search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student kidnap"

    • சிறுமியை ஈத்தாமொழி அருகே சுண்டபற்றி விளையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் செல்வகுமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    குளச்சல்:

    நெல்லை மாவட்டம் ராதாபும் பண்டாரக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுடலை.

    இவரும், இவரது மனைவி முத்துபேச்சியும் கடந்த ஒரு வருடமாக குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே பெரியவிளை கடற்கரை பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களது 14 வயது சிறுமி ராதாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறுமி பெரியவிளை வந்து பெற்றோருடன் தங்கினாள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோருடன் படுத்து தூங்கிய சிறுமியை காணவில்லை.

    சிறுமியை ஈத்தாமொழி அருகே சுண்டபற்றி விளையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி செல்வகுமார் (35) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து தாயார் முத்துபேச்சி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வகுமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

    • கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    • மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    ஈத்தாமொழி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடினார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த 3 குழந்தைகளின் தந்தை ஒருவரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது. எனவே போலீசாருக்கு அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. சிறுமியை அந்த வாலிபர் கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதினார்கள்.

    அந்த வாலிபரின் செல்போன் எண்ணை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். செல்போன் டவர் உதவியுடன் சிறுமியை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அந்த நபரின் செல்போன் டவர் நாகப்பட்டினத்தில் இருப்பது தெரியவந்தது. உடனே கன்னியாகுமரி மகளிர் போலீசார் நாகப்பட்டினம் விரைந்து சென்றனர். அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது வாடகை வீட்டில் சிறுமியுடன் 3 குழந்தைகளின் தந்தை குடும்பம் நடத்தியது தெரியவந்தது.

    போலீசார் அந்த வாலிபரை பிடித்ததுடன் சிறுமியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறுமியையும், அந்த வாலிபரையும் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த வாலிபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 8-ம் வகுப்பு மாணவியை 3 குழந்தைகளின் தந்தை கடத்தி சென்று குடும்பம் நடத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மாணவியின் தந்தை அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவந்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தற்போது தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறி சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து மாணவியின் தந்தை அந்தியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் பகுதியில் ஒரு வாலிபருடன் மாயமான மாணவி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டு அந்தியூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றது அந்தியூர் அருகே உள்ள சொக்கநாதமலையூரை சேர்ந்த நல்லசாமி (23) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் நல்லசாமியை கைது செய்தனர். மேலும் அவரை பவானி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • போலீசார் 2 பேரை கைது செய்து மாணவியை எதற்காக காரில் கடத்தினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் சட்டக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கர்னூலை சேர்ந்த 24 வயது மாணவி ஒருவர் இறுதியாண்டு படித்து வருகிறார்.

    நேற்று மாலை கல்லூரி முடிந்து மாணவி தாமனேனி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.

    அப்போது காரில் வந்த 2 வாலிபர்கள் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக இழுத்து சென்று காரில் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்றனர்.

    பஸ் நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மாணவியை கடத்திச் சென்ற கார் எண்ணுடன் திருப்பதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து சித்தூர், ரேணிகுண்டா, திருச்சானூர், காளஹஸ்தி, கடப்பா உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அனைத்து போலீஸ் நிலையங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சாலைகளின் குறுக்கே தடுப்புகளை அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    சுமார் 2 மணி நேர வாகன தணிக்கைக்கு பிறகு ராஜம்பேட்டை நோக்கி வந்த காரை மறித்த போலீசார் அதிலிருந்து சட்டக் கல்லூரி மாணவியை மீட்டனர்.

    மேலும் மாணவியை கடத்திச் சென்ற வாலிபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் மாணவியின் சித்தப்பா மகன் வினய் தனது நண்பருடன் சேர்ந்து மாணவியை கர்னூலுக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

    போலீசார் 2 பேரையும் கைது செய்து மாணவியை எதற்காக காரில் கடத்தினார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் சட்டக் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சென்னை அரும்பாக்கத்தில் வீடுபுகுந்து பிளஸ்-2 மாணவியை கடத்தி மதுராந்தகம் கோவிலில் திருமணம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
    போரூர்:

    சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் (20). தனியார் நிறுவன ஊழியர். இவர் அதே பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி ஒருவரை காதலித்து வந்தார்.

    கடந்த 21-ந் தேதி மாணவியின் வீட்டிற்கு சென்ற பிரவீன் திருமணம் செய்து வைக்கும்படி அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்தனர்.

    இதையடுத்து பெற்றோர் முன்னிலையிலேயே மாணவியை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி பிரவீன் கடத்தி சென்று விட்டார். இதையடுத்து தனது மகளை வீடு புகுந்து கடத்தி சென்ற வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.

    கடத்தல் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரவீனை தீவிரமாக தேடி வந்தனர்.

    அப்போது பிரவீன் தனது காதலியை அவரது சொந்த ஊரான மதுராந்தகத்திற்கு கடத்தி சென்று அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து இருப்பது தெரியவந்தது.

    மேலும் அங்குள்ள உறவினர் வீட்டில் மாணவியுடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை பத்திரமாக மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    கோடம்பாக்கத்தில் காணாமல் போன மாணவியை கொடைக்கானலில் மீட்ட காவல்துறையினர் இது தொடர்பாக வாலிபரை கைது செய்துள்ளனர்.
    போரூர்:

    கோடம்பாக்கம் வெள்ளார் தெருவை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணையில் கல்லூரி மாணவியை வடபழனி திருகுமரபுரத்தை சேர்ந்த முஸ்தபா என்பவர் கொடைக்கானலுக்கு கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் கொடைக்கானலுக்கு சென்று கல்லூரி மாணவியை மீட்டனர். இது தொடர்பாக முஸ்தபா மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். #tamilnews
    ×