கம்யூட்டர் என்ஜினீயர்-வாலிபர் தற்கொலை

விருதுநகரில் கம்யூட்டர் என்ஜினீயர்-வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்யூட்டர் என்ஜினீயர்-வாலிபர் தற்கொலை
Published on

விருதுநகர்

விருதுநகரை சேர்ந்தவர் அனந்த சிவராமன்(வயது27) கம்யூட்டர் என்ஜினீயர். இவரது மனைவி அபிநயா. அனந்த சிவராமன் கடந்த 5 நாட்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.

மன சோர்வுடன் இருந்த அவர் வீட்டின் மாடியில் தூங்கச் சென்றார். இந்தநிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுபற்றி அவரது சகோதரர் ஆனந்தராமன் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனந்த சிவராமன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேல ஆவாரம்பட்டி அழகத்தான் குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45).

இவர் கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது இடது கை செயலற்று போனது. இதனால் அவர் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தென்னைக்கு வைக்கும் குருணை மருந்தை சாப்பிட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார்.

உறவினர்கள் அவரை உடனடியாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் முத்துக்குமாரின் மனைவி அழகம்மாள் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com