search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aditanar College"

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது.
    • பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பாக ஆங்கில இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவின் அமைப்பாளர் பேராசிரியர் கவிதா வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் மகேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி, பேராசிரியர்கள் ராமஜெயலட்சுமி, ரீட்டா யசோதா, சத்தியலெட்சுமி, சோலா பெர்ணன்டோ, லெனின், முனிஸ்வரி, பர்வதவர்தினி, மோதிலால் தினேஷ், தாவீதுராஜா, பாரதி, முகம்மது முகைதீன் காதரியா மற்றும் மாணவ செயலாளர்கள் சிவகணேஷ், அஜித்செல்வன், சந்தோஷ் ஜோசப், மதன்குமார் மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஆங்கிலத்துறையை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அமைப்பு செயலர் பேராசிரியர் உதயவேல் நன்றி கூறினார்.

    • இக்கருத்தரங்கில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை சார்ந்த மாணவர்கள் சமர்ப்பித்தனர்.
    • சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில், 'அறிவியல் உபகரணம் உருவாக்கு வதில் தொழில் நுட்ப முக்கியத்துவம் வாய்ந்த மூலப்பொருள்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்த ரங்கிற்கு சென்னை சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரியின் மூத்த அறிவியல் விஞ்ஞானி முத்து செந்தில்பாண்டியன், சீனாவின் ஹெெபன்ங் நகரிலுள்ள ஹென் பல்கலைக்கழக வேதியியல் மற்றும் மூலக்கூறு ஆய்வக விஞ்ஞானி ஸ்ரீகேசவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொ ண்டனர். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி பேசு கையில், ஆதித்தனார் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த கல்லூரி தலைவர் அதிக அளவில் பொருளுதவி செய்து ஊக்கமளிக்கிறார். மாணவர்கள் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார். இயற்பியல் துறை தலைவர் பாலு வரவேற்று பேசினார்.

    இக்கருத்தரங்கில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை சார்ந்த மாணவர்கள் நேரடியாகவும், தைவான், சீனா, தென்கொரியா நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இணைய வழியிலும் சமர்ப்பித்தனர். ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய தொகுப்பை கல்லூரி முதல்வர் வெளியிட, மூத்தவிஞ்ஞானி பெற்று கொண்டார். சிறந்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கில் ெடல்லி, கொல்கத்தா, மும்பை, கேரளாவை சேர்ந்த மாண வர்கள், சிவசுப்பிரமணிய நாடார் பொறியல் கல்லூரி, பாரதியார், பாரதிதாசன், அழக்கப்பா, மனோன் மணியம் சுந்தரனார் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் பங்கேற்றனர்.

    மேலும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, வாவு வஜீஹா கல்லூரி, ம.தி.தா. இந்து கல்லூரி, அரசு பாலி டெக்னிக் கல்லூரி, நாகர்கோவில் ஜெ.பி.கலைக்கல்லூரி, தென்காசி கடைய நல்லூர் ெமரிட் கல்லூரி, நாசரேத் மர்காசிஸ் கல்லூரி, நெல்லை சேவியர் கல்லூரி, ஜான்ஸ் கல்லூரி, ராஜபாளையம் ராம்கோ பொறியியல் கல்லூரி, வ.உ.சி. கல்லூரி, ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி, புனித மரியன்னை கல்லூரி, கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி, ஜீ.வி.என்.கல்லூரி, கோவில்பட்டி துரைச்சாமி நாடார் கல்லூரி, சாத்தூர் ஸ்ரீரா மசாமி நாயுடு நினைவுக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஆராய்ச்சி மாண வர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கின் ஒருங்கி ணைப்பாளர் செல்வராஜன் நன்றி கூறினார். ஏற்பாடு களை ஆதித்தனார் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரி யர்கள் ஸ்ரீதேவி, ேசகர், லிங்கேஷ்வரி மற்றும் மா ணவர்கள் செய்திருந்தனர்.

    • போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர் என 331 பேர் பங்கேற்றனர்.
    • இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 60 கோப்பைகள், 30 தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன் வழங்கினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. ஆதித்தனார் கல்லூரி செஸ் கிளப், செந்தூர் தாலுகா செஸ் கழகம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர் என 331 பேர் பங்கேற்றனர். 10 மற்றும் 15 வயதுக்கு உட்பட்டோர், பொதுப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் வரவேற்று பேசினார். செந்தூர் தாலுகா செஸ் கழக தலைவர் டாக்டர் வெற்றிவேல் வாழ்த்தி பேசினார். மாவட்ட செஸ் கழக செயலாளர் கற்பகவல்லி முதன்மை நடுவராக செயல்பட்டார்.

    பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 60 கோப்பைகள், 30 தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன் வழங்கினார். பொதுப்பிரிவினருக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆலோசனையின்பேரில், செஸ் கிளப் இயக்குனர் மோதிலால் தினேஷ் மற்றும் செஸ் கிளப் மாணவ உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

    • சிறப்பு விருந்தினராக நெல்லை அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் பார்வதி கலந்து கொண்டு பேசினார்.
    • தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி சிவ பாரதி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீடு பிரிவு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு மன்றம் சார்பாக 'தொழில் முனைவோர் மேம்பாடு பற்றிய கருத்தரங்கம்' நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். உள்தர மதிப்பீடு ஒருங்கிணைப்பாளர் ஜீம் ரிவீஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.

    சிறப்பு விருந்தினராக நெல்லை அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் பார்வதி கலந்து கொண்டு பேசினார். தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு தேவையான நிதியை எவ்வாறு பெறுவது என்பதை பற்றி ிவ பாரதி பேசினார். அவரை பேராசிரியர் மருதையா பாண்டியன் அறிமுகம் செய்து வைத்தார். முடிவில், பேராசிரியர் ராஜ் பினோ நன்றி கூறினார். இதில் பேராசிரியர்கள் மாலைசூடும் பெருமாள், சிவமுருகன், திலீப் குமார், திருச்செல்வம், சிரில் அருண், ெஜயராமன், மோதிலால் தினேஷ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபால் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேர்தல் எழுத்தறிவு மன்ற தொடக்க விழா நடந்தது. மன்ற இயக்குனர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் துணை வட்டாட்சியரும், தேர்தல் பிரிவு அதிகாரியுமான சங்கரநாராயணன் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து பேசினார்.

    பேராசிரியர்கள் பென்னட், திருச்செல்வன், ரூபன் சேசு அடைக்கலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மன்ற இணை பொறுப்பாளர் அந்தோணி பிரைட் ராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியினை மாணவ செயலர் சாந்தகுமார் தொகுத்து வழங்கினார்.

    • போட்டியில் பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.
    • தாவரவியல் துறை சார்பில் காளான் வளர்ப்பு, தாவரங்களின் வளர்ப்பு, கடல் பாசிகளின் பயன்கள் குறித்தும் காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட் டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் அறிவியல் தொழில் நுட்பத்திறனை மேம்படுத்தும் வகையில், 'பிளாஸ்டிக் கழிவு மேலா ண்மைக்கான உத்திகள்' என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி போட்டிகள், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்தி ரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெய க்குமார் வாழ்த்தி பேசினார். அகத்தர உறுதிக்குழு தலை வர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். இதில் பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும் ஆதித்தனார் கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் கணினி உதிரி பாகங்கள், மென்பொருள் செயல்பாடு களும், வேதியியல் துறை சார்பில் வேதிவினைகள், வேதிப்பொருட்களின் தன்மைகளும், விலங்கியல் துறை சார்பில் விலங்கு களின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகளும், கணிதவியல் துறை சார்பில் கணித கோட்பாடுகளின் செயல்விளக்க மாதிரிகளும், தாவரவியல் துறை சார்பில் காளான் வளர்ப்பு, தாவரங்க ளின் வளர்ப்பு, கடல் பாசி களின் பயன்கள் குறித்தும் காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது.

    ஆதித்தனார் கல்லூரி இயற்பியல் துறைத்தலைவர் பாலு, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் ஜான்சிராணி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் உமா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த அறிவியல் படைப்பு களை தேர்வு செய்தனர். சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி மாவட்ட அலுவலர் குருநாதன் பரிசு, சான்றிதழ் களை வழங்கினார்.

    இதில் திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி முைறயே முதல் 3 இடங்களை பிடித்தது. சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளி, பெரியதாழை லிட்டில் பிளவர் மேல்நி லைப் பள்ளிக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதேவி, அமைப்பு செயலாளர் அபுல்கலாம் ஆசாத் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ‘மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருள் மூலம் புள்ளியியல் பயன்பாடு’ என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது.
    • செந்திகுமார நாடார் கல்லூரி பொருளியல் துறை இணை பேராசிரியர் விஜயகுமார் , பொருளியலில் ஆய்வு தரவுகளை பகுத்தாய்வு செய்வது என்பதை நடைமுறை தரவுகள் மூலம் விளக்கி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் முதுகலை பொருளியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், முதுகலை பொருளியல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு 'மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருள் மூலம் புள்ளியியல் பயன்பாடு' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறைத்தலைவர் மாலைசூடும் பெருமாள் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார்.

