என் மலர்

  நீங்கள் தேடியது "NIA raid"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கேரளாவில் உள்ள விழிஞ்சம் கடலோர பகுதியில் தான் ஹெராயின் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
  • கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவைகள் பிடிபட்டது தொடர்பான வழக்கு மே மாதம் என்.ஐ.ஏ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

  சென்னை:

  கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் படகில் கடத்தப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  கடல் வழியாக கடத்தப்பட்ட 300 கிலோ ஹெராயின், 5 ஏ.கே.47 துப்பாக்கிகள் ஆகியவற்றை கடலோர பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  இதன் பின்னணியில் தமிழகத்தை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று தமிழகத்தில் 20 இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

  சென்னையில் 9 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது. மண்ணடி, பல்லாவரம், குரோம்பேட்டை ஆகிய இடங்களில் கேரளாவில் போதைப் பொருள், துப்பாக்கி கடத்தல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் சிலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

  இதேபோன்று திருச்சியிலும் 11 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் முடிவில் என்னென்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும்.

  கேரளாவில் உள்ள விழிஞ்சம் கடலோர பகுதியில் தான் ஹெராயின் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவைகள் பிடிபட்டது தொடர்பான வழக்கு மே மாதம் என்.ஐ.ஏ.க்கு மாற்றம் செய்யப்பட்டது.

  என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி சென்னையிலும் அப்போது சோதனை நடத்தினர். இந்த வழக்கில் வளசரவாக்கத்தில் வசித்து வந்த சற்குணம் என்கிற சபேகன் கைது செய்யப்பட்டிருந்தார். விடுதலை புலிகள் அமைப்பின் உளவு பிரிவு அதிகாரியாக இவர் இருந்ததும் தெரியவந்தது.

  அவரிடம் இருந்து விடுதலை புலிகள் இயக்கம் தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருந்தன. இந்த நிலையில் தான் சென்னை, திருச்சியில் என்.ஐ.ஏ. சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • என்.ஐ.ஏ. அமைப்பை சேர்ந்த மத்திய அரசின் 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திருச்சி மத்திய ஜெயில் முகாம் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
  • திருச்சி மத்திய சிறை அதிகாரிகள், உள்ளூர் போலீசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

  திருச்சி:

  திருச்சி மத்திய சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் போலி பாஸ்போர்ட், குற்ற வழக்குகளில் தொடர்புடைய வெளிநாட்டினர், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் ஜெயில் வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  இவர்களில் வழக்கு முடிந்த பின்னரும் தங்களை சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளதாக அவர்கள் உண்ணாவிரதம், மரங்களில் ஏறி தற்கொலை மிரட்டல் உள்ளிட்ட தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் கையை பிளேடால் கிழித்து தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.

  இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் சமீபத்தில் 14 இலங்கை தமிழர்களை முகாம் சிறையில் இருந்து மாவட்ட நிர்வாகம் விடுவித்தது. ஆனால் அவர்கள் இந்தியாவிலேயே தங்கி இருந்து வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

  இதற்கிடையே தமிழகத்திலிருந்து போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை தமிழர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கோவை செம்பட்டி காலனியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போலி பாஸ்போர்ட் ஊழல் நடந்திருக்கிறது. இது தொடர்பாக வருகிற 21-ந்தேதி ஆதாரத்துடன் ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க இருக்கின்றேன். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார்.

  இந்த நிலையில் இன்று என்.ஐ.ஏ. அமைப்பை (தேசிய புலனாய்வு முகமை) சேர்ந்த மத்திய அரசின் 60-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திருச்சி மத்திய ஜெயில் முகாம் சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

  இதில் திருச்சி மத்திய சிறை அதிகாரிகள், உள்ளூர் போலீசாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் கார்களில் மத்திய சிறைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் முகாம் வாசலை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு ஆய்வு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர்.

  இன்று அதிகாலை 5 மணிக்கு இந்த திடீர் சோதனை தொடங்கியது. இதற்கிடையே கலெக்டர் பிரதீப் குமார் சம்பவ இடத்திற்கு வந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, டெல்லியில் நடந்த குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் இந்த முகாம் ஜெயிலில் உள்ளனர். அவர்கள் இலங்கை தமிழர்களா? அல்லது வேறு நாட்டைச் சேர்ந்தவர்களா? என தெரியவில்லை. காலை 5 மணிக்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

  இந்தக் குழு எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் வந்துள்ளது. இதில் 15 முதல் 20 போலீசார் இருப்பார்கள். இன்று காலை அவர்கள் எனக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தான் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணை முடிந்த பின்னர் அது தொடர்பான விவரங்கள் தெரியப்படுத்தப்படும் என கூறிவிட்டு சென்றார்.

