search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "restriction"

    • மாநகர போலீஸ் கமிஷனர் அறிவிப்பு
    • பட்டாசு வெடித்து பொதுமக்கள், உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை என்று எச்சரிக்கை

    கோவை,

    கோவை மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அங்கு பல்வேறு தினுசுகளில் புதியரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    எனவே பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டு வந்திருந்து பட்டாசு கடைகளில் விற்கப்படும் வெடிகளை வாங்கி செல்கின்றனர். இதனால் அங்கு பொதுமக்க ளின் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இதற்கிடையே தீபாவளி பட்டாசுகள் வெடிக்க தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதா வது:-

    தீபாவளி பண்டிகை யின்போது காலை 6-7 மற்றும் இரவு 7-8 ஆகிய மணி நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற தரமான பசுமை பட்டாசுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    பட்டாசு கடைகளில் சரவெடி விற்க தடைசெ ய்யப்பட்டு உள்ளது. அதனை வாங்கி வெடிப்பதும் சட்டப்படி குற்றம். மேலும் குறைந்தபட்சம் 125 டெசிபல் வரை சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பது நல்லது.

    கம்பி மத்தாப்பு, புஸ்வா னம் வெடிக்கும்போது பக்கத்தில் தண்ணீர் மற்றும் மணல்வாளிகள் இருக்க வேண்டியது அவசியம். குனிந்த நிலையில் பட்டாசு களை பற்ற வைக்க கூடாது. சிகரெட் லைட்டர்களை பயன்படுத்துவது ஆபத்து தரும்.

    பட்டாசு வெடிக்கு ம்போது நீண்ட பத்திகளை பயன்படுத்த வேண்டும். வெடி போடும்போது வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவைக்க வேண்டும். தளர்வான பருத்தி ஆடை அணிந்து செருப்பு போட்டு க்கொண்டு பட்டாசுகள் வெடிக்கலாம்.

    பட்டாசு வெடித்து காயம் ஏற்பட்டால் பாதிப்புக்கு உள்ளான இடத்தில் குளிர்ந்த நீரை எரிச்சல் அடங்கும்வரை ஊற்ற வேண்டும். பின்னர் காயம்பட்டவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும். சுயமருத்துவம் பார்க்கக்கூ டாது.

    வெடிக்காத பட்டாசு களை சேகரித்து புஸ்வாணம் வைப்பது ஆபத்தில் முடிந்து விடும். மேலும் சிம்னி விளக்கு, குத்துவிளக்கு, மெழுகு வர்த்தி மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்களுக்கு அருகில் வெடி வெடிக்கக்கூடாது.

    அணுகுண்டு வெடிக்கும் முன்பாக குழந்தைகளை வீட்டுக்குள் அனுப்பிவிட வேண்டும். மேலும் பாட்டில்கள், டப்பா மற்றும் தேங்காய் சிரட்டைகளில் பட்டாசு வைத்து வெடிக்க கூடாது.

    பொறுப்பின்றியும், விளையாட்டுதனமாகவும், குடிபோதையிலும் பட்டாசு வெடித்து பொதுமக்கள் மற்றும் உடைமைகளுக்கு சேதம் ஏற்படுத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மருத்துவமனைகள், கிளினிக், கல்வி நிலையங்கள், நீதிமன்றம், கோவில்கள் உள்ளிட்ட அமைதி பகுதிகளில் பட்டா சுகள் வெடிக்கக்கூடாது. போக்குவரத்து சாலைகளி லும் வெடிபோட அனுமதி இல்லை. மக்கள் அதிகம் கூடும் கோவை வ.உ.சி மைதானம், கொடிசியா மைதானங்களில் பட்டாசு வெடிக்க கூடாது.

