search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aditanar College"

    • ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் தற்காப்புகலை நிபுணர் சங்கரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • தற்காப்பு கலையின் மூலமாக மாணவர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை போன்ற பல நற்பண்புகளை வளர்த்து கொள்ள முடியும் என்பதை விளக்கி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாகசக்கலை மன்றத்தின் சார்பாக, 'தற்காப்பு கலையும் மனவலிமையும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். சாகசக்கலை மன்ற இயக்குனர் சிவ இளங்கோ வரவேற்று பேசினார்.

    ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பணிநிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் தற்காப்புகலை நிபுணர் சங்கரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் தற்காப்பு கலையின் மூலமாக மாணவர்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை போன்ற பல நற்பண்புகளை வளர்த்து கொள்ள முடியும் என்பதை விளக்கி கூறினார். கருத்தரங்கில் பேராசிரியர்கள் மாலைசூடும் பெருமாள், சிவமுருகன், முருகேஸ்வரி, அசோகன், உமாஜெயந்தி, ஆன்றோ சோனியா, அமராவதி, சிவந்தி வானொலி மைய பொறுப்பாளர் கண்ணன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வரின் ஆலோசனைப்படி சாகசக்கலை மன்றத்தின் இயக்குனர் சிவ இளங்கோ மற்றும் உறுப்பினர்கள் மருதையா பாண்டியன், மோதிலால் தினேஷ், திலீப் குமார், பிரியதர்ஷினி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • விவேகம் குரூப்ஸ் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் அன்னம் அகாடமியின் இயக்குநர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொடக்க உரை நிகழ்த்தினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இளங்கலை பொருளியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். விவேகம் குரூப்ஸ் முதன்மை நிர்வாக அதிகாரி மற்றும் அன்னம் அகாடமியின் இயக்குநர் முத்துக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தொடக்க உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில் பொருளியல் பாடப்பிரிவின் சிறப்பையும், பொருளியல் மாணவர்களுக்கான எதிர்கால வாய்ப்புகளையும், அதனை திட்டமிட்டு பயன்படுத்துவது எப்படி? என்பதையும் விளக்கி பேசினார். உதவிப்பேராசிரியர் சிவஇளங்கோ சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். மாணவர் செயலர் சாமுவேல் நன்றி கூறினார்.

    விழாவில் பேராசிரியர்கள் கணேசன், சிவமுருகன், முருகேஸ்வரி, மருதையா பாண்டியன், அசோகன், உமா ஜெயந்தி, பிரியதர்ஷினி மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வழிகாட்டுதல்படி பொருளியல்துறை தலைவர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • பேச்சு போட்டியில் மாணவர்கள் மரிய இசக்கி என்ற மாதன், பசுபதி, சக்தி செல்வன் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.
    • பேச்சு போட்டியின் நடுவர்களாக பேராசிரியர்கள் பென்னட், திருச்செல்வன், சிரில் அருண் ஆகியோர் செயல்படடனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண் 231 சுயநிதிப்பிரிவு, இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சு போட்டி நடந்தது. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் தொடக்க உரையாற்றினார்.

    யும், கட்டுரை போட்டியில் மாணவர்கள் முரளி கார்த்திக், மாரி விக்னேஷ், தினேஷ்குமார் ஆகியோர் முறையே முதல் 3 இடங்களையும் பிடித்தனர்.

    பேச்சு போட்டியின் நடுவர்களாக பேராசிரியர்கள் பென்னட், திருச்செல்வன், சிரில் அருண் ஆகியோரும், கட்டுரை போட்டியின் நடுவர்களாக பேராசிரியர்கள் மகேஸ்வரி, அன்டனி பிரைட்ராஜா ஆகியோரும் செயல்பட்டனர். இளையோர் செஞ்சிலுவை சங்க பேராசிரியர் பார்வதி தேவி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சுயநிதிப்பிரிவு பேராசிரியர்கள் கரோலின் கண்மணி ஆனந்தி, ரூபன் சேசு அடைக்கலம், சுமதி, ஸ்வீட்லின் டயனா, ராஜபூபதி, சகாய ஜெயசுதா, ஆக்னஸ், சுகாசினி, ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.

    • ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ நலத்துறை மற்றும் ஆங்கில எழுத்தாளர் மன்றம் சார்பில், மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு கருத்தரங்கு நடந்தது.
    • நேசமணி மெமோரியல் கிறிஸ்தவ கல்லூரி ஆங்கில உதவி பேராசிரியர் சாமுவேல் நாயகம் ‘ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ நலத்துறை மற்றும் ஆங்கில எழுத்தாளர் மன்றம் சார்பில், மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி பேசினார். ஆங்கில எழுத்தாளர் மன்ற இயக்குனர் ஷோலா பெர்னாண்டோ வரவேற்று பேசினார். நேசமணி மெமோரியல் கிறிஸ்தவ கல்லூரி ஆங்கில உதவி பேராசிரியர் சாமுவேல் நாயகம் 'ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல்' என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி வாழ்த்தி பேசினார். மாணவ நலத்துறை இயக்குனர் லெனின் நன்றி கூறினார்.

    • கல்லூரி நிறுவனர் ஆலடி அருணாவின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை மற்றும் பண்பாடு சார்ந்த போட்டிகள் நடைபெற்றன.
    • இளம் வணிகவியல் 2-ம் ஆண்டு மாணவர் ம.அருணாசலம் தமிழ் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு, முதல் பாிசு ரூ. 5 ஆயிரத்தை தட்டிச்சென்று ஆதித்தனார் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

    திருச்செந்தூர்:

    நெல்லை சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அந்த கல்லூரி நிறுவனர் ஆலடி அருணாவின் 91-வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கலை மற்றும் பண்பாடு சார்ந்த போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளம் வணிகவியல் 2-ம் ஆண்டு மாணவர் ம.அருணாசலம் தமிழ் கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு, முதல் பாிசு ரூ. 5 ஆயிரத்தை தட்டிச்சென்று ஆதித்தனார் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். அந்த சாதனை மாணவரை கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் மற்றும் மாணவ நலத்துறை பொறுப்பாளரான ஆங்கிலத்துறை பேராசிரியர் இ.ெலனின், வணிகவியல் துறைத்தலைவர் சி.சிவகுமார் ஆகியோர் பாராட்டினர்.

    • இப்பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார்.
    • சென்னை ரீச் அகடமி பயிற்றுனர் மாணவர்கள் பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரி படிப்பை தொடங்கும் போது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான 3 நாட்கள் கற்றல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    இப்பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கணிப்பொறியியல் துறைத்தலைவர் சி.வேலாயுதம் வரவேற்று பேசினார்.

    இதில் ஆங்கிலத் துறையின் முன்னாள் தலைவர் கே.தணிகாசலம், சென்னை ரீச் அகடமி பயிற்றுனர், ஆராய்ச்சி அறிஞர் எஸ்.வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்கள் பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரி படிப்பை தொடங்கும் போது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர்.

    இதில் கணினி துறை பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், பிருந்தா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.

    • திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தொடங்கி வைத்தார்.
    • போதைப்பொருட்களுக்கு அடிமையாவதற்கான காரணங்கள், விளைவுகள் குறித்து தரைப்படை மாணவர்கள் ஆதித்யன், சேசுதுரை கபிலன், கடற்படை மாணவர் பாலகுரு ஆகியோர் பேசினர்.

    திருச்செந்தூர்:

    அமலாக்க பணியகம் மற்றும் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்ட குழுமம் இணைந்து போதைப்பொருட்களுக்கு எதிரான உலக சாதனை விழிப்புணர்வு நிகழ்வின் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்கள் 43, 48 சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தொடங்கி வைத்தார். போதைப் பொருட்கள் ஒழிப்பை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள், பேராசிரியர்கள் ஊர்வலமாக கல்லூரிக்கு வந்தனர்.

