திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி

போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர் என 331 பேர் பங்கேற்றனர்.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 60 கோப்பைகள், 30 தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன் வழங்கினார்.
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது. ஆதித்தனார் கல்லூரி செஸ் கிளப், செந்தூர் தாலுகா செஸ் கழகம் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர் என 331 பேர் பங்கேற்றனர். 10 மற்றும் 15 வயதுக்கு உட்பட்டோர், பொதுப்பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, போட்டிகளை தொடங்கி வைத்தார். கல்லூரி உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் வரவேற்று பேசினார். செந்தூர் தாலுகா செஸ் கழக தலைவர் டாக்டர் வெற்றிவேல் வாழ்த்தி பேசினார். மாவட்ட செஸ் கழக செயலாளர் கற்பகவல்லி முதன்மை நடுவராக செயல்பட்டார்.

பின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு 60 கோப்பைகள், 30 தங்கப் பதக்கங்கள், சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் மகேந்திரன் வழங்கினார். பொதுப்பிரிவினருக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மகேந்திரன் ஆலோசனையின்பேரில், செஸ் கிளப் இயக்குனர் மோதிலால் தினேஷ் மற்றும் செஸ் கிளப் மாணவ உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com