    விருதுநகர் செந்திகுமார நாடார் கல்லூரி பொருளியல் துறை இணை பேராசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொருளியல் மாணவர்கள் புள்ளியியல் முறைகளை கணினி மென்பொருள் மூலம் எவ்வாறு கையாள்வது?, பொருளியலில் ஆய்வு தரவுகளை பகுத்தாய்வு செய்வது என்பதை நடைமுறை தரவுகள் மூலம் விளக்கி கூறினார். இதில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பொருளியல் மன்ற துணைத்தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசினார்.
    • பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை மற்றும் இயக்குனர் அன்னாவீனஸ் ஆராய்ச்சி செய்வதற்கான வழிமுறைகளை விளக்கி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி திட்டங்கள் குறித்த ஒருநாள் பயிற்சி பட்டறை, கல்லூரி உள்தர உறுதிப்பிரிவு மற்றும் ஆராய்ச்சிக்குழு சார்பில் நடைபெற்றது. கல்லூரி ஆராய்ச்சி குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாலு வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியை மற்றும் இயக்குனர் அன்னா வீனஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆராய்ச்சி செய்வதற்கான வழிமுறைகளை விளக்கி கூறினார். குறிப்பாக, ஒரு துறையை சார்ந்த ஆராய்ச்சியை எவ்வாறு தொடங்க வேண்டும், ஆராய்ச்சி கட்டுரைகளை சிறந்த முறையில் எழுதுவது எப்படி? அதை சிறந்த ஆராய்ச்சி இதழ்களில் பிரதியிடும் முறைகளையும், ஆராய்ச்சி திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் முறையையும் விரிவாக எடுத்து கூறினார். கல்லூரி உள்தர உறுதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜீம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் நன்றி கூறினார். இப்பயிற்சி பட்டறையில் கல்லூரி பேராசிரியர்கள், ஆராயச்சி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
    • காப்புரிமம் பெறுவதன் முக்கியத்துவம், அதன் மூலமாக பெறக்கூடிய நன்மைகள் குறித்து மெர்லின் எடுத்துரைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்தர மதிப்பீடு பிரிவு, தொழில் முனைவோர் மேம்பாடு மன்றம் சார்பாக அறிவுசார் சொத்துரிமை மற்றும் காப்புரிமை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

    இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜீம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். ஆங்கிலத்துறை பேராசிரியர் மோதிலால் தினேஷ் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக மெர்லின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், காப்புரிமம் பெறுவதன் முக்கியத்துவம், அதன் மூலமாக பெறக்கூடிய நன்மையையும் எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிந்தனைகளை ஒருங்கிணைத்து ஒரு தொழில் முனைவோராக மாறுவது எப்படி? என்பது குறித்து விளக்கி பேசினார். தொழி முனைவோர் மன்றத்தின் தலைவரும், வணிகவியல் துறை பேராசிரியருமான ராஜ்பினோ நன்றி கூறினார்.

    இக்கருத்தரங்கில், பேராசிரியர்கள் மாலைசூடும் பெருமாள்,ஸ்ரீதேவி, அந்தோணி சகாய சித்ரா, சிவகுமார், சிவமுருகன், திலீப்குமார், கருப்பசாமி, திருச்செல்வன், அசோகன், ஜெயராமன், மலர்க்கொடி மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்க ஏற்பாடுகளை முதல்வர் ஆலோசனைப்படி, கல்லூரி உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளரும், தொழில் முனைவோர் மேம்பாடு மன்றத்தலைவரும், இயக்குனரும், உறுப்பினர்களும் ெசய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், தனியார் மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டி பயிற்சி நடந்தது
    • இயற்பியல் துறை உதவி பேராசிரியர் இளங்கோவன் மாணவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அகத்தர மதிப்பீட்டு குழு மற்றும் வழிமுறை நெறிகாட்டி மையம் சார்பில், தனியார் மற்றும் பொதுத்துறையில் வேலைவாய்ப்பு பற்றிய வழிகாட்டி பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு குழு இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் வரவேற்று பேசினார்.

    சென்னை பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் துறை உதவி பேராசிரியர் இளங்கோவன் சிறப்பு அழைப்பாளராக கொண்டு மாணவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் தனியார் மற்றும் பொதுத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கி கூறினார். பொருளியல் துறை தலைவர் மாலைசூடும் பெருமாள், பேராசிரியர் கணேசன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். வழிமுறை நெறிகாட்டி மைய இயக்குனர் சேகர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஆலோசனையின்பேரில், வழிமுறை நெறிகாட்டி மைய துணை இயக்குனர் மருதையா பாண்டியன் மற்றும் முதுநிலை பொருளியல் மாணவர்கள் செய்து இருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • கல்லூரியில் உள்ள அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களது வகுப்பு பாடவேளையில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, உதவியாளர்கள் சிலுவை ரோஸ் மேரி, மதன், மகாலட்சுமி வினிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர். மேலும் கல்லூரியில் உள்ள அனைத்து பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களது வகுப்பு பாடவேளையில் போதைப்பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனர்.