    திறந்தவெளி மைதானங்களில் ராக்கெட் வெடி போட தடை இல்லை. அதேநே ரத்தில் இது பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பணிகள் காரணமாக மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.
    • கோவில் பஸ் அல்லது படிக்கட்டை பயன்படுத்த வேண்டுகோள்

    வடவள்ளி,

    கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஏழாம்படை வீடு என பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலுக்கு விசேஷ நாட்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அதிக பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்வார்கள். மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளும் மருதமலைக்கு வந்து தரிசித்து விட்டு செல்கிறார்கள். இதனால் தினந்தோறும் மருதமலையில் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    தற்போது மருதமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மின் தூக்கி அறை, சேவார்த்திகள் காத்திருப்பு அறை, கட்டணச்சீட்டு வழங்குமிடம் அகியவற்றுடன் கூடிய மின் தூக்கி (லிப்ட்) வசதி ஏற்படுத்தும் பணி, மலைச்சாலையில் உள்ள தார்சாலைகள் சீரமைத்தல் பணி, புதிதாக யாகசாலை மண்டபம் கட்டும் பணி, கோவிலில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் புதிதாக ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டும் பணி மற்றும் கோவில் தங்க ரதம் உலா வரும் பாதையில் கருங்கல் தளம் அமைக்கும் பணி ஆகியவை நடந்து வருகின்றன.

    இந்த பணிகள் காரணமாக மலைக்கோவில் பகுதியில் வாகனங்கள் நிறுத்த போதிய இடம் இல்லாமல் நெரிசல் ஏற்படுகிறது.

    இதனால் நாளை (5-ந் தேதி) முதல் ஒரு மாதம் மருதமலை கோவிலுக்கு இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் பஸ்சையும், படி வழியையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

    • ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
    • காற்றில் பறக்கும் களைக்கொல்லிகளை சுவாசிப்பதால் பாதிப்புகள் ஏற்படுகிறது.

    குடிமங்கலம்:

    உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.இந்தநிலையில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லிகள், ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை மண்ணுக்கும் மனிதர்களுக்கும் தீங்கு விளைவித்து வருகின்றன.எனவே களைக்கொல்லிகளின் பயன்பாட்டை முழுமையாகத் தடுக்க வேண்டும், ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகளின் பயன்பாட்டை படிப்படியாகக் குறைக்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.  இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    நமது பாரம்பரிய விவசாயத்தில் ரசாயனங்களின் பயன்பாடு முற்றிலுமாக இல்லை.மண்ணை வளமாக்க மாட்டுச்சாணம், ஆட்டுரம் போன்ற இயற்கை உரங்களையே பயன்படுத்தினார்கள்.அதுமட்டுமல்லாமல் அவர்கள் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதில்லை.மாறாக பூச்சி விரட்டிகளையே பயன்படுத்தினர்.எல்லாவற்றுக்கும் மேலாக களைக்கொல்லிகளின் பயன்பாடு என்பது நமது முன்னோர்கள் காலத்தில் அறவே இல்லாத ஒன்றாகும். நிலத்தை நன்கு உழும்பொழுது பெருமளவு களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.புல் போன்ற களைகள் கால்நடைகளுக்குத் தீவனமாகி விடும்.மீதமுள்ள களைகளை கூலி ஆட்கள் மூலம் அகற்றுவார்கள்.ஆனால் தற்போது கூலி ஆட்கள் பற்றாக்குறையால் முழுவதுமாக களைக்கொல்லிகளையே நம்பியிருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    அதிலும் தடை செய்யப்பட்ட, வீரியம் மிக்க களைக்கொல்லிகள் பலவும் இன்னும் பயன்பாட்டில் இருக்கிறது.இத்தகைய களைக்கொல்லிகள் படிப்படியாக மண்ணுக்குள் ஊடுருவி மண் வளத்தைப் பாதிக்கிறது.அத்துடன் நிலத்தடி நீர் மாசடைவதற்கும் காரணமாகிறது.மேலும் பல பகுதிகளில் காற்றில் பறக்கும் களைக்கொல்லிகளை சுவாசிப்பதால் மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

