search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Air Force"

    • விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு கடந்த 24-ந்தேதி தொடங்கியது.
    • வருகிற 5-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    புதுடெல்லி:

    முப்படைகளில் 4 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறையும் வெடித்தன.

    ஆனாலும் இந்த திட்டத்தை திரும்பப்பெற முடியாது என அரசு உறுதியாக தெரிவித்தது. அதேநேரம் இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை முப்படைகளும் தொடங்கி உள்ளன. குறிப்பாக விமானப்படையில் பணி நியமனத்துக்கான முன்பதிவு நடவடிக்கை கடந்த 24-ந்தேதி தொடங்கியது.

    இதைத்தொடர்ந்து ஏராளமான இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வருகின்றனர். அந்தவகையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக விமானப்படை தெரிவித்து உள்ளது.

    வருகிற 5-ந்தேதி வரை முன்பதிவுக்கான கால அவகாசம் இருப்பதால், மேலும் அதிக இளைஞர்கள் விண்ணப்பிப்பார்கள் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    • விமானப்படைக்கான ஆள்தேர்வு பணி கடந்த 24-ந் தேதி தொடங்கியது.
    • விண்ணப்பம் செய்ய ஜூலை 5-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

    புதுடெல்லி

    முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. வடமாநிலங்களில் போராட்டம் வெடித்தபோதிலும், திட்டம் வாபஸ் பெறப்படாது என்று கூறிவிட்டது. ராணுவம், விமானப்படை, கடற்படை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆள்தேர்வு நடைபெறுகிறது.

    விமானப்படைக்கான ஆள்தேர்வு பணி கடந்த 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம், அன்று காலை 10 மணி முதல் செயல்பட தொடங்கியது.

    நேற்று காலை 10.30 மணி நிலவரப்படி, 94 ஆயிரத்து 281 பேர் விண்ணப்பித்துள்ளதாக ராணுவ அமைச்சக செய்தித்தொடர்பாளர் பாரத் பூஷண் பாபு தெரிவித்தார். விண்ணப்பம் செய்ய ஜூலை 5-ந் தேதி கடைசிநாள் ஆகும்.

    • விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5-ந்தேதி கடைசி நாளாகும்.
    • ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும்.

    புதுடெல்லி:

    முப்படையில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் 'அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு கடந்த 14-ந்தேதி அறிமுகம் செய்தது.

    இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களை சேர்க்கும் பணிகளில் முப்படைகளும் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் கடந்த 24-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களில் மொத்தம் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த தகவல் இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 5-ந்தேதி கடைசி நாளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

    • வேறு தொழில் தெரியாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கும்.
    • முடிந்த அளவு விவசாய நிலங்களை தவிர்த்து வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் பருவாய் கிராமத்தில் 86.38 ஏக்கர் நிலம் விமானப்படை தள விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளது.பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு தொழில் செய்துவருகிறோம். விவசாயத்தை விட்டால் வேறு தொழில் தெரியாது என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கும். சூலூர் விமானப்படை தளத்தை ஒட்டி, ஏறத்தாழ 400 ஏக்கர் தரிசு நிலம் கேட்பாரற்று நீண்ட காலமாக கிடைக்கிறது.

    மொத்தம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும், 86.38 ஏக்கருக்காக விவசாய நிலங்களை எடுக்காமல், பயன்பாடின்றி கிடக்கும் தரிசு நிலத்தை எடுக்க தமிழக அரசின் வருவாய்த்துறை முன்வர வேண்டும் எனவிவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இக்கோரிக்கையை எழுத்துப்பூர்வமாக முதல்வர், மத்திய அமைச்சர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், விவசாயிகளே வரைபடம் ஒன்றை தயாரித்துள்ளனர். அதில் கையகப்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள 86.38 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் பயன்பாடு இன்றி கிடக்கும் தரிசு நிலம் ஆகியவற்றை இரு வேறு வண்ணங்களில் காட்டும்படியாக உள்ளது. முடிந்த அளவு விவசாய நிலங்களை தவிர்த்துவாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. #GSLVF11 #GSAT7A #ISRO
    ஸ்ரீஹரிகோட்ட்டா:
     
    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.

    இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு செலுத்தியது.


    3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்11 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இறுதி கட்டபணியான ‘கவுண்ட் டவுன்’ நேற்று தொடங்கியது.