    • சிறப்பு விருந்தினர் வக்கீல் சுபாசினி வில்சன் பெண்களுக்கான பாதுகாப்பு சட்ட விதிகளை பற்றியும், அதனை முறையாக பயன்படுத்துவது எப்படி? என்றும் விளக்கம் அளித்தார்.
    • ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான சட்டவிதிகள் பற்றி விளக்கி பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில், உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு மற்றும் பெண்கள் கல்வி மையம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்ற தலைப்பில் ஒருநாள் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தூத்துக்குடி வக்கீல் சுபாசினி வில்சன், ஆறுமுக நேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகா லட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

    கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் வக்கீல் சுபாசினி வில்சன் பேசுகையில், பெண்கள் செல்போனை சரியான முறையில் பயன்படுத்தாததால் வரக்கூடிய அச்சுறுத்தல்களையும், அதனை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? என்பதையும் விளக்கி பேசினார். மேலும், பெண்களுக்கான பாதுகாப்பு சட்ட விதிகளை பற்றியும், அதனை முறையாக பயன்படுத்துவது எப்படி? என்றும் விளக்கம் அளித்தார். ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி பேசுகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான சட்டவிதிகள் பற்றியும், போலீஸ் நிலையங்களில் வழங்கப்படும் சட்ட ஆலோசனைகள் குறித்தும் விளக்கி பேசினார். மேலும், பெண்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, தங்கள் முடிவுகளை நன்கு ஆலோசித்து எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இக்கருத்தரங்கில் உள்தர மதிப்பீட்டு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலன்டு நைட் வரவேற்று பேசினார். பெண்கள் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராம.ஜெயலட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் ெசய்து வைத்தார். பெண்கள் கல்வி மையத்தின் உறுப்பினர்கள் பேராசிரியர்கள் முருகேஸ்வரி, சரண்யா ஆகியோர் நன்றி கூறினர். இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள்பாலு, பசுங்கிளி பாண்டியன், மாலைசூடும் பெருமாள், வேலாயுதம், வசுமதி, அந்தோணி சகாய சித்ரா, கோகிலா, செந்தில்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் முதுநிலை மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

    • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கு பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.
    • கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கலந்து கொண்டு நாட்டு நலப்பணித்திட்டத்தில் மாணவர்கள் தங்களை எவ்வாறு மக்களுக்கான சேவையில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அணி எண்.231 சுயநிதிப்பிரிவு மற்றும் இளையோர் செஞ்சி லுவை சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங் மாணவர்களுக்கு பயிற்சி பயிலரங்கம் நடைபெற்றது.

    தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் கலந்து கொண்டு பயிலரங்கத்தை தொடங்கி வைத்து, நாட்டு நலப்பணித்திட்டத்தில் மாணவர்கள் தங்களை எவ்வாறு மக்களுக்கான சேவையில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றார். நாட்டு நலப்ப ணித்திட்டம் சுயநிதிப்பிரிவு அணி எண்.231 திட்ட அலுவலர் ஜெயராமன் வரவேற்று பேசினார்.

    கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரியும், ஆங்கிலத்துறை பேராசிரியருமான மோதிலால் தினேஷ் கலந்து கொண்டு, நாட்டுக்கும் வீட்டுக்கும் எவ்வாறு மாணவர்கள் சேவைப்பணியில் அர்ப்பணித்து கொள்ள வேண்டும். இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் தங்களை சமூகப்பணியில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும், என்றார். மேலும், ரத்தானம், கண்தானம், உடல் உறுப்புகள் தானம் பற்றி மாணவர்கள் மத்தியில் அவர் விளக்கி பேசினார்.

    நிகழ்ச்சியை முதலாமாண்டு இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட மாணவ ெசயலர் நட்டார் தொகுத்து வழங்கினார். இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அதிகாரி பார்வதி தேவி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சுயநிதிப்பிரிவு பேராசிரி யர்களான சிங்காரவேலு, சுமதி, டயனா ஸ்வீட்லின், சகாயஜெய சுதா, பென்னட், ஆக்னஸ், அந்தோணி பிரைட்ராஜா, சுகாசினி, மகேஸ்வரி, ஆய்வக உதவியாளர் ஜெயந்தி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட னர்.

    மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலுள்ள இளைஞர் செஞ்சிலுவை சங்கம், ரத்ததான சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய 'தொடக்க விழா-2023' நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி. மகேந்திரன் தலைமை தாங்கி னார். சிறப்பு விருந்தினராக இயற்பியல் துறை தலைவர் பாலு கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சமூக ேசவையும், அதன் முக்கியத்துவம்' என்ற தலைப்பில் பேசினார். இந்நிகழ்ச்சியை இளைஞர் சங்கத்தின் திட்ட அலுவலர் மோதிலால் ஏற்பாடு செய்திரு ந்தார். சங்க மாணவர் உறுப்பி னர் ஜான்மேலான் நன்றி கூறினார்.

    ×