    • பயிர்க்கடன் வழங்குவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
    • பயிர் சாகுபடியை பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் அவகாசம், 6, 8 மாதம், ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    கூட்டுறவுத்துறை சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. ஓராண்டு அவகாசத்துக்குள் திருப்பி செலுத்திவிட்டு அடுத்த 15 நாட்களுக்கு பிறகு மறு சாகுபடிக்கான கடனை பெற்று வருகின்றனர். தற்போது பயிர்க்கடன் வழங்குவதில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-

    இம்முறை பயிர் சாகுபடியை பொறுத்து கடனை திருப்பி செலுத்தும் அவகாசம், 6, 8 மாதம், ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் அறுவடை முடிவதற்குள் பயிர்க்கடனை திருப்பி செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்படும். இல்லாவிட்டால் வட்டி சுமை ஏற்படும். விவசாயிகளின் வீடு ஒரு கிராமத்தில் இருக்கும். விளை நிலம் மற்ற கிராமங்களில் இருக்கும்.வீடு இருக்கும் கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்கத்திலேயே பயிர்க்கடன் பெற்று வந்தனர். இனிமேல் விளைநிலம் உள்ள கிராமத்தில் தான் பயிர்க்கடன் பெற வேண்டும் என்கின்றனர். இது பல்வேறு பாதிப்புகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

    எனவே, பழைய முறைப்படி கூட்டுறவுக்கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஒருவர் கூறுகையில்,கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய விதிமுறைகள் எதுவும் அறிவிக்கவில்லை. பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கியதில் அரசுக்கு பல்வேறு சவால்களும், நெருக்கடியும் ஏற்பட்டது. அதற்காகவே பழைய விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டு உள்ளன என்றார்.

    கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. #FireCracker #SupremeCourt
    புதுடெல்லி:

    தீபாவளி, தசரா பண்டிகை காலத்தில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்படுவதாக கூறி, டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று கோரி அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி மற்றும் ஜேயா ராவ் பசின் என்ற 3 சிறுவர்கள் சார்பில் அவர்களுடைய தந்தையர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.



    சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம், பல்வேறு இந்து அமைப்புகள் என சுமார் 100 பேர் எதிர் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    இந்த நிலையில் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக தமிழக அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு முன் மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆத்மாராம் நட்கர்னி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

    அதில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

    * கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆய்வு கவுன்சில், தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையம், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளுடன் தீபாவளி சமயத்தில் நிலவும் சுற்றுச்சூழல் மாசு பற்றி கலந்தாலோசித்து ஆலோசனைகள் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் தீபாவளியின்போது பட்டாசு தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மீது பரிசோதனை நடத்தப்படும். குறைந்த அளவில் புகையை வெளியிடும் பட்டாசுகள் தயாரிக்க வலியுறுத்தப்படும்.

    * சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பசுமை பட்டாசுகள் தயாரிக்க அறிவுறுத்தப்படும்.

    * பட்டாசு தயாரிப்பில் பேரியம் உப்பு தடை செய்யப்படும். பட்டாசுகளில் அலுமினியம் தாது கலப்பதை பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு மறு ஆய்வு செய்யும்.

    * தீபாவளிக்கு 14 நாட்களுக்கு முன்பும் தீபாவளி முடிந்து 7 நாட்களுக்குப் பிறகும் அலுமினியம், பேரியம், இரும்புத்தாதுப் பொடி ஆகியவை பட்டாசுகளில் பயன்படுத்துவது குறித்தும் சுற்றுச்சூழல் மாசுபடுதல் குறித்தும் ஆய்வுகளை மேற்கொண்டு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும்.

    * சரவெடிகளால் சுற்றுச்சூழல் மிகவும் மாசு அடைவதால் அவற்றின் தயாரிப்புக்கு தடை விதிக்கலாம்.

