search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol"

    • மது குடிக்க பணம் தராதவர் மீது தாக்குதல் நடந்தது.
    • தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை

    பழங்காநத்தம், பசும்பொன் நகர், சுருளி ஆண்டி தெருவை சேர்ந்தவர் குரு பரதன் (வயது 32). இவரும் தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரும் (36) நண்பர்கள்.நேற்று மதியம் குருபரதன் நண்பர்களுடன் பழங்காநத்தம், ராமர் கோவில் ஊரணிக்கு சென்றார். அப்போது அருண்குமார்,வேல்முருகன் ஆகியோர் மது குடிக்க பணம் கேட்டனர். இதற்கு குரு பரதன் தர மறுத்தார். ஆத்திரம் அடைந்த கும்பல் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியது. இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டல்காரன்பட்டியை சேர்ந்த அருண்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய வேல்முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    கோரிப்பாளையம் ஜம்புரோபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் உமேஷ் (31). சம்பவத்தன்று இரவு இவர் 'நல்உள்ளங்கள் கூட்டமைப்பு" சார்பில், கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதற்கு அதே பகுதியில் வசிக்கும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை உமேஷ் தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த கும்பல் உமேசை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியது. இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனாஸ், சையது அப்துல் என்ற தில்ரூபா, சம்சுதீன், சோட்டு, ஏழு மண்டை என்ற முகமது, காலித் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ராஜா (வயது 57) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்தனர்,

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி தலைமையிலான போலீசார் புதுப்பாலப்பட்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு அதே பகுதியை சேர்ந்த ராஜா (வயது 57) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    • அஜித்( 22) என்பவர் மது குடிக்க பணம் கேட்டு ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்
    • உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.

    உடுமலை:

    உடுமலைஅருகே உள்ள சின்ன பாப்பனூத்து கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 49 ).இவர் ஐஸ்வர்யா நகர் சாலையில் நின்ற போது ஏரி பாளையத்தைச் சேர்ந்த அஜித்( 22) என்பவர் மது குடிக்க பணம் கேட்டு ரவிச்சந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது பற்றிய புகாரின் பேரில் உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.

    • மனநல சிகிச்சைக்காகவும் மறு வாழ்விற்காகவும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
    • நண்பர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள முகவரி இல்லா இளைஞரையும் மீட்டெடுத்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோரின் உத்தரவின்படியும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படியும், நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தரராஜன் தலைமையில் ஆன மீட்பு குழுவினர் விஜயா, சக்திபிரியா, சரவணன், பாலா ஆகியோர் அனைவருக்கும் உரிய முன்னறிவிப்பு கொடுத்த பிறகு நேரில் சென்று நீண்ட நாட்களாக புகையிலை, மது பழக்கத்தினால் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிவதுடன் பொதுமக்க ளுக்கும் தொந்தரவும் இடையூறும் செய்து கொண்டிருந்த மூன்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ள நபர்களை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து மீட்டெடுத்து நம்பிக்கை மனநலக் காப்பகத்தில் மனநல சிகிச்சைக்காகவும் மறு வாழ்விற்காகவும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.முதலில் என்கன் ஊராட்சிக்கு சென்று மது அருந்தி மனநலம் பாதிக்கப்பட்ட குமரவேல் என்பவரை குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார், ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர், கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீட்டனர்.

    இதேப்போல் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சின்னதுரை முன்னிலையில் திருவாரூர் பைபாஸ் ரோட்டில் முகவரி தெரியாத மனநல பாதிக்கப்பட்டவரையும், திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் சூர்யா ரசிகர் மன்ற தலைவர் குணா மற்றும் நண்பர்கள் உதவியுடன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ள முகவரி இல்லா இளைஞரையும் மீட்டெடுத்தனர்.இப்பணியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் இன்ஸ்பெக்டர் மணிமேகலையை சந்தித்து உரிய ஆவணம் பெற்று மூன்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களையும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மது விற்பனை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் ஓட்கா வகைகள் அடங்கும்.
    • கடந்த 10 ஆண்களில் ஒரு தட்டையான வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிகரெட் விற்பனையில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது.

    மும்பை:

    இந்தியாவில் சில்லரை பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 6.52 சதவீதமாக உயர்ந்துள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. உணவு பொருட்களின் விலை உயர்வே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இது ஒருபுறம் இருக்க வேகமாக விற்பனையாகும் நுகர்வு பொருட்கள் சந்தையில் கடந்த ஆண்டு சிகரெட் மற்றும் மது விற்பனை அதிகரித்திருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது.

    சமீபத்திய ஆராய்ச்சி அறிக்கைகள் மற்றும் தொழில்துறை மதிப்பீடுகளின்படி டிசம்பர் 2022 வரை கடந்த 4 காலாண்டுகளில் சிகரெட் விற்பனை அளவு தொடர்ந்து 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதே போல மது விற்பனையும் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் மற்றும் ஓட்கா வகைகள் அடங்கும்.

    கடந்த 10 ஆண்களில் ஒரு தட்டையான வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிகரெட் விற்பனையில் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் சுமார் 5 சதவீதமாக இருந்தது.

    இதுகுறித்து மதுபான விற்பனை நிறுவனமான டியாஜியோவுக்கு சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸின் நிர்வாக இயக்குனர் ஹினா நாகராஜன் கூறுகையில், பணவீக்கம் மற்றும் பெரிய அளவிலான மேக்ரோ பொருளாதார பிரச்சினை சற்று இழுபறியாக இருக்கலாம். ஆனால் நுகர்வோர் தேவை தொடர்ந்து வழுவாக இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

    அதிக வரி விதிப்பு, சட்ட விரோத மற்றும் கடத்தப்பட்ட சிகரெட்டுகள் மீது கடும் நடவடிக்கை ஆகியவை சிகரெட் சந்தையில் அதன் விற்பனை அளவை அதிகரிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    • தனது வீட்டின் முன்பு திருட்டுதனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.
    • தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணை கைது சென்றனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கணேசன்.

