search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new-born child"

    • ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளதால் இடிபாடுகளுக்கிடையே தேடுதல் தொடர்கிறது
    • புலந்தர் கிராமத்தில் வயல்வெளியில் ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்டது

    மொராக்கோவில் இம்மாதம் 8-ஆம் தேதியன்று ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவில் ஒரு கடும் நிலநடுக்கம் தாக்கியது. இதில் தற்போது வரை சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளதால், இடிபாடுகளுக்கிடையே இன்னும் தேடுதல் தொடர்கிறது.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    அதில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஒரு குழந்தை புதையுண்டிருப்பதையும், அதனை வெளியே ஒருவர் எடுப்பதும் தெரிகிறது. இக்குழந்தை மொராக்கோ நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்கிடையில் புதையுண்டு இறந்த குழந்தை என ஒரு தகவலும் அந்த வீடியோவில் இடம் பெறுகிறது.

    ஆனால், ஆய்வில் இந்த வீடியோ உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தேஹட் மாவட்டத்தில் உள்ள மூசா நகர் பகுதியில் புலந்தர் கிராமத்தில் ஒரு குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட ராஜேஷ், ரேஷ்மா எனும் தம்பதியினர் பிறந்து சில மணி நேரமே ஆகியிருந்த ஒரு குழந்தை பூமியில் அரைகுறையாக புதைக்கப்பட்டிருப்பதை கண்டனர். உடனே அதனை வெளியே எடுத்து மருத்துவமனையில் சேர்த்து காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

    குழந்தையை புதைத்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

    அப்போது குழந்தையை வெளியே எடுக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ, மொராக்கோ நிலநடுக்கத்துடன் தொடர்புபடுத்தபட்டு தவறாக சித்தரித்து இணையத்தில் பரவியிருக்கிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×