என் மலர்
செய்திகள்

மோசமான வானிலை - அருணாசலப்பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்
மோசமான வானிலையால் 16 பேருடன் பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ ஹெலிகாப்டர் அருணாசலப் பிரதேசத்தில் திடீரென அவசரமாக தரையிறக்கப்பட்டது. #Arunachalpradesh #ArmyChopper
இடாநகர்:
அருணாசலப்பிரதேசம் மாநிலத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதில் 16 பேர் பயணம் செய்தனர்.
இன்று மதியம் டுடிங் விமான நிலையத்தின் மேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தது. திடீரென அந்த ஹெலிகாப்டரில் தகவல் தொடர்பு துண்டானது. மேலும் அங்கு நிலவிய மோசமான வானிலையால் அந்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுதொடர்பாக விமானப்படை அதிகாரிகள் கூறுகையில், எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர் இன்று பயிற்சியில் ஈடுபட்டது. மதியம் அப்பகுதியில் நிலவிய மோசமான் வானிலையால் அந்த விமானம் டுடிங் விமான நிலையம் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 16 பேரும் நலமுடன் இருக்கின்றனர் என தெரிவித்துள்ளனர். #Arunachalpradesh #ArmyChopper
Next Story






