search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Science fair"

    • ஹச்.என்.யூ.பி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • அறிவியல் கருவிகள் மற்றும் அறிவியல் செய்முறைகள் குறித்து மற்ற பள்ளிகளில் இருந்து வந்த மாணவ- மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை ஹச்.என்.யூ.பி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி சிறப்பு முகாம் நிலக்கோட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவரும், பள்ளி தலைவருமான சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    பள்ளி தாளாளர் உதயசூரியன் ,பள்ளி முதல்வர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமில் பள்ளி மாணவர்கள் சார்பாக வைக்கப்பட்டிருந்த அறிவியல் கருவிகள் மற்றும் அறிவியல் செய்முறைகள் குறித்து மற்ற பள்ளிகளில் இருந்து வந்த மாணவ- மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. கண்காட்சியில் நிலக்கோட்டை, நிலக்கோட்டை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான கிராம பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்திலிருந்து அறிவியல் மாதிரி வடிவம் கொண்டு வரப்பட்டு அங்கு பின்பற்றப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
    • கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தினர்.

    வள்ளியூர்:

    தெற்குகள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியல் முதுகலை வேதியியல் துறை சார்பாக அறிவியல் கண்காட்சி போட்டி 'இளம் விஞ்ஞானி' என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் ராஜன் தலைமை தாங்கி அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அறிவியல் கண்காட்சிக்கு கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்திலிருந்து அறிவியல் மாதிரி வடிவம் கொண்டு வரப்பட்டு அங்கு பின்பற்றப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பற்றி விரிவாக விளக்கப்பட்டது.

    இக்கண்காட்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தினர். சிறந்த அறிவியல் மாதிரிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் அறிவுறுத்தலின்படி முதுகலை வேதியியல் துறை பேராசிரியர்கள் லூர்து புஷ்பராஜ், கார்த்திகேயன், குளோரி புனிதா, மற்றும் முதுகலை வேதியியல் துறை மாணவ- மாணவிகள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

    • போட்டியில் பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர்.
    • தாவரவியல் துறை சார்பில் காளான் வளர்ப்பு, தாவரங்களின் வளர்ப்பு, கடல் பாசிகளின் பயன்கள் குறித்தும் காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட் டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் அறிவியல் தொழில் நுட்பத்திறனை மேம்படுத்தும் வகையில், 'பிளாஸ்டிக் கழிவு மேலா ண்மைக்கான உத்திகள்' என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி போட்டிகள், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்தி ரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெய க்குமார் வாழ்த்தி பேசினார். அகத்தர உறுதிக்குழு தலை வர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். இதில் பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும் ஆதித்தனார் கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் கணினி உதிரி பாகங்கள், மென்பொருள் செயல்பாடு களும், வேதியியல் துறை சார்பில் வேதிவினைகள், வேதிப்பொருட்களின் தன்மைகளும், விலங்கியல் துறை சார்பில் விலங்கு களின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகளும், கணிதவியல் துறை சார்பில் கணித கோட்பாடுகளின் செயல்விளக்க மாதிரிகளும், தாவரவியல் துறை சார்பில் காளான் வளர்ப்பு, தாவரங்க ளின் வளர்ப்பு, கடல் பாசி களின் பயன்கள் குறித்தும் காட்சிப் படுத்தப்பட்டு இருந்தது.

    ஆதித்தனார் கல்லூரி இயற்பியல் துறைத்தலைவர் பாலு, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் ஜான்சிராணி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் உமா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த அறிவியல் படைப்பு களை தேர்வு செய்தனர். சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி மாவட்ட அலுவலர் குருநாதன் பரிசு, சான்றிதழ் களை வழங்கினார்.

    இதில் திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நி லைப்பள்ளி முைறயே முதல் 3 இடங்களை பிடித்தது. சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளி, பெரியதாழை லிட்டில் பிளவர் மேல்நி லைப் பள்ளிக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கி ணைப்பாளர் ஸ்ரீதேவி, அமைப்பு செயலாளர் அபுல்கலாம் ஆசாத் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.