  போலி பாஸ்போர்ட் மூலம் திருச்சியில் இருந்து யாராவது வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கிறார்களா? குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை தமிழர்களை விடுவித்ததில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா? என்று விசாரிப்பதாக தெரிகிறது.

  திருச்சி மத்திய சிறை பின்புறம் பொன்மலை அடிவார பகுதியில் குடியிருக்கும் விக்னேஸ்வரன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளில் ஒரு குழுவினர் சோதனை நடத்தினர். இவர் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ள குணாளன் மற்றும் வேறு கைதிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் அந்த அடிப்படையில் சோதனை நடப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

  மேற்கண்ட இரு வேறு சோதனைகளும் கேரளா ஹெராயின் கடத்தல் வழக்கில் தொடர்புடையது எனவும் சொல்லப்படுகிறது. 2021-ல் கேரளா மாநிலம் விழிஞ்ஞம் பகுதியில 300 கிலோ ஹெராயின், 5 ஏகே-47 ரக துப்பாக்கிகள், ஆயிரம் தோட்டாக்களுடன் படகில் தப்பிச்சென்ற இலங்கை தமிழர்களை அங்குள்ள கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

  பின்னர் அது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய ஆவணங்கள், புத்தகங்கள், லேப்டாப்புகள் போன்றவற்றை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் தொடர்ச்சியாக மீண்டும் இன்று சென்னை மற்றும் திருச்சி முகாம் சிறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இந்த சம்பவம் மத்திய சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரகாசம் மாவட்டம் அஜித் சிங் நகரில் உள்ள நக்சலைட் ஆதரவாளர் ஒருவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
  • சத்தீஸ்கர் வாலிபர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சந்தித்தார்களா என்ற விவரங்களை அதிகாரிகள் சேகரித்தனர்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம் விஜயவாடா மற்றும் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

  பிரகாசம் மாவட்டம் அஜித் சிங் நகரில் உள்ள நக்சலைட் ஆதரவாளர் ஒருவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கிருந்து சில டைரிகள், டிஜிட்டல் உபகரணங்கள், பேனர்கள் மற்றும் துண்டு பிரசுரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். விஜயவாடாவில் உள்ள ஒரு வீட்டின் அருகே சத்தீஸ்கரைச் சேர்ந்த 4 வாலிபர்கள் தங்குவதற்கு இட வசதி அளிக்கப்பட்டது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்தனர்.

  சத்தீஸ்கர் வாலிபர்கள் அந்த வீட்டில் எவ்வளவு நாட்கள் தங்கினர். தடை செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டனரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  சத்தீஸ்கர் வாலிபர்களை மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் சந்தித்தார்களா போன்ற விவரங்களையும் அவர்கள் சேகரித்தனர். விஜயவாடாவில் ஒரு இடத்திலும், பிரகாசம் மாவட்டத்தில் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

  பிரகாசம் மாவட்டம் தங்குதூர் அருகே அழகுறபாடு என்ற இடத்தில் 3 வீடுகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள், பேனர்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மற்றும் ஒரு சில டைரிகளை கைப்பற்றியதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்தனர்.

  2019-ம் ஆண்டு சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார் மாவட்டத்தின் நகர்நார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த என்கவுன்ட்டர் தொடர்பான வழக்கில் ஆந்திராவின் பல இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்த வழக்கில் என்.ஐ.ஏ. நடத்திய சோதனையில் லேப்டாப்புகள், ஆவணங்கள் சிக்கியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
  புதுடெல்லி:

  தமிழ்நாட்டில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவளித்தனர் என கூறி 8 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் மீது, தங்களது தீவிரவாத குழுவுக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்ய திட்டமிட்டது, ஆயுத போராட்டம் நடத்துவதற்கு தேவையான நிதியை உயர்த்துவது, சிறையில் உள்ள தீவிரவாதிகளை தப்பிக்க செய்து, அவர்களை நாட்டிற்கு எதிராக செயல்பட செய்வது ஆகிய பிரிவுகளின் கீழ் கடந்த ஜனவரி 8-ந்தேதி வழக்கு பதிவானது.

  இதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் தமிழகத்தின் ராமநாதபுரம், சேலம் மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில், 10 பேரின் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  இந்த சோதனையில், 3 லேப்டாப்புகள், 3 ஹார்டு டிஸ்குகள், 16 மொபைல்போன்கள், 8 சிம்கார்டுகள், 2 பென் டிரைவ்கள், 5 மெமரி கார்டுகள் மற்றும் கார்டு ரீடர் ஒன்று உள்ளிட்ட டிஜிட்டல் பொருட்களும் இதுதவிர 2 கத்திகளும் கைப்பற்றப்பட்டன.

  சட்டவிரோத ஆவணங்களும் அதிக அளவில் கைப்பற்றப்பட்டு உள்ளன. தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
  ×