    49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட்டின் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்பப்படும் 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைக்கோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வர இருக்கிறது. விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.  #GSLVF11 #GSAT7A #ISRO
    அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடல் டெக்சாஸ் நகரில் முழு அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #RIPBush #Bushlaidtorest
    வாஷிங்டன்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை அந்நாட்டின் அதிபராக பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

    நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை  தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்தார்.

    பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த சிறப்பு விமானத்துக்கு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று பெயர்.  புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டதால் இவ்விமானத்துக்கு ‘41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) என தற்காலிக பெயர் சூட்டப்பட்டது.

    அந்த விமானத்தில் புஷ் உடல் வாஷிங்டன் நகரை வந்தடைந்தது. விமான நிலையத்தில் முப்படை அணிவகுப்புடன் உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. அங்கிருந்து கேபிடோல் ஹில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசு மாளிகைக்கு புஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.


    இங்குள்ள வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபரின் உடலுக்கு தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலினியா டிரம்ப், முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் டபிள்யூ புஷ், பராக் ஒபாமா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    மேலும், முன்னாள் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் புஷ் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    இங்குள்ள தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் அரசின் சார்பில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

    பின்னர், வாஷிங்டனில் இருந்து நேற்று டெக்சாஸ் மாநிலத்துக்கு புஷ் உடல் கொண்டு செல்லப்பட்டது.

    டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்ட்டன் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் லேசாக பெய்த மழைக்கிடையில் அவரது  மனைவி பார்பரா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் புஷ் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. #RIPBush #Bushlaidtorest 
    அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்த முன்னாள் அதிபர் ஹெச்.டபிள்யூ. புஷ்(94) உடலை வாஷிங்டன் நகருக்கு கொண்டு வர அதிபரின் சிறப்பு விமானத்தை டிரம்ப் அனுப்பியுள்ளார். #GeorgeHWBush #SpecialAirMission41
    வாஷிங்டன்:

    பராக் ஒபாமாவுக்கு முன்னர் அமெரிக்காவை ஆண்ட முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் தந்தையும் அந்நாட்டின் மற்றொரு அதிபருமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ்) அந்நாட்டின் அதிபராக கடந்த 1989 முதல் 1993-ம் ஆண்டுவரை பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்னதாக 1981 முதல் 1989 வரை 8 ஆண்டுகாலம் துணை அதிபராகவும் இவர் இருந்துள்ளார்.

    இவரது மகனான  ஜார்ஜ் டபிள்யூ. புஷ், அந்நாட்டின் அதிபராக 2001 முதல் 2008-ம் ஆண்டுவரை இருமுறை அந்நாட்டின் அதிபராக பதவி வகித்துள்ளார்.

    நிமோனியா எனப்படும் கபவாதம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டும், வயோதிகம் சார்ந்த காரணங்களால் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்த ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ. புஷ் கடந்த வெள்ளிக்கிழமை  தனது 94-வது வயதில் டெக்சாஸ் மாநிலத்தில் மரணம் அடைந்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் 41-வது அதிபராக பதவி வகித்த புஷ் உடலை டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து தலைநகர் வாஷிங்டனுக்கு அரசு மரியாதையுடன் கொண்டு வருவதற்காக அதிபர்கள் மட்டுமே பயன்படுத்தும் சிறப்பு விமானத்தை டொனால்ட் டிரம்ப் அனுப்பி வைத்துள்ளார்.

    பதவியில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் இந்த சிறப்பு விமானத்துக்கு ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ என்று பெயர். தற்போது புஷ் உடலை கொண்டு வரும் நோக்கத்துக்காக அனுப்பப்பட்டுள்ளதால் இவ்விமானத்துக்கு ’41-வது சிறப்பு நோக்கம்’ (Special Air Mission 41) என தற்காலிக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    மனைவியுடன் புஷ்

    அந்த விமானத்தில் புஷ் உடல் இன்னும் சில மணி நேரங்களில் வாஷிங்டன் நகரை வந்தடையும். உலக தலைவர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று மாலை முதல் புதன்கிழமை காலை வரை அவரது உடல் கேபிடோல் ஹில் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அரசு மாளிகை வளாகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

    அங்குள்ள தேசிய தலைமை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட வெகுசில முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    பின்னர், மீண்டும் இதே விமானம் மூலம் புஷ் உடல் புதன்கிழமை மாலை டெக்சாஸ் மாநிலத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்ட்டன் நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் அவரது  மனைவி பார்பரா புஷ் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் வரும் வியாழக்கிழமை அடக்கம் செய்யப்படுகிறது.