    • அய்யநாடார்-ஜெயலட்சுமி அம்மாள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகளின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரையில் உள்ள எம்.கே.ஆர். அய்யநாடார்-ஜெயலட்சுமி அம்மாள் ஆங்கிலப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இஸ்ரோ முன்னாள் இயக்குநர் அதிபகவான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இஸ்ரோ விஞ்ஞானி சிவசுப்பிர மணியன் சிறப்புரையாற்றி னார். அறிவியல் கண்காட்சியில் இதயம் ராஜேந்திரன் ரெசிடென்சியல் பள்ளி முதலிடத்தை வென்று பரிசு பெற்றது. 2ம் இடத்தை வி.எம்.ஜே. பள்ளி பிடித்தது.

    இந்த கண்காட்சியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளின் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு பதக்கங்கள், பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த விழாவுக்கு பள்ளி தலைவர் ஜெமினி பால்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சோமசுந்தரம், செயலாளர்-தாளாளர் காசிமணி, பொருளாளர் பாலசுப்பிரமணியன், மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி துணைச்செயலாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • இல்லம் தேடி கல்வி சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • இதில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வருகை புரியும் மாணவ-மாணவிகள் அறிவியல் கண்காட்சியை அமைத்திருந்தனர். இதனை 100-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தன்னார்வலர் ஈஸ்வரி, தனது உயர் தொடக்க நிலை மையத்திற்கு வருகை புரியும் மாணவ-மாணவிகளை கொண்டு இந்த கல்வியாண்டு முழுவதும் கற்றுக்கொண்ட அறிவியல் பாடத்தின் அடிப்படையில் இந்த கண்காட்சியை அமைத்திருந்தார்.

    இதை இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், திறந்து வைத்து பேசினார். இதில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தி இருந்தனர். இதனை தன்னார்வலர்கள் சிவரஞ்சினி, சிவமதி, பாண்டிச்செல்வி, பெற்றோர்கள் மற்றும் பிற பள்ளி மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

    • உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியின் ஆரம்ப பிரிவில் மாணவர்களின் அறிவியல் திறன்களை வெளிக்கொணர அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • இக்கண்காட்சியில் 225 தனிநபர் அறிவியல் திட்டங்கள் மற்றும் 7 குழும அறிவியல் திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

    புதுச்சேரி:

    உப்பளம் பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியின் ஆரம்ப பிரிவில் மாணவர்களின் அறிவியல் திறன்களை வெளிக்கொணர அறிவியல் கண்காட்சி மாணவர்களின் பங்கேற்புடன் பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜின் வழிநடத்துதலில் நடை பெற்றது.

    இக்கண்காட்சி மற்றும் 2 நாட்கள் நடக்கிறது.

    முதல் நாளான மாணவர்களின் பார்வைக்கும் 2-வது நாள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பார்வைக்கும் நடைபெறுகிறது.

    இக்கண்காட்சியில் 225 தனிநபர் அறிவியல் திட்டங்கள் மற்றும் 7 குழும அறிவியல் திட்டங்களும் இடம்பெற்றிருந்தன.

    இன்று சிறப்பு விருந்தினராக உதயகுமார் ஐ.ஏ.எஸ். மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட பேராயர் யுவான் அம்ரோஸ் மற்றும் பாதிரியார் ஜோசப்ராஜ் ஆகியோர் பங்கேற்று அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் மாதிரிகளை கண்டும் கேட்டும் பாராட்டினர்.

    இதனை தொடர்ந்து சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    • இளையான்குடி கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.
    • சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இயற்பியல்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் 2 நாட்கள் நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி இயற்பியல்துறை சார்பில் அறிவியல் கண்காட்சி மற்றும் கோளரங்கம் 2 நாட்கள் நடந்தது. கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான், கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் கண்காட்சியை தொடங்கி வைத்தனர். இயற்பியல் துறை மாணவ-மாணவிகள் அறிவியல் மாதிரிகளை காட்சிப்படுத்தி விளக்கினர். இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். கல்லூரி ஆட்சிக்குழு பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அபூபக்கர் சித்திக், சிராஜுதீன், அல்ஹாஜ், நசீர் கான், அப்துல் சலீம், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்வில் 

    • ரூ.50 கோடியில் கட்டப்பட்டு வருகிறது
    • போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு சாலையை அகலப்படுத்த அறிவுரை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம் பூர், வாணியம்பாடி பகு திகளில் மழைகாலங்களில் வெள்ள பெருக்கு காரணமாக பல்வேறு கிராமங்களை இணைக்கும் தரை பாலம் சேதமடைந்தால் போக்குவரத்து நடைபெறுவது சிரமமாக இருந்தது.

