பார்சலில் வந்த மண்டை ஓடு விவகாரம்; 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை

பார்சலை திறந்து பார்க்கையில் அதில் மண்டை ஓடு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.சந்தேகத்தின் பேரில் 2 வாலிபர்களை திருவையாறு போலீசார் அழைத்து சென்று விசாரணை.
பார்சலில் வந்த மண்டை ஓடு விவகாரம்; 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை
Published on

தஞ்சாவூர்:

தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே உள்ள முகமதுபந்தர் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம். ஜமாத் தலைவர் .

இவருக்கு கடந்த 3-ந்தேதி இரவு கூரியர் மூலம் ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சல் அட்டைப்பெட்டியில் இருந்தது.

அந்த பார்சலை வாங்கி முகமது காசிம் வீட்டில் வைத்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை தனது மகன் முகமது மகாதீர் என்பவரை அழைத்து பார்சலை திறந்து பார்க்குமாறு முகமது காசிம் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து முகமது மகாதீர் அந்த பார்சலை திறந்து பார்த்தார். அப்போது அதில் மண்டை ஓடு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து திருவையாறு போலீசில் முகமதுகாசிம் புகார் செய்தார். அதன் பேரில் திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அப்பர், வேலாயுதம் மற்றும் போலீஸ்காரர்கள் முகமது காசிம் வீட்டிற்கு சென்று மனித மண்டை ஓடு இருந்த அட்டைப்பெட்டியை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தஞ்சை கீழவாசலை சேர்ந்த 2 வாலிபர்களை இன்று திருவையாறு போலீசார் சந்தேகத்தின் பேரில் திருவையாறு போலீஸ் நிலையத்தி ற்கு அழைத்து சென்றனர்.

அங்குவைத்து 2 வாலிபரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அவர்கள் தான் அந்த பார்சலை அனுப்பினார்களா? முன்விரோதம் காரணமாக அனுப்பப்பட்டதா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com