search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Teen suicide"

    • உடலை மீட்டு பிரேத பரிசோதனை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி காந்தி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் சவுமியா சுந்தரி (வயது 27). எம்.எஸ்.சி பட்டதாரி.

    சவுமியா சுந்தரி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சவுமியா சுந்தரியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாம்குமார், இவரது மனைவி சோனியா (வயது 23) இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

    சோனியாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன உளைச்சலில் காணப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சோனியா வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார்.

    இதை கண்ட அவருடைய கணவர் சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சோனியா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஷம் குடித்து மயங்கி கிடந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்,

    காட்பாடி அடுத்த கன்னிகாபுரம் விநாயகர் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 17).

    இந்த நிலையில் ராஜேஸ்வரி அடிக்கடி செல்போன் பார்த்து வந்தார்.

    இதனால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ராஜேஸ்வரி மன உளைச்சலில் காணப்பட்டார்.

    கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து ராஜேஸ்வரி மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட பெற்றோர் மயங்கி கிடந்த மகளை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி நேற்று பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேல்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப தகராரில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    கலவை:

    கலவை அடுத்த அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(28). இவரது மனைவி நித்யா. தம்பதியினருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    நந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நந்தகுமார் நேற்று மீண்டும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

    அப்போது கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நந்தகுமாரை, நித்யா திட்டியுள்ளார். இதனால் மணமடைந்த நந்தகுமார் வீட்டில் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த தகவல் அறிந்த கலவை போலீசார் விரைந்து சென்று, தீயணைப்புத்துறையினர் உதவியுடன் நந்தகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 முறை தேர்வாகாததால் மன உளைச்சலுடன் காணப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    வேலுார்:

    சேண்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் முன்னாள் ராணுவ வீரர்.

    இவரது மனைவி சொர்ணலதா. தம்பதியினருக்கு லோகேஷ் (21) உட்பட 3 மகன்கள் உள்ளனர்.

    லோகேஷ் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ராணுவத்தில் சேர முயற்சி செய்து வந்தார்.

    இதற்கிடையில் அவரது தம்பி கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆள் சேர்ப்பு முகாமில் ராணுவத்துக்கு தேர்வு பெற்றார்.

    ஆனால் லோகேஷ் 3 முறை ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்துகொண்டும் தேர்வாகாததால் மன உளைச்சலுடன் காணப்பட்டார்.

    இதனால் விரக்தியடைந்த லோகேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீனாட்சி மயிலாடுதுறையில் உள்ள தனியார் துணிக்க டையில் வேலை செய்து வருகிறார்.
    • ஸ்ரீமதியை பொறுப்பு இல்லாமல் இருக்கிறாயே என சாதாரணமாக மகளை திட்டி உள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நிரவி நாகதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு ஸ்ரீமதி (வயது18), மோனிகா (8) என்ற 2 மகள்கள் இருந்தனர். பாலமுருகன் கோயம்புத்தூரில் தங்கி வேலை செய்து வருகிறார். மீனாட்சி மயிலாடுதுறையில் உள்ள தனியார் துணிக்க டையில் வேலை செய்து வருகிறார். மீனாட்சி தனது மகளிடம் சமையல் செய்யச்சொல்லி விட்டு வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். ஸ்ரீமதி டி.வி. பார்த்துகொண்டே சமையல் செய்ததால், பொறியல் கருகியது.

    இதைத்தொடர்ந்து, ஸ்ரீமதியை பொறுப்பு இல்லாமல் இருக்கிறாயே என சாதாரணமாக மகளை திட்டிவிட்டு, மீனாட்சி வேலைக்கு சென்று விட்டார். வேலைக்கு சென்ற மீனாட்சி வரும் நேரத்தில், ஸ்ரீமதி வீட்டில் புடவையில் தூக்கு போட்டு கொண்டுள்ளார். இதை பார்த்த மீனாட்சி சத்தம் போடவே, அருகில் இருந்த உறவினர்கள் ஓடிச் சென்று ஸ்ரீமதியை தூக்கிலிருந்து இறக்கி, அருகில் இருந்த நிரவி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சை க்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசேதித்த டாக்டர், ஸ்ரீமதி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மீனாட்சி, நிரவி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    காட்பாடி பிள்ளையார் கோவில் ஏரிமுனையை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 34), லாரிக்கு பாடி கட்டும் தொழில் செய்து வந்தார்.

    இவரது மனைவி இளவரசி (31). தம்பதிக்கு தனுஷ் (11), சிவகார்த்திக் (9) என இரண்டு மகன்கள் உள்ளனர். ரஞ்சித் குமார் கடந்த 14-ந் தேதி மாலை தனது நண்பர்களுடன் காட்பாடி ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

    கணவர் இறந்த துக்கம் தாளாமல் இளவரசி மன வேதனை அடைந்தார்.யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார்.

    நேற்று இரவு வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் உணவு சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவு எழுந்து பார்த்த போது இளவரசியை காணாததால் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இளவரசியின் உறவினர்கள் இரவு முழுவதும் அவரை தேடிப் பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் இளவரசி பிணமாக மிதந்தார்.

    போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். இளவரசியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இளவரசி தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை மலைக்கு நேற்று இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்றார்.

