search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் சாதனை
    X

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி என்.சி.சி. மாணவர்கள் சாதனை

    • முகாமில் 433 தரைப்படை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
    • பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி (29) தமிழ்நாடு தேசிய மாணவர் படை, தரைப்படை பிரிவின் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ் தலைமையில் சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் என்.சி.சி. வருடாந்திர பயிற்சி முகாம் கடந்த 5-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்த முகாமில் 5 கல்லூரிகள், 11 பள்ளிக்கூ டங்களில் இருந்து 433 தரைப்படை மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு தேசிய மாணவர் படை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் அடிப்படை உடற்பயிற்சி, ஆயுதங்களை கையாளுதல், துப்பாக்கி சுடுதல், மேப்ரீடிங், யோகா கலைகள், சமூகநல தொண்டு செய்தல், மரம் நடுதல், தேசிய ஒருமை ப்பாட்டு விழிப்புணர்வு, கராத்தே, முதலுதவி விழிப்புணர்வு ஆகியவற்று க்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

    முகாமில் ரத்ததானம் செய்வது குறித்து மருத்துவ அலுவலர்கள் செந்தட்டி காளை, வைத்தீஸ் ஆகி யோர் சிறப்பு விருந்தி னர்களாக கலந்து கொண்டு விளக்கி கூறினர். 79 மாண வர்கள் ரத்ததானம் செய்தனர். இதில் ஆதித்த னார் கல்லூரி மாணவர்கள் 12 பேர் ரத்ததானம் செய்தனர். முகாம் பயிற்சியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பதக்க ங்கள் வழங்கப்பட்டது.

    இதில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை மாணவர் முத்துவேல் முதலிடத்தையும், டிரில் பயிற்சியில் ஆதித்தனார் கல்லூரி பொருளியல்துறை மாணவர் விஜய் பிரபாகரன் முதலிடத்தையும், விஷ்ணு 2-வது இடத்தையும் பிடித்தனர்.

    மேலும் மெரினா 2023 குடியரசுதின அணிவகுப்பில் கலந்து கொண்ட ஆதித்தனார் கல்லூரி விலங்கியல்துறை மாணவர் முருகப் பெரு மாள், பொருளியல்துறை மாணவர் விஷ்ணு ஆகி யோரும் கவுரவிக்கப்பட்டு, பதக்கங்கள் வழங்கப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை ஆபிஸர் கமாண்டிங் லெப்டினன்ட் கர்னல் பிரதோஷ், என்.சி.சி. அதிகாரிகள் சிவமுருகன், மாதவன், ஷேக்பீர் முகமது காமீல், சத்யன், ரவீந்திரகுமார், ஐசக் கிருபாகரன், ராணுவ அதிகாரிகள் பிரகாஷ் வரதராஜன், ரவி, சுரேஷ், அருண்குமார், முருகன், என்.சி.சி. அலுவலக அமைச்சக பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பதக்கங்கள் பெற்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன், செயலாளர் ஜெயக்குமார், துறைத்தலைவர்கள் மற்றும் என்.சி.சி. அதிகாரி லெப்டினன்ட் சிவமுருகன் ஆகியோர் பாராட்டினர்.

    Next Story
    ×