search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Morocco earthquake"

    • ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளதால் இடிபாடுகளுக்கிடையே தேடுதல் தொடர்கிறது
    • புலந்தர் கிராமத்தில் வயல்வெளியில் ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது

    மொராக்கோவில் இம்மாதம் 8-ஆம் தேதியன்று ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவில் ஒரு கடும் நிலநடுக்கம் தாக்கியது. இதில் தற்போது வரை சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளதால், இடிபாடுகளுக்கிடையே இன்னும் தேடுதல் தொடர்கிறது.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    அதில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு குழந்தை புதையுண்டிருப்பதையும், அதனை வெளியே ஒருவர் எடுப்பதும் தெரிகிறது. இக்குழந்தை மொராக்கோ நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையில் புதையுண்டு இறந்த குழந்தை என ஒரு தகவலும் அந்த வீடியோவில் இடம் பெறுகிறது.

    ஆனால், ஆய்வில் இந்த வீடியோ உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தேஹட் மாவட்டத்தில் உள்ள மூசா நகர் பகுதியில் புலந்தர் கிராமத்தில் ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட ராஜேஷ், ரேஷ்மா எனும் தம்பதியினர் பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்த ஒரு குழந்தை பூமியில் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உடனே அதனை வெளியே எடுத்து மருத்துவமனையில் சேர்த்து காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

    குழந்தையை புதைத்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    அப்போது குழந்தையை வெளியே எடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, மொராக்கோ நிலநடுக்கத்துடன் தொடர்புபடுத்தபட்டு தவறாக சித்தரித்து இணையத்தில் பரவியிருக்கிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • 2500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    மொராக்கோ நாட்டில் அட்லஸ் மலைத் தொடர் பகுதியில் அமைந்துள்ள மராகேஷ்சாபி பிராந்தியத்தில் கடந்த 8-ந் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மலை பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் அழிந்தன.

    நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2800-யை தாண்டிள்ளது. 2500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 நாட்களை கடந்தும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    • கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.
    • பலி எண்ணிக்கை கடந்த 10ம் தேதி அன்று 2000-ஐ தாண்டியுள்ளது என மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறியது.

    வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 8ம் தேதி நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.

    அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.

    தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மராகெச் மற்றும் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.

    சீட்டு கட்டு சரிவது போல் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. நள்ளிரவு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் உறங்கி கொண்டிருந்த பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை.

    இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதே போல் காயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

    கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது. நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என முதல் நாளில் அறிவிக்கப்பட்டது.

    அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் பலி எண்ணிக்கை கடந்த 10ம் தேதி அன்று 2000-ஐ தாண்டியுள்ளது என மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறியது.

    இந்நிலையில், நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக மொராக்கோ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதில், 2500 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முதலில் ஒரு நிலநடுக்கமும், 19 நிமிடங்களுக்கு பிறகு மற்றொன்றும் ஏற்பட்டது.
    • நேற்றே உயிர்பலி 1000த்தை தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.

    வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.

    அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் (Marrakech) அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 18.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு உண்டான நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது.

    தொடர்ந்து, 19 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மராகெச் மற்றும் அங்குள்ள மலை கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. சீட்டு கட்டு சரிவது போல் ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

    நள்ளிரவு நேரத்தில் இது நடந்ததால் உறங்கி கொண்டிருந்த பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி கொண்டனர். மீட்பு படையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.

    அதே போல் காயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். கட்டிட இடுபாடுகளில் இருந்து உடல்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்தவாறு உள்ளது.

    நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல் இருக்கலாம் என நேற்று மதியம் அறிவிக்கப்பட்டது.

    அங்கு தொடர்ந்து மீட்புப்பணிகள் நடந்து வந்த நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 2000-ஐ தாண்டியுள்ளது என மொராக்கோ உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    அதிகபட்சமாக அல்-ஹவுஸ் பிராந்தியத்தில் 1,293 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் டரவ்டான்ட் பகுதியில் 452 பேர் பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்க பகுதிகளில் இன்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    மேலும் 2,059 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 1,404 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

    நில நடுக்கத்தால் பல மலை கிராமங்கள் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளன. அங்கு வீடுகள், கற்குவியலாக காட்சி அளிக்கின்றன. அங்கு மீட்புப்பணிகள் நடந்து வந்தாலும், தொலை தூரத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு அதிகமாக மீட்புக்குழுவினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் மலை கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

    மராகெச் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. பல கட்டிடங்கள், கடுமையான விரிசல்கள் ஏற்பட்டு விழும் நிலையில் உள்ளன. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனர். இடிந்து விழுந்துள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் உயிருடன் யாராவது இருக்கிறார்களா என்பதை கண்டறிந்து அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலநடுக்கம் மொராக்கோ நாட்டை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள மொராக்கோவுக்கு பல்வேறு நாட்டினர் உதவிகளை வழங்கி வருகின்றனர்.

    அண்டை நாடான அல்ஜீரியா மனிதாபிமான அடிப்படையில் தனது வான்வெளியில் மொராக்கோவுக்கு செல்லும் விமானங்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளது. மொராக்கோவுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 2021ல் அந்நாட்டுடன் தூதரக உறவை துண்டித்த அல்ஜீரியா, தனது வான்வெளியை மொராக்கோ பயன்படுத்த தடைவிதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் உதவிகளை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளன.

    வட ஆப்பிரிக்காவில் கடந்த 120 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி இடிந்து விழுந்தன.
    • இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.\

    ரபாட்:

    வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது. நகரில் இருந்து தென்மேற்கே 71 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹைஅட்லஸ் மலைகளில் 18.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மொரோக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது என தெரிவித்துள்ளது.

    இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை. இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர்.

    வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களும் சேதமடைந்தன.

    இந்நிலையில், மொரோக்கோ நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1300-ஐ கடந்துள்ளது. மேலும் 1800க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

    • நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது.
    • நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல்.

    மொரோக்காவில் நேற்று இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவவரை 1037 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 1200 பேர் கயாமுற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    நிலநடுக்கம் பற்றி வருத்தம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில் அதனை பகிர்ந்து கொண்டார். இது குறித்த பதிவில், "மொரோக்கா நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் வருத்தம் அடைந்துள்ளேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில், எனது நினைவுகள் முழுக்க பாதிக்கப்பட்ட மொரோக்கா மக்களுடனேயே உள்ளது. இதில் உயிரிழந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமுற்றவர்கள் விரைந்து குணம் பெற வேண்டுகிறேன். இந்த கடினமான சூழ்நிலையில், மொரோக்காவுக்கு தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயார் நிலையில் உள்ளது," என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

     

    வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோ, அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு அந்நாட்டின் நேரப்படி 11.11 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் அந்நாட்டின் தெற்கில் உள்ள மராகேஷ் நகரை மையமாக கொண்டு உண்டானது. நகரில் இருந்து தென்மேற்கே 71 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹைஅட்லஸ் மலைகளில் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    மொரோக்கோவின் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம், நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானது என்று தெரிவித்து இருக்கிறது. நிலநடுக்கம் சில நொடிகள் வரை நீடித்தது இருக்கிறது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கி இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கி கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலரால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை.

    இதனால் கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கிக் கொண்டனர். அதே நேரத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். அதன்பின் 19 நிமிடங்களுக்கு பிறகு 4.9 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×