search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muralitharan"

    • ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள்.
    • எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்

    மும்பை:

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒரே வீரரான இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து 800 என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நேற்று நடந்தது.

    இதில் கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ஜெயசூர்யா, முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முரளிதரன் பேசுகையில், 'டெண்டுல்கர் எனது பந்து வீச்சை நன்றாக கணித்து செயல்பட்டார். அதனை பலரால் செய்ய முடியாது. பிரையன் லாரா எனக்கு எதிராக நன்றாக ஆடினார். 

    ஆனால் பெரிய அளவில் எனது பந்து வீச்சை அடித்து நொறுக்கியதில்லை. ராகுல் டிராவிட்டை போன்ற சிலரை நான் அறிவேன். அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர். ஆனால் அவர் ஒருபோதும் எனது பந்து வீச்சை துல்லியமாக கணித்து ஆடியது கிடையாது. ஷேவாக், கவுதம் கம்பீர் ஆகியோர் எனது பந்து வீச்சை சிறப்பாக புரிந்து விளையாடினார்கள். எனது அணியில் கூட சிலர் எனது பந்து வீச்சை எப்படி ஆடுவது என்று தெரியாமல் திணறி இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

    உலக கோப்பையை வெல்ல இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக முரளீதரன் கூறியுள்ளார். #INDvENG

    சென்னை:

    இலங்கை அணியின் முன்னாள் பிரபல சுழற்பந்து வீரர் முரளீதரன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இதில் இந்தியா அல்லது இங்கிலாந்து சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

    ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்று வருகிறது.

    என்னை பொறுத்தவரை அஸ்வின் இன்னும் உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் தான். குல்தீப் யாதவும், யகவேந்தி சாயிலும் இந்திய துணைக் கண்டத்தில் சிறப்பாக வீசுகிறார்கள்.

    உலக கோப்பை நடைபெறும் இங்கிலாந்தில் அவர்களது பந்து வீச்சு எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம். இங்கிலாந்து ஆடுகளங்கள் ‘சுவிங்’ பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும்.

    20 ஓவர் போட்டியின் வருகையால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கு பாதிப்பு இல்லை.

    இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. திறமையான வீரர்கள் தொடர்ச்சியாக உருவாகாத நிலை, ஆர்வமின்மையால் இந்த பாதிப்பு ஏற்பட்டது. பயிற்சியாளராகவோ அல்லது ஆலோசகராகவே மாறும் எண்ணம் இல்லை.

    ஆஸ்திரேலிய அணியும் தனது பழைய திறனை இழந்துவிட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். #INDvENG

    விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, சர்வதேச அளவிலான சாதனையில் வார்னே உடன் இணைந்துள்ளார் அஸ்வின். #Ashwin #Viratkohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தை 287 ரன்னுக்குள் சுருட்ட முக்கிய காரணமாக இருந்தார்.

    2-வது இன்னிங்சிலும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து திணற காரணமாக இருந்தார். இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    ஒரு கேப்டன் தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின், சர்வதேச அளவில் விரைவாக வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை ஷேன் வார்னே உடன் பகிர்ந்துள்ளார்.

    சனத் ஜெயசூர்யா தலைமையின் கீழ் முத்ததையா முரளீதரன் 30 போட்டியில் இந்த சாதனையைப் படைத்து முதல் இடத்தில் உள்ளார். வார்னே ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழ், அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 34 போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.



    மால்கம் மார்ஷல் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையின் கீழ், ஆலன் டொனால்டு குரோஞ்ச் தலைமையின் கீழ், டேல் ஸ்டெயின் ஸ்மித் தலைமையின் கீழ் 40 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளனர்.
    இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை நிராகரித்தனர் முரளிதரன், ஜெயவர்தனே. #Muralitharan #Jayawardene
    இலங்கை அணி முரளிதரன், சங்ககரா, ஜெயவர்தனே விளையாடிய காலத்தில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு இலங்கை அணி தடுமாறி வருகிறது. இந்தியாவிற்கு எதிராக சொந்த மைதானத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது.

    ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இழந்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடக்க சுற்றோடு வெளியேறியது. தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

    இதனால் இலங்கை அணியை வெற்றிப் பாதையில் மீண்டும் கொண்டு வர ஆலோசனை வழங்க வேண்டும் என்று முரளிதரன், ஜெயர்வதனேயிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. ஆனால், இருவரும் ஆலோசனை வழங்கும் பணியில் சேர மறுத்துவிட்டனர்.



    இதுகுறித்து முரளிதரன் கூறுகையில் ‘‘கிரிக்கெட் நிர்வாகம் மோசனமான நிலையில் இருக்கும்போது, எங்களை அழைப்பது நேர்மையற்ற, தந்திரமான செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.

    ஜெயவர்தனே ‘‘இந்த முறையில் எனக்கு நம்பிக்கை இல்லை. யாராவது ஒருவர் நேரத்தை விரயமாக்க விரும்பினால், எங்களை பயன்படுத்தாதீர்கள்’’ என்று தெரிவித்துள்ளார். ஜெயவர்தனே இதற்கு முன் ஒரு பயிற்சியாளர் பெயரை பரிந்துரை செய்திருந்தார். இதை இலங்கை கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
    ×