    இவரது மனைவி அம்சவள்ளி (வயது 57). இவர் தனது வீட்டின் முன்பு திருட்டு தனமாக மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்து தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அங்கு மது பாட்டில்கள் விற்று கொண்டிருந்த அம்சவள்ளியை கைது செய்தனர்.

    • மது பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கடம்பூர், மலையம்பாளையம், பெருந்துறை போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 33 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • மது, கஞ்சா போன்ற தீமைகள் பற்றியும் மூளை செயல் திறன் குறைவு.
    • விழிப்புணர்வு பேரணியாக சென்று ஒலி பெருக்கி மூலம் தெரிவித்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே சோழபுரத்தில் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் போதை ஒழிப்பு பிரசாரம் நடைபெற்றது.

    மேலப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர்கள் மற்றும் கீழப்பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணி சோழபுரம் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மனித குலத்தை சீரழிக்கும் போதை பொருட்கள் மது, கஞ்சா போன்ற தீமைகள் பற்றியும் மூளை செயல் திறன் குறைவு, சுவாச குறைபாடு, கண் சிவத்தல், பார்வை குறைபாடுகளும் இதயத் துடிப்பு அதிகரித்து மரணம் விளைவுகளை ஏற்படுத்தும் என விழிப்புணர்வு பேரணியாக சென்று ஒலி பெருக்கி மூலம் தெரிவித்தனர்.

    முன்னதாக கூட்டமைப்பின் சார்பில் சோழபுரம் காவல் நிலையத்தில் மது போதை இல்லாத சோழபுரம் உருவாக கோரிக்கை மனு அளித்தனர்.பேரணியில் சோழபுரம் இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு நிர்வாகிகள் சுமையா, சாதிக், பரக்கத்அலி, ரியாஜ், அர்ஷ் முகமது, தாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாவூர்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை பாவூர்சத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
    • திருமலாபுரம் மேலதெருவை சேர்ந்த செல்லத்துரை திரவியநகர் கோழிப்பண்ணை பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 82 மது பாட்டில்களை பாவூர்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேரில் சென்று பறிமுதல் செய்தனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை பாவூர்சத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகே திருமலாபுரம் மேலதெருவை சேர்ந்த செல்லத்துரை (வயது 70) இவர் திரவியநகர் கோழிப்பண்ணை பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 82 மது பாட்டில்களை பாவூர்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேரில் சென்று பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பாவூர்சத்திரம் கே.டி.சி. நகரில் போலீசார் வாகன சோதனை செய்ததில் சடையப்பபுரம், மேலத்தெரு ராமையா மகன் கோபாலகிருஷ்ணன் என்ற கண்ணன் (42) என்பவரும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்ட 96 குவாட்டர் பாட்டில்களையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • பெரம்பலூரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
    • கூடுதல் விலைக்கு விற்றாலும் மது பாட்டில்கள் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து மது பிரியர்கள் வாங்கி குடித்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுக்கூடங்களும் மற்றும் எப்.எல்.3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் அனைத்தும் குடியரசு தினத்தையொட்டி நேற்று ஒரு நாள் மட்டும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டிருந்தன. ஆனாலும் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை படுஜோராக நடந்தது.

    போலீசார் சட்ட விரோத மது விற்பனைக்கு பெயரளவுக்கு வழக்குகளை பதிவு செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். நேற்று முன்தினமே டாஸ்மாக் கடைகளில் சிலர் அளவுக்கு அதிகமாக மது பாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து நேற்று அவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தனர். கூடுதல் விலைக்கு விற்றாலும் மது பாட்டில்கள் கிடைக்கும் இடத்தை தேடி அலைந்து கண்டுபிடித்து மது பிரியர்கள் வாங்கி குடித்தனர்.

    குறிப்பாக பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் சீகூரில் சட்டவிரோதமாக மதுவிற்பனை அதிகளவில் நடைபெற்றதாகவும், எனவே இங்குள்ள டாஸ்மாக் கடையை இழுத்து மூடும் போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் அமைப்பு சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற போவதாகவும் கூறப்படுகிறது.

    • கடந்த 2 நாட்களாக போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
    • அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட 35 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனையில் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சரவணன் காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

    இதனைத்தொடர்ந்து கடந்த 2 நாட்களாக போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து 581 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறிய நிலை உள்ளது.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. பாளையம் ஏரிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை உள்ளதால், அங்கு மது பாட்டில்கள் வாங்கி வரும் மது பிரியர்கள், இந்த ரேஷன் கடையில் பட்டப்பகலில் அமர்ந்து மது அருந்துகின்றனர். சிலர் மது போதையில் தகாத வார்த்தைகள் பேசிக்கொண்டு, அந்த வழியாக செல்பவர்களிடம் வேண்டுமென்றே தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாக உள்ளது.

    குறிப்பாக விடுமுறை நாட்களில் மது அருந்தும் கூடாரமாக ரேஷன் கடை மாறி உள்ளது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியவில்லை. மது போதையில் சிலர் ரேஷன் கடையில் வாந்தி எடுத்து விடுகின்றனர். இதனால் மறுநாள் கடை திறக்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மது பிரியர்களில் சிலர் தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளில் அமர்ந்தும் மது அருந்துகின்றனர். இதனால் பயணிகள் நிழற்குடைக்கு செல்ல அச்சமடைந்து சாலையில் நின்று காத்திருந்து பஸ் ஏறி செல்கின்றனர். பெண் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாதது போல் சென்று விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    ×