    இதில் அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  #GeorgeHWBush #SpecialAirMission41
    மோசமான வானிலையால் 16 பேருடன் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் அருணாசலப் பிரதேசத்தில் திடீரென அவசரமாக தரையிறக்கப்பட்டது. #Arunachalpradesh #ArmyChopper
    இடாநகர்:

    அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதில் 16 பேர் பயணம் செய்தனர்.

    இன்று மதியம் டுடிங் விமான நிலையத்தின் மேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ஹெலிகாப்டரில் தகவல் தொடர்பு துண்டானது. மேலும் அங்கு நிலவிய மோசமான வானிலையால் அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இதுதொடர்பாக விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் இன்று பயிற்சியில் ஈடுபட்டது. மதியம் அப்பகுதியில் நிலவிய மோசமான் வானிலையால் அந்த விமானம் டுடிங் விமான நிலையம் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 16 பேரும் நலமுடன் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். #Arunachalpradesh #ArmyChopper
    ரபேல் போர் விமாங்கள் கேம் சேஞ்சராக திகழும், ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். #RafaleDeal #AirForceChiefBSDhanoa
    புதுடெல்லி :

    பிரான்சில் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் செய்தது அதில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. அதை மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு மறுத்துள்ளது.

    இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே, ‘இந்திய அரசின் ஆலோசனையின் படிதான் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.

    இந்திய அரசால் கைக்காட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை எனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்தோம். இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய எதுவுமில்லை, ரபேல் விமானங்கள் தயாரிப்பதற்கான உதிரி பாகங்களுக்கான டெண்டரை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க மத்திய அரசு பரிந்துரை செய்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே தெரிவித்து இருந்தார்.

    அவரது இந்த கருத்து இந்திய அரசியலில் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதுதொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே வார்த்தைப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

    இந்நிலையில், ரபேல் போர் விமானங்கள் ஒரு கேம் சேஞ்சர் என இந்திய விமானப்படை தளபதி தனோவா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, பிரான்சிடம் வாங்கும் ரபேல் போர் விமானங்கள் மற்றும் ரஷியாவிடம் இருந்து வாங்கவுள்ள எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இவை இரண்டும் இந்திய விமானப்படையின் வலிமையை அதிகரித்து கேம் சேஞ்சராக திகழும்.

    36 ரபேல் விமானங்களை வாங்க அரசு தைரியமான நடவடிக்கை எடுத்துள்ளது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனம் ஒப்பந்தங்கள் அடிப்படையில் சுகோய் 30 விமானத்தை தர 3 ஆண்டும், ஜாகுவார் விமானத்தை தர 5 ஆண்டும் தாமதம் செய்தது. எனவே அதற்கு பதிலாக ரபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை தேர்வு செய்ததில் எந்த தலையீடும் இல்லை என விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். #RafaleDeal #AirForceChiefBSDhanoa 
    கேரள மாநிலத்தில் மலை கிராமத்தில் சிக்கிய கர்ப்பிணிகளை ஹெலிகாப்டரில் சென்று விமானப்படையினர் மீட்டனர்.
    பாலக்காடு:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் நெம்மாரா அருகே உள்ளது நெல்லியாம்பதி மலை கிராமம். கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக நெல்லியாம்பதி செல்லும் பாதை துண்டிக்கப்பட்டது.

    அங்கு வசிக்கும் 3,500 பேர் பாதிக்கப்பட்டனர். 6 நாட்களுக்கும் மேல் அவர்கள் தவித்து வந்தனர். இந்த தகவல் கிடைத்ததும் ராணுவத்தினரும், மருத்துவ குழுவினரும் 26 கி.மீ. மலைப் பாதையில் நடந்து சென்று கிராமத்தினருக்கு உதவி வந்தனர்.

    அங்கு வசித்து வருபவர்களில் சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து நெல்லியாம்பதிக்கு ஹெலிகாப்டரில் சென்று இறங்க விமானப்படையினர் முயற்சி செய்தனர். ஆனால் மோசமான கால நிலை காரணமாக அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

    நேற்று மழை குறைந்ததை தொடர்ந்து நெல்லியாம்பதி மலை கிராமத்துக்கு 4 ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டன. அங்கு சென்ற விமானப்படையினர், மருத்துவ குழுவினர் உதவி தேவைப்பட்ட 12 பேரை மீட்டு வந்து பாலக்காடு, நெம்மாரா மருத்துவமனைகளில் சேர்த்தனர்.

    இவர்களில் 4 பேர் கர்ப்பிணிகள் ஆவார்கள். நெல்லியாம்பதியில் 3,500-க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்கள் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டது.
    ×