    அரசு இந்த 22 தரை பாலங்களில் 14 உயர்மட்ட பாலங்களை ரூ.30 கோடியில் மாற்றி அமைக்க அரசு ஆணையிட்டு அதன் படி கந்திலி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஊராட்சி பகுதிகளில் உள்ள சின்னராம்பட்டி, உடையமுத்தூர், ஏழருவி, செலந்தம்பள்ளி, சொர்க யல்நத்தம், பச்சூர், கொத்தூர், அரங்கல்துர்கம், ஆலாங்காயம், பகுதியில் பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதனை திருவண்ணா மலை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ேநரில் சென்று பணிகள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்தார்.

    மேலும் நாட்றம்பள்ளி - புதூர்நாடு செல்லும் 14 கி.மீ. சாலை 40 கிராமங்களுக்கு செல் லும் சாலையாக உள்ளது. தற்போதுரூ 4, கோடியில் இச்சாலையில் 14 கி.மீ. நீளத்திற்கு வனத் துறை அனுமதியுடன் சாலை பணிகள் மற்றும் தடுப்பு சுவர் பணிகள் நடந்து வருகிறது. இப்ப ணிகளில் சாலையின் அகலம், தடுப்புசுவரின் உறுதிதன்மையை ஆய்வு செய்து பணியை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க அறிவுறுத்தினார்கள்.

    தர்மபுரி சாலை குனிச்சி பகுதியில் நடை பெறும், சாலை விரிவாக்க பணி, ஏலகிரி மலை சாலையில் போடப்பட்டுள்ள தார் சால ரமாக அகை்கப்படுகிறதா? போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள ஆம்பூர் நகரம் மற்றும் பேர்ணாம்பட்டு சாலை பகுதிகளை ஆய்வு செய்து இச்சாலைகளை போக்குவரத்து நெரிசல் ஏற்படதவாறு சாலையை அகலப்படுத்த அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது உதவிக்கோட்டப் பொறியாளர்கள் மீ.மணி சுந்தரம், ஜெ.அன்புஎழில், உதவிப்பொறியாளர் வெ.சீனிவாசன் உட்பட பலர் இருந்தனர்.

    • முதல் பரிசு பெறும் மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து செல்ல உள்ளனர்
    • ஏராளமானோர் கலந்து கொணடனர்

    திருப்பத்தூர்:

    ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள யுனிவர்சல் மெட்ரிகுசன் பள்ளி சார்பில் அறிவியல் கண் காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி சேர்மன் டாக்டர் எம்.. சிவப்பிரகாசம் தலைமை வகித்தார்.

    தாளாளர் தீபா சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கிரிநாத் வரவேற்றார். கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் (இஸ்ரோ) எச்.போஜ்ராஜ். பி.சோமா. எம்.வி. கண் ணன், டி.கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் தனியார் பள்ளி மாணவர்களின் அனைத்து கண்டுபிடிப் புகள் அடங்கிய 4 அரங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

    இதில் மங்கள்யான், இன்சாட், உப்பு நீரில் இயங்கும் இரு சக்கர வாகனம், உப்பு நீரில் இயங்கும் வெல்டிங் மெஷின், இருதய துடிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை உணர்வு பூர்வமாக செய்து இருந்தனர்.

    அந்த அரங்குகளை பார்வையிட்டு 4 அரங்குகளில் சிறந்த அரங்கு என்று தேர்ந்தெடுத்து முதல் பரிசு பெறும் அரங்கு மாண வர்களை இஸ்ரோவுக் கும், இரண்டாம் பரிசு பெறும் மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் அழைத்து செல்ல உள்ளனர்.

    ஒவ்வொரு மாணவர்களுக்குள் அடங்கிய திறமைகளுக்கு ஏற்ப பயிற்சி அளித்து அவர்களை வரும் காலத்தில் சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.

