search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "parking"

    • மெட்ரோ இரயில்களில் பயணிக்காமல் வாகன நிறுத்தும் வசதியை மட்டும் பயன்படுத்துபவர்களின் தேவை அதிகரித்துள்ளது
    • சில மெட்ரோ நிலையங்களில் வாகன நிறுத்தும் இட வசதி இல்லாத காரணத்தினால் மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

    நாளை (மே 1) முதல் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்காமல், வாகன நிறுத்தத்தை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக மெட்ரோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்,

    சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடங்களின் பயன்பாட்டின் அடிப்படையில் பின்வரும் மாற்றங்களை செய்துள்ளது.

    கடந்த 30 நாட்களில் குறைந்தது 15 பயணங்கள் செய்த மெட்ரோ பயணிகளுக்கு மாதாந்திர பாஸ் வசதி விம்கோ நகர் பணிமனை, ஸ்ரீ தியாகராய கல்லூரி, நேரு பூங்கா, கோயம்பேடு, அசோக் நகர் மற்றும் ஆலத்தூர் மெட்ரோ ஆகிய 6 மெட்ரோ இரயில் நிலையங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது

    புதிய வண்ணாரப்பேட்டை, நந்தனம், எழும்பூர் மற்றும் செனாய் நகர் மெட்ரோ ஆகிய 4 மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இட வசதி இல்லாத காரணத்தினால் மாதாந்திர பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

    மெட்ரோ இரயில்களில் பயணிக்காமல் வாகன நிறுத்தும் வசதியை மட்டும் பயன்படுத்துபவர்களின் தேவை அதிகரித்துள்ளதால் திருவொற்றியூர், திருவொற்றியூர் தேரடி, காலடிப்பேட்டை, புது வண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, நந்தனம், கிண்டி, ஆலந்தூர், நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம் விமான நிலையம், அசோக் நகர், திருமங்கலம் மற்றும் எழும்பூர் மெட்ரோ என 18 மெட்ரோ இரயில் நிலையங்களில் மெட்ரோ பயணிகள் அல்லாதவர்களின் வாகன நிறுத்தும் சுட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    கடந்த 30 நாட்களில் மெட்ரோ இரயிலில் பயணம் செய்யாதவர்கள் அல்லது 15-க்கும் குறைவான பயணம் செய்பவர்களுக்கு அரும்பாக்கம் மெட்ரோ மற்றும் பரங்கி மலை மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர வாகன நிறுத்தும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மீதமுள்ள மற்ற மெட்ரோ இரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் கட்டணத்தில் எவ்வித மாற்றம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • புகைப்படம் மற்றும் வீடியோக்களை புகைப்பட கலைஞரான நிஷாந்த் ரத்னாகர் என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
    • பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    நாடு முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர மின்சார வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மின்சார வாகனங்களுக்கு தனியாக நிறுத்தும் இடம் (பார்க்கிங்) என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.

    இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை புகைப்பட கலைஞரான நிஷாந்த் ரத்னாகர் என்பவர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், எலக்ட்ரிக் வாகனங்கள் தொடர்பாக பெங்களூருவில் கோரமங்களாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இந்த அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

    பெரிய மல்டி லெவல் பார்க்கிங் இருக்கும் போது அவர்கள் மின்சார வாகனங்களை சூரிய ஒளியில் நிறுத்துமாறு செய்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு வைரலான நிலையில் பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
    • வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    எழும்பூர் ரெயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு நடந்து வருகின்றன. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.

    மேலும் ரெயில் நிலைய கட்டிடங்கள், பலஅடுக்கு வாகன நிறுத்துமிடம், காந்தி-இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடை மேம்பாலம், பார்சல்களை கையாள நடைமேம்பாலம், புதிய ரெயில்வே குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் இடம் உள்ளது. தற்போது அந்த பகுதியில் நடைபெற்று வரும் ரெயில்வே பணிகளால் மெட்ரோ ரெயில் நிலைய வாகன நிறுத்தும் இடம் நாளை முதல் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், "எழும்பூர் ரெயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரெயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடை பெற்று வருகின்றன.

    இதனால் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம் எழும்பூர் தெற்கு ரெயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்திற்குப் பக்கத்தில் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்து பயணிகளும் நாளை(5-ந்தேதி) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறப்பட்டு உள்ளது.

    • ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

    இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் 'பார்க்கிங்'.திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.


    பார்க்கிங் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 30-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.



    • எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
    • படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இந்நிலையில், பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமாருக்கு அப்படத்தின் கதாநாயகன் ஹரிஷ் கல்யாண் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக ராம்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ப்ரேஸ்லெட் அணிவதில் எனக்கு மிகவும் பிடித்த அணிகலன் என்பதால், நீங்கள் அதை நினைவில் வைத்து எனக்கு பரிசளித்துள்ளீர்கள், உங்கள் மகிழ்ச்சிகரமான பரிசுக்கு நன்றி. மேலும் என்னை ஸ்பெஷலாக உணரவைக்கும் அபாரமான அன்பு... என கூறியுள்ளார்.