    தொடர்ந்து கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமையில், செயலாளர் ஜெயக்குமார் முன்னிலையில், மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முரளிதரன் (திருச்செந்தூர்), ரகுராஜன் (குலசேகரன்பட்டினம்) மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசுப்பு அறிவுறுத்தலின்படி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் கவிதா, அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் செய்து இருந்தனர்.

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய மாணவர் தரைப்படை, கப்பல்படை சார்பில், போதைப்பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தின நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். விலங்கியல் துறை தலைவர் வசுமதி சிறப்புரையாற்றினார். போதைப்பொருட்களுக்கு அடிமையாவதற்கான காரணங்கள், விளைவுகள் குறித்து தரைப்படை மாணவர்கள் ஆதித்யன், சேசுதுரை கபிலன், கடற்படை மாணவர் பாலகுரு ஆகியோர் பேசினர். தூத்துக்குடி 29-வது தரைப்படை கம்பெனி ஆபீசர் கமெண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ் உத்தரவின்பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி தேசிய மாணவர் தரைப்படை, கப்பல்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய தரைப்படை பிரிவு அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் செய்து இருந்தார்.

    • கல்லூரி முதல்வர் மகேந்தி ரன் தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்தார்.
    • டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் கள் நெல்சன் துரை, ஜெயகணேஷ் ஆகியோர் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில், உலக யோகா தினவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்தி ரன் தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்தார். தேசிய மாணவர் படையின் தரைப்படை அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் வரவேற்று பேசினார். கணினி அறிவியல் துறைத்தலைவர் யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

    டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி பேராசிரியர் கள் நெல்சன் துரை, ஜெயகணேஷ் ஆகியோர் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தனர். முடிவில் தேசிய மாணவர் படை கப்பல்படை அதிகாரி சப்-லெப்டினன்ட் சிவஇளங்கோ நன்றி கூறினார்.

    தூத்துக்குடி 29-வது தரைப்படை கம்பெனி ஆபிசர் கமெண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ் உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயற்பியல் துறைத்தலைவர் பாலு, என்.சி.சி. யூனிட் ஹவில்தார் முருகன், தேசிய மாணவர் படை அதிகாரிகள் சேக்பீர் முகம்மது காமீல், சத்யன், ஐசக் கிருபாகரன், சூரிய பொன்முத்து சேகரன் மற்றும் ஆதித்தனார் கல்லூரி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, கே.ஏ. மேல்நிலைப்பள்ளி, டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 200 தரைப்படை மற்றும் கப்பல்படை மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அதிகாரிகள் சிவமுருகன், சிவ இளங்கோ மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.

    • இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் (சுயநிதி) போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன.
    • சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவி பெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.aditanarcollege.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு கலந்தாய்வு கடந்த மாதம் 20, 22-ந்தேதிகளில் நடத்தப்பட்டது.மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்தனர்.

    இளம் அறிவியல் பாடப் பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் (சுயநிதி) போன்ற பிரிவுகளில் சில இடங்கள் உள்ளன.

    தனித்தனி விண்ணப்பம்

    எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் கல்லூரி இணைய தளத்தில் விண்ணப்பித்து, கல்லூரி முதல்வரை நேரில் அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    சுயநிதி பிரிவுக்கு தனி விண்ணப்பமும், அரசு உதவி பெறும் பிரிவுக்கு தனி விண்ணப்பமும் சமர்பிக்க வேண்டும்.

