search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவி கடத்தலை தடுக்க உதவிய செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு
    X

    மாணவி கடத்தலை தடுக்க உதவிய செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு

    மாணவி கடத்தலை தடுக்க உதவிய செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டி பரிசு வழங்கினார்.
    காங்கேயம்:

    காங்கேயம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறுதொழுவு தேவனபாளையம் பகுதியை சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் மாணவி நேற்று முன்தினம் மாலையில் பள்ளி கூடம் முடித்து வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம ஆசாமி, மாணவிக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்து பஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்து சந்தேகம் அடைந்த அந்த பகுதியில் செருப்பு தைக்கும் தொழிலாளி முருகேசன்(வயது 60) என்பவர் இதுகுறித்து அந்த ஆசாமியிடம் கேட்டுள்ளார்.

    மேலும், இதுகுறித்து உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த ஆசாமி பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜிஜந்தர்(25) என்பதும், இவர் பிஸ்கெட் வாங்கி கொடுத்து மாணவியை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி கடத்தப்பட்டதை கண்டு உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்து, குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க உதவியாக இருந்த முருகேசனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பாராட்டி பரிசு வழங்கினார். 
    Next Story
    ×