என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "shocked"
- பார்சலை திறந்து பார்க்கையில் அதில் மண்டை ஓடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- சந்தேகத்தின் பேரில் 2 வாலிபர்களை திருவையாறு போலீசார் அழைத்து சென்று விசாரணை.
தஞ்சாவூர்:
தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள முகமதுபந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம். ஜமாத் தலைவர் .
இவருக்கு கடந்த 3-ந்தேதி இரவு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சல் அட்டைப்பெட்டியில் இருந்தது.
அந்த பார்சலை வாங்கி முகமது காசிம் வீட்டில் வைத்து விட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை தனது மகன் முகமது மகாதீர் என்பவரை அழைத்து பார்சலை திறந்து பார்க்குமாறு முகமது காசிம் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து முகமது மகாதீர் அந்த பார்சலை திறந்து பார்த்தார். அப்போது அதில் மண்டை ஓடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து திருவையாறு போலீசில் முகமதுகாசிம் புகார் செய்தார். அதன் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அப்பர், வேலாயுதம் மற்றும் போலீஸ்காரர்கள் முகமது காசிம் வீட்டிற்கு சென்று மனித மண்டை ஓடு இருந்த அட்டைப்பெட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தஞ்சை கீழவாசலை சேர்ந்த 2 வாலிபர்களை இன்று திருவையாறு போலீசார் சந்தேகத்தின் பேரில் திருவையாறு போலீஸ் நிலையத்தி ற்கு அழைத்து சென்றனர்.
அங்குவைத்து 2 வாலிபரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர்கள் தான் அந்த பார்சலை அனுப்பினார்களா? முன்விரோதம் காரணமாக அனுப்பப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பயிர்க்கடன் வழங்குவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
- பயிர் சாகுபடியை பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் அவகாசம், 6, 8 மாதம், ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் :
கூட்டுறவுத்துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. ஓராண்டு அவகாசத்துக்குள் திருப்பி செலுத்திவிட்டு அடுத்த 15 நாட்களுக்கு பிறகு மறு சாகுபடிக்கான கடனை பெற்று வருகின்றனர். தற்போது பயிர்க்கடன் வழங்குவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-
இம்முறை பயிர் சாகுபடியை பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் அவகாசம், 6, 8 மாதம், ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் அறுவடை முடிவதற்குள் பயிர்க்கடனை திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும். இல்லாவிட்டால் வட்டி சுமை ஏற்படும். விவசாயிகளின் வீடு ஒரு கிராமத்தில் இருக்கும். விளை நிலம் மற்ற கிராமங்களில் இருக்கும்.வீடு இருக்கும் கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்திலேயே பயிர்க்கடன் பெற்று வந்தனர். இனிமேல் விளைநிலம் உள்ள கிராமத்தில் தான் பயிர்க்கடன் பெற வேண்டும் என்கின்றனர். இது பல்வேறு பாதிப்புகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.
எனவே, பழைய முறைப்படி கூட்டுறவுக்கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஒருவர் கூறுகையில்,கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய விதிமுறைகள் எதுவும் அறிவிக்கவில்லை. பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கியதில் அரசுக்கு பல்வேறு சவால்களும், நெருக்கடியும் ஏற்பட்டது. அதற்காகவே பழைய விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன என்றார்.
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அலுவலர். இவரது மகன் செந்தில்குமார் (வயது 45). தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இவர், வங்கியில் தனிநபர் கடன் கேட்டு ரேஷன் கார்டு, ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தார். அதனை வங்கி மேலாளர் ஆய்வு செய்தபோது, அவரது பான் கார்டு எண்ணில் வந்த சான்றானது அதே பெயரில் வேறு ஒரு முகவரியை காண்பித்தது.
அதன் அடிப்படையில் செந்தில்குமார், கீழவாளாடியை சேர்ந்த மற்றொரு செந்தில்குமாரை நேரில் சந்தித்து விசாரித்தபோது, இருவரது பான் கார்டு எண்கள் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி ஆகியவை ஒரே மாதிரி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை அலுவலகத்தில் முறையிட முடிவு செய்துள்ளனர். #Pancard
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்