பாவூர்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது

பாவூர்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை பாவூர்சத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருமலாபுரம் மேலதெருவை சேர்ந்த செல்லத்துரை திரவியநகர் கோழிப்பண்ணை பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 82 மது பாட்டில்களை பாவூர்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேரில் சென்று பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவரையும்,  பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களையும் படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்டவரையும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களையும் படத்தில் காணலாம்.
Published on

தென்காசி:

பாவூர்சத்திரம் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 2 பேரை பாவூர்சத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாவூர்சத்திரம் அருகே திருமலாபுரம் மேலதெருவை சேர்ந்த செல்லத்துரை (வயது 70) இவர் திரவியநகர் கோழிப்பண்ணை பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 82 மது பாட்டில்களை பாவூர்சத்திரம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் நேரில் சென்று பறிமுதல் செய்தனர்.

இதேபோல் பாவூர்சத்திரம் கே.டி.சி. நகரில் போலீசார் வாகன சோதனை செய்ததில் சடையப்பபுரம், மேலத்தெரு ராமையா மகன் கோபாலகிருஷ்ணன் என்ற கண்ணன் (42) என்பவரும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்ட 96 குவாட்டர் பாட்டில்களையும், பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com