    இந்த தகவலை ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

    • முகாமில் 433 தரைப்படை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
    • பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி (29) தமிழ்நாடு தேசிய மாணவர் படை, தரைப்படை பிரிவின் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ் தலைமையில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. வருடாந்திர பயிற்சி முகாம் கடந்த 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்த முகாமில் 5 கல்லூரிகள், 11 பள்ளிக்கூ டங்களில் இருந்து 433 தரைப்படை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு தேசிய மாணவர் படை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் அடிப்படை உடற்பயிற்சி, ஆயுதங்களை கையாளுதல், துப்பாக்கி சுடுதல், மேப்ரீடிங், யோகா கலைகள், சமூகநல தொண்டு செய்தல், மரம் நடுதல், தேசிய ஒருமை ப்பாட்டு விழிப்புணர்வு, கராத்தே, முதலுதவி விழிப்புணர்வு ஆகியவற்று க்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

    முகாமில் ரத்ததானம் செய்வது குறித்து மருத்துவ அலுவலர்கள் செந்தட்டி காளை, வைத்தீஸ் ஆகி யோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு விளக்கி கூறினர். 79 மாண வர்கள் ரத்ததானம் செய்தனர். இதில் ஆதித்த னார் கல்லூரி மாணவர்கள் 12 பேர் ரத்ததானம் செய்தனர். முகாம் பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பதக்க ங்கள் வழங்கப்பட்டது.

    இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை மாணவர் முத்துவேல் முதலிடத்தையும், டிரில் பயிற்சியில் ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை மாணவர் விஜய் பிரபாகரன் முதலிடத்தையும், விஷ்ணு 2-வது இடத்தையும் பிடித்தனர்.

    மேலும் மெரினா 2023 குடியரசுதின அணிவகுப்பில் கலந்து கொண்ட ஆதித்தனார் கல்லூரி விலங்கியல்துறை மாணவர் முருகப் பெரு மாள், பொருளியல்துறை மாணவர் விஷ்ணு ஆகி யோரும் கவுரவிக்கப்பட்டு, பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஆபிஸர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ், என்.சி.சி. அதிகாரிகள் சிவமுருகன், மாதவன், ஷேக்பீர் முகமது காமீல், சத்யன், ரவீந்திரகுமார், ஐசக் கிருபாகரன், ராணுவ அதிகாரிகள் பிரகாஷ் வரதராஜன், ரவி, சுரேஷ், அருண்குமார், முருகன், என்.சி.சி. அலுவலக அமைச்சக பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பதக்கங்கள் பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலாளர் ஜெயக்குமார், துறைத்தலைவர்கள் மற்றும் என்.சி.சி. அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் ஆகியோர் பாராட்டினர்.

    • நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
    • கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.முத்துக்கிருஷ்ணன் உறுதிமொழிைய வாசிக்க, அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.முத்துக்கிருஷ்ணன் உறுதிமொழிைய வாசிக்க, அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இதில் அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, உதவியாளர்கள் ஜெ.சிலுவை ரோஸ்மேரி, ப.மகாலட்சுமி வினிதா மற்றும் கல்லூரி அலுவலர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

    • கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், கல்லூரி இணையதளம் www.aditanarcollege.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
    • விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் கலந்தாய்வுக்கு நேரில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான தகவல் மையம் திறப்புவிழா நடந்தது. கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் தகவல் மையத்ைத திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் முன்னிலை வகித்தார்.

    தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் வாசுகி, பேராசிரியர்கள் பாலு, சரண்யா, மோதிலால், தினேஷ், சிங்காரவேலு, ரூபன், செல்வன், பிருந்தா, ஜெயந்தி, திலீபன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க உதவும் பொருட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள், கல்லூரி இணையதளம் www.aditanarcollege.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கலைப்பிரிவில் பி.ஏ. ஆங்கிலம், பொருளியல், பி.பி.ஏ. வணிக நிர்வாகவியல், பி.காம் வணிகவியல், பி.காம் வணிகவியல்(சுயநிதி பிரிவு) சேர விரும்பும் மாணவர்களுக்கு மே.20-ந் தேதி காலை 9.45 மணிக்கும், அறிவியல் பாடப்பிரிவில் (பி.எஸ்.சி. கணிதவியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல், கணினி அறிவியல்(சுயநிதி பிரிவு) சேர விரும்பும் மாணவர்களுக்கு மே.22-ந் தேதி காலை 9.45 மணிக்கும் கல்லூரி உள்அரங்கில் கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் கலந்தாய்வுக்கு நேரில் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    ×