வள்ளிமலை உச்சியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை போலீசார் விசாரணை
வள்ளிமலை உச்சியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
Published on

வேலூர்:

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலை மலைக்கு நேற்று இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்றார்.

மலை உச்சிக்கு சென்ற அவர் திடீரென அங்கிருந்து கீழே குதித்தார். இதில் வாலிபரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இன்று காலை மலைக்கு சென்றவர்கள் வாலிபர் பிணம் இருப்பதைக் கண்டு மேல்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கும்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காதல் தோல்வியில் வாலிபர் மலையில் இருந்து குதித்து இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? வேறு யாராவது வாலிபரை மலையில் இருந்து தள்ளி கொலை செய்தார்களா அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com