செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

விஷம் குடித்து மயங்கி கிடந்தார் போலீசார் விசாரணை
செல்போன் பார்ப்பதை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
Published on

வேலூர்,

காட்பாடி அடுத்த கன்னிகாபுரம் விநாயகர் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 17).

இந்த நிலையில் ராஜேஸ்வரி அடிக்கடி செல்போன் பார்த்து வந்தார்.

இதனால் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் ராஜேஸ்வரி மன உளைச்சலில் காணப்பட்டார்.

கடந்த 28-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து ராஜேஸ்வரி மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட பெற்றோர் மயங்கி கிடந்த மகளை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மேல்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com