ஆலங்காயம் அருகே இளம்பெண் தற்கொலை

குழந்தை இல்லாத ஏக்கத்தில் விபரீதம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம் அருகே இளம்பெண் தற்கொலை
Published on

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த பெத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாம்குமார், இவரது மனைவி சோனியா (வயது 23) இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

சோனியாவிற்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மன உளைச்சலில் காணப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி சோனியா வீட்டில் இருந்த மாத்திரைகளை அதிகமாக தின்று தற்கொலைக்கு முயன்றார்.

இதை கண்ட அவருடைய கணவர் சோனியாவை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி சோனியா பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com