    மலை உச்சிக்கு சென்ற அவர் திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதில் வாலிபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இன்று காலை மலைக்கு சென்றவர்கள் வாலிபர் பிணம் இருப்பதைக் கண்டு மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காதல் தோல்வியில் வாலிபர் மலையில் இருந்து குதித்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? வேறு யாராவது வாலிபரை மலையில் இருந்து தள்ளி கொலை செய்தார்களா அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் கம்யூட்டர் என்ஜினீயர்-வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகரை சேர்ந்தவர் அனந்த சிவராமன்(வயது27) கம்யூட்டர் என்ஜினீயர். இவரது மனைவி அபிநயா. அனந்த சிவராமன் கடந்த 5 நாட்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

    மன சோர்வுடன் இருந்த அவர் வீட்டின் மாடியில் தூங்கச் சென்றார். இந்தநிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதுபற்றி அவரது சகோதரர் ஆனந்தராமன் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனந்த சிவராமன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேல ஆவாரம்பட்டி அழகத்தான் குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45).

    இவர் கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது இடது கை செயலற்று போனது. இதனால் அவர் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தென்னைக்கு வைக்கும் குருணை மருந்தை சாப்பிட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

    உறவினர்கள் அவரை உடனடியாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் முத்துக்குமாரின் மனைவி அழகம்மாள் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினர்கள் அதிர்ச்சி
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடி யாத்தம் பிச்சனூர் வாரியார் நகரை சேர்ந்தவர் குமாரவேல், இறைச்சிக்கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் நரேந்திரன் (வயது 23). இவர் தந்தைக்கு உதவியாக ஓட்டலை கவனித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நரேந்திரன் நேற்று அதிகாலை நண்பர்களுக்கு வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் தான் தற்கொலை செய்து கொள்வதாக தகவல் அனுப்பி விட்டு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சமூக வலைதளங்களில் தகவலை பார்த்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக நரேந்திரனின் வீட்டுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டில் சென்று சென்று பார்த்த போது வீட்டில்நரேந்திரன்தூக்கில் பிணமாக கிடந்தார்.

    இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்று நரேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் நரேந்திரனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வாலிபர் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி நடந்தது
    • போலீசார் பேச்சுவார்த்தை

    செய்யாறு:

    செய்யாறு கொட நகர் அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 26) .இவரது மனைவி ரூபினி (25). இவர்களுக்கு கிருத்திக் என்ற 1½ வயது ஆண் குழந்தை உள்ளது. திருநாவுக்கரசு செய்யாறு மாங்கால் கூட்ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

    அதில் பங்குதாரராக இருந்த ஒருவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகி விட்டார். அவர் உட்பட 5 பேர் கொண்ட கும்பலுடன் சென்று தனது பங்குத்தொகை ரூ. 60 ஆயிரத்தை கேட்டு கடந்த 27-ந் தேதி திருநாவுக்கரசை மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அந்த கும்பல் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இரு சக்கர வாகனத்தை பறித்து கொண்டு நிதி நிறுவனத்தை பூட்டிச் சென்றதாகவும் தெரிகிறது. பின்னர் மறுநாள் 28-ந் தேதி காலையில் பொன்னியம்மன் கோவில் அருகே திருநாவுக்கரசை மீண்டும் அழைத்து பணம் கொடுத்துவிட்டு சாவி வாங்கிக் கொண்டு செல் என்று கூறி அவரை மீண்டும் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருநாவுக்கரசு 29-ந் தேதி காலை மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதனைக் கண்ட அவரது மனைவி ரூபினி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் செய்யாறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் திருநாவுக்கரசு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ரூபிணி தனது கணவர் சாவுக்கு 5 பேர் கொண்ட கும்பல் தான் காரணம் அவர்களை கைது செய்யக்கோரி உறவினர்களுடன் ஆற்காடு செய்யாறு சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து வந்த செய்யாறு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்தச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவருடன் தகராறில் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பென்னாத்தூர் கேசவபுரத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 30). இவருடைய மனைவி சந்தியா (27) தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    மணிவண்ணன் வேலூரில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களது மகள் கீர்த்திகா (2) சில மாதங்களுக்கு முன்பு மணிவண்ணன் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

    இந்த நிலையில் தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் நேற்றும் தகராறு ஏற்பட்டது.

    இதைதொடர்ந்து மணிவண்ணன் வெளியே சென்று விட்டார். அவரது பெற்றோரும் நிலத்திற்கு சென்றிருந்தனர். அந்த நேரத்தில் சந்தியா அவரது மகள் கீர்த்திகாவை கழுத்தை நெரித்து கொன்று விட்டு அவரும் தூக்கில் தொங்கினார்.

    வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய மணிவண்ணன் குழந்தை பிணமாக வும், மனைவி தூக்கில் தொங்கியதை கண்டு அலறி கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். சந்தியாவை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேலூர் தாலுகா போலீசார் உடல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி சில ஆண்டுகளே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

    மணிவண்ணனின் தங்கை அதே பகுதியில் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சந்தியாவிற்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இது சம்பந்தமாக சந்தியா மணிவண்ணன் தம்பதிய இடையே கடந்த ஒரு வாரமாக சண்டை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மனமுடைந்த சந்தியா 2 வயது மகளை கொன்று விட்டு தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×