    இந்த நிகழ்வில் பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவர்களின் கண்டு பிடிப்பை ஆச்சர்யத்து டன் பார்த்து சென்றனர்.

    இந்த நிகழ்வில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் 'கலந்து கொண்டனர். இதில் பள்ளி துணை முதல்வர் இளங்கோவன் நன்றி கூறினார்.

    • மதகடிப்பட்டில் உள்ள பாரததேவி ஆங்கில உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
    • கண்காட்சிக்கு பள்ளியின் தாளாளர் இளமதியழகன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டில் உள்ள பாரததேவி ஆங்கில உயர் நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளியின் தாளாளர் இளமதியழகன் தலைமை தாங்கினார். மாநில சுயநிதி தனியார் பள்ளிகள் சங்க கூட் டமைப்பு தலைவர் ரங்கநாதன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    சங்க பொதுச்செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிவசுப்பிரமணியன், நிர்வாகிகள் சம்பத், சுப்பிரமணி, தனசெல்வம் ஆகியோர் அறிவியல் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்டனர். கண்காட்சியில் தானியங்கி அறிவியல் சாதனங்கள், ரோபோ விண்வெளி மனிதன், இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கணிப்பொறியின் அடுத்த கட்ட வளர்ச்சி, விமான பயன்பாடு, குடிநீர் சுத்திகரிப்பு உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

    கண்காட்சியை அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவர்கள் நேரில் வந்து பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர்கள் தேவி, சரவணன், ஆசிரியர்கள் வாசுகி, கலையரசி, சர்மிளா, தமிழரசி, ரம்யா , பிரித்திகா மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    • மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த வல்லம் கேகேஎஸ் மணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 13ம்தேதி அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

    தாளாளர் ஜனார்த்தனம், பள்ளி முதல்வர் கருணாமூர்த்தி உள்பட மாணவ மாணவிகள் பார்வையிட்டனர்.

    சிறப்பு அழைப்பாளராக வேலூர் ஆக்சலியம் கல்லூரி பயோ கெமிஸ்ட்ரி உதவி பேராசிரியர் டாக்டர் அபிபுல்லா கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு சிறப்பான கண்காட்சி அமைத்திருந்த மாணவ மாணவிகள் தேர்வு செய்தார்.

    முன்னதாக காலையில் நடந்த இறை வணக்கக் கூட்டத்தில், அபாகஸ் பிரிவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் பரிசுகள் வழங்கப்பட்டது.

    • ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி போட்டி நடந்தது.
    • மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கி ணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம்செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவி லான அறிவியல் கண்காட்சி நிறைவு விழா தாளாளர் டாக்டர் சின்னத்திரை அப்துல்லா தலைமையில் நடந்தது.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் இடம் பெறச் செய்தனர். முதல்வர் பெரியசாமி வரவேற்றார்.

    ராமநாதபுரம் ஜெயம் சாப்ட்டுவேர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சங்கர் கலந்து கொண்டு பேசினர். இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான போட்டியில் நேசனல் அகாடமி மாண்டிசோரி பள்ளியை சேர்ந்த மாணவி பூர்விகா, கீர்த்திகா மற்றும் அஸ்மியா பேகம் முதல் பரிசையும், செய்யது அம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அசோகமித்ரன், ஆனந்தலட்சுமி 2-வது பரிசையும், மதுரை தனியார் பள்ளியை சேர்ந்த கிஸ்வர் ஜகான் 3-வது பரிசையும் பெற்றனர்.

    பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கான போட்டி யில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹிதாயத்துல்லா முதல் பரிசையும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிலோபர் நிசா 2-வது பரிசையும், செய்யது அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்ந்த அகில் பாகீம், சுபாஷ், முகமத்துல் பாஸி, நேஷனல் அகாடமி மாண்டிசோரி பள்ளி மாணவர் நந்து மகேந்திரன், சிவகங்கை மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுந்தர வரதன் ஆகியோர் 3-வது பரிசையும் பெற்றனர். நடுவர்களாக வானதி அமலன், நாசர் ஆகியோர் பணியாற்றினர். மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கி ணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா நன்றி கூறினார்.

    ×