    இதற்கு ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள பதிவில், இது ஆரம்பம் மட்டுமே. இன்னும் பல வெற்றிகள் மற்றும் அன்புகளை நீங்கள் பெறப்போகிறீர்கள் என கூறியுள்ளார்.

    • நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் ‘பார்க்கிங்’ திரைப்படம் வெளியானது.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு', 'எல்.ஜி.எம்' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள ஹரிஷ் கல்யாண் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பார்க்கிங்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    ஹரிஷ் கல்யாண் பதிவு

    இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    • ஹரிஷ் கல்யாண் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், 'பார்க்கிங்' படம் பார்த்துள்ள நடிகர் கவுதம் கார்த்திக் படக்குழுவை பாராட்டி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நேற்று 'பார்க்கிங்' படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உண்மையாக நான் மிகவும் படத்தை ரசித்தேன். ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பு சிறப்பாக இருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • ராம்குமார் பாலகிருஷ்ணன் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.

    ஹரிஷ் கல்யாண் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பார்க்கிங்' . திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், 'பார்க்கிங்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பார்க்கிங்கால் ஏற்படும் பிரச்சினையை விவரிக்கும் விதமாக உருவாகியுள்ள இந்த டிரைலரில் 'என்ன செஞ்சவங்கள திருப்பி எதாவது செய்யனும்ல' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



    • ஹரிஷ் கல்யாண் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.

    பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படத்தில் நடித்துள்ளார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    பார்க்கிங் போஸ்டர்

    இந்நிலையில், 'பார்க்கிங்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

    • ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படம் ‘பார்க்கிங்’.
    • இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

    பொறியாளன், வில் அம்பு, பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹரிஷ் கல்யாண் இவர் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் 'பார்க்கிங்' படத்தில் நடிக்கிறார். திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கிறார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.


    இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடிக்கிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய பாடலான 'செல்ல கல்லியே' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.




    • கோரிப்பாளையத்தில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    • வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    மதுரை

    மதுரை முக்கிய சுற்றுலா தலமாகவும், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் 2-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நகரமாகவும் உள்ளது. இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரையில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. மேலும் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

    இந்த நிலையில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு மாநகராட்சி சார்பிலும், போக்குவரத்து போலீசார் சார்பிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோரிப்பாளையம், கீழவாசல், தெற்குவாசல், காளவாசல், ஆரப்பாளையம், சிம்மக்கல், கீழமாசிவீதி, பெரியார் பஸ் நிலையம், பழங்காநத்தம், காமராஜர் சாலை, விளக்குத்தூண் ஆகிய நகரின் முக்கிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

    இந்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக நடவடிக்கைகள் எடுப்பதற்கு மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோரிப்பாளையம் பகுதியில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதாலும், அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியில் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடத்தை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பல்லடுக்கு வாகன நிறுத்தத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து கோரிப்பாளையத்திலும் வாகன நிறுத்தும் இடம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    இதற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளது. வாகன நிறுத்தம் அமைப்பதற்கான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் உரிய இடம் தேர்வு செய்யப்பட்டு வாகனம் நிறுத்தும் இடம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் நகரில் ஏற்கனவே உள்ள 2 பல்லடுக்கு வாகன நிறுத்தம் இடங்களை நவீனப்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    இதனால் அரசு ஆஸ்பத்திரி, அண்ணா பஸ் நிலையம்,கோரிப்பாளையம் பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க முடியும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள காளவாசல், பை-பாஸ் ரோடு, மாசிவீதிகள், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்லடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டால் வாகன ஓட்டிகளுக்கும், போக்குவரத்து போலீசாருக்கும் சிரமம் குறையும் என எதிர்பார்க்கலாம்.

    • குளத்தை முறையாக பராமரிக்காததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கார், வேன், ஆட்டோ நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர்.
    • பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தை முறையாக பராமரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்ைட மினிபஸ்நிலையம் அருகே குமுந்தான்குளம் உள்ளது. இப்பகுதியில் பேரூராட்சி சார்பாக எம்.எல்.ஏ நிதியில் நாடகமேடை கட்டப்பட்டது. இந்தநிலையில் குளத்தை முறையாக பராமரிக்காததால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் கார், வேன், ஆட்டோ நிறுத்தும் இடமாக மாற்றியுள்ளனர்.

    மேலும் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் இங்கேயே நிறுத்தி விடுகின்றனர். சுற்றுவட்டார பகுதியில் உள்ளவர்கள் குளத்தில் குப்பைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சிலர் குப்பைகளுக்கு தீ வைப்பதால் அவ்வழியாக செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

    பேரூராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குளத்தை முறையாக பராமரிக்க வேண்டும். இதனை மீட்டு பூங்கா அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனை மீட்க வேண்டும். இப்பகுதியில் உள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×