    * வெளிநாடுகளைப் போல இந்தியாவின் பெரிய நகரங்களில் குடியிருப்போர் சங்கங்கள் வழியாக குடும்பங்கள் கூட்டாக பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்யலாம். அதற்கான இடம், மைதானத்தை மாநில அரசுகள் முன்கூட்டியே தீர்மானித்து அறிவிக்கலாம்.

    * மாநிலம் மற்றும் தேசிய அளவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யலாம்.

    மேலே கூறப்பட்ட ஆலோசனைகள் தொடர்பாக அரசு நிறுவனங்களுக்கும் பட்டாசு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கும் பட்சத்தில் 2 வாரங்களில் அவற்றை அமல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. எனவே கோர்ட்டு 2 வாரங்களுக்குள் இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், வரும் தீபாவளியில் அமல்படுத்தலாம்.

    இவ்வாறு கட்டுப்பாடுகளுடன் பட்டாசு உற்பத்தியை அனுமதிக்கலாம் என்று மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கு இடையே தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, பா.வினோத் கன்னா ஆகியோர் பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் தங்கள் வாதத்தில் கூறியதாவது:-

    இத்தனை நிறுவனங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு, சிவகாசியில் அனைத்து ஆய்வு வசதிகளும் கொண்ட மத்திய அரசு நிறுவனமான பட்டாசு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் ஏன் ஆலோசனை மேற்கொள்ளவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே இது குறித்து உத்தரவு பிறப்பித்தும் மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்தியாவின் 90 சதவீத பட்டாசு உற்பத்தி தமிழ்நாட்டில் குறிப்பாக சிவகாசியில் நடைபெறுகிறது. அதில் 40 சதவீதம் டெல்லிக்கு அனுப்பப்படுகிறது. டெல்லி, பட்டாசுக்கான வர்த்தக மையமாக செயல்படுகிறது. அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தராஞ்சல் போன்ற மாநிலங்களுக்கும் டெல்லியில் இருந்து பட்டாசு அனுப்பப்படுகிறது.

    எனவே, டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்தால் தமிழகத்தின் பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். சிவகாசியின் பட்டாசு உற்பத்தியாளர்கள் அனைவரும் சிறுகுறு நடுத்தர தொழில் முனைவர்கள் ஆவார்கள். 1,070 பட்டாசு தொழிற்சாலைகளால் 5 லட்சம் குடும்பங்கள் பயன் அடைகின்றன. பட்டாசுகள் பிரச்சினை என்று கருதி, தீர்வாக பட்டாசுக்கு தடை விதிப்பது மேலும் பல பிரச்சினைகளை உருவாக்கிவிடும். பட்டாசு மீதான தடை என்பது கண்டிப்பாக ஒரு தீர்வாக இருக்காது. இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

    இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் என்னும் தனியார் தொண்டு அமைப்பின் சார்பில் வக்கீல் ஜே.சாயி தீபக் வாதிட்டபோது, “தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. இது கொண்டாட்டம் சார்ந்த மத ரீதியான நடவடிக்கை. இந்துக்கள் மட்டுமே பட்டாசு வெடிப்பதில்லை. சீக்கியர்களும் சமணர்களும் கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் பண்டிகைகளில் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள். பட்டாசு வெடிப்பதற்கு எதிரான முறையான விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் இதுவரை முழுமையாக செய்யப்படவில்லை. இங்கு தீபாவளி என்பது பிரச்சினை அல்ல. சுற்றுச்சூழல் மாசுபடுவதே பிரச்சினை. எனவே மத்திய அரசு பரிந்துரைத்தபடி சில கட்டுப்பாடுகளுடன் பட்டாசு தயாரிப்புக்கும் விற்பனை, உபயோகம் ஆகியவற்றுக்கும் அனுமதி வழங்கலாம்” என்று குறிப்பிட்டார்.

    வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 28-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.  #FireCracker #SupremeCourt #Tamilnews
    ×