search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "abduction"

    • வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மதுரை

    செல்லூர் மணவாளநகர் ஜீவானந்தம் தெருவை சேர்ந்த ரவி மகன் செல்வகுமார் (23). இவர் நேற்று தத்தனேரி களத்துப் பொட்டல் காமராஜர் தெருவில் நடந்து சென்றார். அங்கு வந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.1200-ஐ பறித்து தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்தாஸ்புரம், பிள்ளையார் கோவில் தெரு கணேசன் மகன் வினோத்குமார் (22) என்பவரை கைது செய்தனர்.

    பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி (47). இவர் நேற்று சுந்தரராஜபுரம் அம்மா மெஸ் அருகில் நடந்து சென்றார். அப்போது சோலை அழகுபுரம், பகவதி அம்மன் கோவில் தெரு, மணிகண்டன் என்ற புழுக்கை மணி (36) என்பவர் கத்தியை காட்டி மிரட்டி ரூ.300-ஐ பறித்து தப்பினார். இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்த்ரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து புழுக்கை மணியை கைது செய்தனர்.

    • ஆசையாக வளர்த்த எனது நாயை மீட்டு தரவேண்டும்.
    • கால்நடைத்துறை அதிகாரிகள் அந்த நாயை பிடித்து மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    நாங்குநேரி:

    வள்ளியூர் வீட்டு வசதி வாரியகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அம்பிகாபதி. இவரது மகள் மனோகரி. இவர் ராதாபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார்.இவர் இன்று வள்ளியூர் போலீசில் அளித்த புகார் மனுவில், நான் வேலைக்கு செல்லும்போது எனது வீட்டுக்கு காவலாக இருந்த எனது நாயை நேற்று மதியம் சிலர் லோடு ஆட்டோவில் கடத்தி கொண்டு சென்று விட்டனர்.

    அந்த நபர்களை கண்டறிந்து நான் தட்டிக்கேட்டபோது எனக்கு கொலைமிரட்டல் விடுக்கின்றனர். எனவே நான் ஆசையாக வளர்த்த எனது நாயை மீட்டு தரவேண்டும். கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இதற்கிடையே அந்த புகார் மனுவின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், மனோகரி வளர்த்து வந்த நாய் கடந்த சில நாட்களாக அந்த தெருவில் உள்ளவர்களை கடித்துள்ளது. இதனால் அந்த நாயை பிடிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

    அதன்அடிப்படையில் கால்நடைத்துறை அதிகாரிகள் அந்த நாயை பிடித்து மதுரைக்கு அனுப்பி வைத்துள்ளனர். யாரும் கடத்தவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் அறிவுரை கூறி போலீசார் அனுப்பிவைத்தனர்.

    புதுச்சேரியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் மதுபாட்டில் கடத்தியதாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று முதலியார் பேட்டை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரமாக ரோந்து செல்லுமாறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபத்திரசாமி, தமிழரசன் மற்றும் போலீசார் மரப்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது தேங்காய்திட்டு பகுதியில் இருந்து 2 பேர் 2 ஸ்கூட்டியில் வந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களிடம் விசாரித்த போது ஸ்கூட்டியில் இருந்த பைநிறைய மதுபாட்டில்கள் இருந்தது.

    மேலும் சீட்டுகளின் உள்பகுதியிலும் மது பாட்டில்கள் மறைத்து வைத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த தியாகு (வயது 30) டாட்டா ஏசி டிரைவர் என்பதும், மற்றொருவர் பாலு (35) தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது.

    அவர்கள் இருவரும் புதுவையில் பல்வேறு இடங்களில் மது பாட்டில்களை வாங்கி மரக்காணத்தை அடுத்த கூனிமேடுக்கு கடத்த பாலுவின் வீட்டில் வைத்துள்ளனர்.

    பகல் நேரங்களில் மது கடத்தினால் போலீசாரிடம் மாட்டிவிடுவோமோ? என்று நினைத்து அதிகாலையில் கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து 800 மதுபாட்டில்களும், அவர்கள் ஓட்டி வந்த 2 ஸ்கூட்டியையும் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்த போலீசார் மது பாட்டில்களையும் அவர்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

    புதுவைலிங்காரெட்டி பாளையத்தில் காட்டேரிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி அவர்களிடம் இருந்த ஒரு பையை சோதனையிட்ட போது அதில், 37 லிட்டர் பாக்கெட் சாராயத்தை தமிழக பகுதிக்கு கடத்தி செல்ல இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சாராயம் கடத்திய சந்தைக்புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த அருண் (23), மூர்த்தி (24) ஆகியோரை கைது செய்தனர்.

    இதேபோல் பாண்கோஸ் பள்ளி அருகே நடத்திய சோதனையிலும் 48 மதுப்பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர் அதை கடத்தி வந்தவர் பேராவூரை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. பின்னர் சுரேசை கைது செய்தனர்.

    மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம், மது பாட்டில்களை போலீசார் கலால்துறையினரிடம் ஒப்படைத்தனர். #tamilnews

    தண்டையார்பேட்டை போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆட்டோவில் குட்கா கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    ராயபுரம்:

    தண்டையார்பேட்டை போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருவொற்றியூர்- தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் மூட்டைகளை ஏற்றிவந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் குட்கா, போதை புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன.

    இந்த ஆட்டோவை கொடுங்கையூரை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ஓட்டி வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது, தண்டையார்பேட்டையை சேர்ந்த முருகன் வீட்டில் இருந்து குட்கா மூட்டைகளை ஏற்றி வந்ததாக கூறினார்.

    முருகனிடம் விசாரித்த போது வெளி மாநிலங்களில் இருந்து குட்கா, போதை புகையிலை பாக்கெட்டுகளை வரவழைத்து சென்னையில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்தது தெரியவந்தது. ஆட்டோவில் ஏற்றி வந்த குட்கா, புகையிலை மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம்.

    ஆட்டோ டிரைவர் விஜயகுமார், குட்கா வியாபாரி முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெறுகிறது.

    மாணவி கடத்தலை தடுக்க உதவிய செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டி பரிசு வழங்கினார்.
    காங்கேயம்:

    காங்கேயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறுதொழுவு தேவனபாளையம் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி நேற்று முன்தினம் மாலையில் பள்ளி கூடம் முடித்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி, மாணவிக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்து பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசன்(வயது 60) என்பவர் இதுகுறித்து அந்த ஆசாமியிடம் கேட்டுள்ளார்.

    மேலும், இதுகுறித்து உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த ஆசாமி பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜிஜந்தர்(25) என்பதும், இவர் பிஸ்கெட் வாங்கி கொடுத்து மாணவியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கடத்தப்பட்டதை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க உதவியாக இருந்த முருகேசனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டி பரிசு வழங்கினார். 
    பரமத்திவேலூர் அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கு.அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 46). இவர் டிராக்டரில் பிளிக்கல் பாளையம் காவிரி ஆற்றில் நள்ளிரவு மணல் அள்ளிக் கொண்டு அய்யம்பாளையம் பகுதியை நோக்கி சென்றார்.

    அப்போது கரட்டூர் முருகன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஜேடர் பாளையம் போலீசார் டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை போட்டனர். இந்த மணலை அரசு அனுமதி இல்லாமல் அள்ளி, திருட்டு தனமாக கடத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுப்பிரமணி கைது செய்யப்பட்டார்.

    அவருடைய டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் நள்ளிரவு நேரங்களில் காவிரி ஆற்றில் திருட்டு தனமாக வாகனங்களில் மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் கூறினர்.

    ×