என் மலர்

  நீங்கள் தேடியது "GSAT-7A"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய விமானப்படையின் தகவல் தொடர்பு செயற்கைகோளான ஜிசாட்- 7ஏ வுடன் ‘ஜி.எஸ்.எல்.வி’.- எப்11 ராக்கெட் இன்று மாலை 4.10 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. #GSLVF11 #GSAT7A #ISRO
  ஸ்ரீஹரிகோட்ட்டா:
   
  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது.

  இதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.10 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணுக்கு செலுத்தியது.


  3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி- எப்11 ராக்கெட்டின் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பும் பணி நிறைவடைந்து உள்ளது. 3-வது நிலையில் முழுவதும் உள்நாட்டில் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான இறுதி கட்டபணியான ‘கவுண்ட் டவுன்’ நேற்று தொடங்கியது.

  49.1 மீட்டர் உயரம் கொண்ட ஜி.எஸ்.எல்.வி.- எப்11 ராக்கெட்டின் எடை 415.6 டன் ஆகும். இதில் வைத்து அனுப்பப்படும் 2,250 கிலோ எடை கொண்ட ஜிசாட்- 7ஏ செயற்கைக்கோள் பூமியில் இருந்து அதிகபட்சமாக 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும், குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தூரத்திலும் கொண்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வர இருக்கிறது. விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைக்கோள் மூலம் பெற முடியும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.  #GSLVF11 #GSAT7A #ISRO
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விமானப்படை தகவல் தொடர்புக்காக ‘ஜிசாட்-7ஏ’ என்ற செயற்கைகோள் வருகிற 19-ந்தேதி விண்ணில் ஏவப்படுவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள். #GSAT7A #ISRO
  சென்னை:

  இந்திய விமானப்படைக்கு உதவும் வகையில் இஸ்ரோ தயாரித்துள்ள ஜிசாட்-7ஏ செயற்கைகோளை இஸ்ரோ வருகிற 19-ந்தேதி (புதன்கிழமை) விண்ணில் ஏவுவதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:-

  இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக 2,250 கிலோ எடையில் ஜிசாட்-7ஏ என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளோம். இதனை அடுத்த வாரம் ‘ஜி.எஸ்.எல்.வி- எப் 11’ ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்துவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளோம்.

  ஜிசாட்-7ஏ செயற்கைகோளில் 3.3 கிலோ வாட் திறன் கொண்ட பேட்டரியும், கியூ-பேண்ட் டிரான்ஸ்பாண்டர்களும் பொருத்தப்பட்டு உள்ளன. இதனுடைய ஆயுட்காலம் 8 ஆண்டுகள். இது இஸ்ரோ தயாரித்துள்ள 35-வது தகவல் தொடர்பு செயற்கைகோளாகும். பல்வேறு இடங்களில் உள்ள இந்திய விமானப்படைக்கான ரேடார் நிலையங்களை இந்த செயற்கைகோள் மூலம் இணைக்க முடியும்.  ஜிசாட்-7ஏ செயற்கைகோள் விமானப்படையின் போர்த்திறன்களை அதிகரிப்பதுடன், உலகளாவிய நடவடிக்கைகளையும் அதிகளவில் தெரிந்துகொள்ள உதவிகரமாக இருக்கும். 2013-ம் ஆண்டு ‘ஜிசாட்-7’ என்ற செயற்கைகோள் கடற்படைக்காக தயாரித்து விண்ணில் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 2-வது முறையாக ‘ஜிசாட்-7ஏ’ செயற்கைகோளை தயாரித்து விமானப்படைக்காக அர்ப்பணிக்க இருக்கிறது.

  இதற்கான ராக்கெட் ஜி.எஸ்.எல்.வி. ரகத்தில் 7-வது ராக்கெட்டாகும். தகவல் தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் ‘இன்சாட் 4சிஆர்’ செயற்கைகோளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடைய இருப்பதால், அதற்கு மாற்றாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இது பிரெஞ்சு கயானாவில் இருந்து அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும்.

  தொடர்ந்து சந்திரயான் விண்கலமும் அடுத்த மாதம் 3-ந்தேதியில் இருந்து பிப்ரவரி 13-ந்தேதிக்குள் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. தற்போது பூமியை 320 ராணுவ செயற்கைகோள்கள் சுற்றிவருகின்றன. அதில் 13 இந்தியாவுக்கு சொந்தமானவை.

  இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.  #GSAT7A #ISRO

  ×