தில் கடற்கரை சாலையில் ஒரு ரேசன் கடையும் கட்ட நிதி ஒதுக்கினார். இதற்கான பணிகள் தொடங்கி பணி முடியும் தருவாயில் உள்ளது.

    இதை அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள மீனவர்கள் இந்த கடைகளை திறப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழைய ரேசன் கடை கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளது என தெரிவித்தனர். எம்.எல்.ஏ. செல்போன் மூலம் உடனடியாக உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு 30 நாட்களில் இந்த புதிய கட்டிடத்தில் ரேசன் கடைகள் செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

    அவருடன் மாநில தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலசிங், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகாவிஷ்ணு, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ஸ்ரீதர் ரொட்ரிக்கோ, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரவிராஜா,

    மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஷேக்முகமது, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மைக்கேல், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மெராஜ், நகர இளைஞர் அணி அமைப்பாளர் அஜய், திரவியம், குமார், செல்வம், அந்தோணி,தினேஷ், ஸ்டாலின், ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
    பாஜக ,நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த 22 பேர் அக்கட்சியில் இருந்து விலகி அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
    திருச்செந்தூர்:

     ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தி.மு.க. துணைச் செயலாளர் வாழவல்லான் மகாராஜன் ஏற்பாட்டில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி செந்நெல்மாநகர், கொற்கை, மாரமங்கலம், மொட்டத்தான்விளை ஆகிய பகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா, நாம் தமிழர், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த 22 பேர் அக்கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி தெற்கு மாவட்ட  பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். 

    புதிதாக இணைந்தவர்களை அனிதா ராதா கிருஷ்ணன் எம்.எல் .ஏ .சால்வை அணிவித்து வரவேற்றார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட வக்கீல்அணிதுணை அமைப்பாளர் கிருபாகரன், முன்னாள் இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் சுரேஷ், கந்தன், பரமன்குறிச்சி இளங்கோ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
    ×