search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drumstick"

    • `சூப்பர் புட்’ உணவுப்பொருளாக முருங்கைக்காய் விளங்குகிறது.
    • முருங்கைக்காயில் இயற்கையாகவே நீர்ச்சத்து நிறைந்துள்ளது.

    கோடை காலத்தில் நிலவும் வெப்பத்தின் தன்மைக்கேற்ப உடலை நீரேற்றமாகவும், ஊட்டச்சத்துடனும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு உணவு பழக்கத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டியது அவசியமானது. கோடை கால வெப்ப சூழலுக்கு ஏற்ற `சூப்பர் புட்' உணவுப்பொருளாக முருங்கைக்காய் விளங்குகிறது. ஏராளமான ஊட்டச்சத்துகள், மருத்துவ குணங்கள் நிரம்பிய முருங்கைக்காயை வெப்பமான காலநிலை நிலவும் மாதங்களில் ஏன் அவசியம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் உங்கள் கவனத்திற்கு...

    1. நீரேற்றம்:

    முருங்கைக்காயில் இயற்கையாகவே நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இது கோடை வெப்பத்தின் போது உடலை நீரேற்றமாக வைத்திருக்க சிறந்த தேர்வாக அமைகிறது. பொதுவாகவே அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட உணவுகளை உட்கொள்வதன் மூலம் வெப்பத்தின் காரணமாக ஏற்படும் திரவ இழப்பை ஈடு செய்துவிடலாம். முருங்கைக்காய் உட்கொள்வது நீரிழப்பை தடுக்கும். உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.

    2. ஊட்டச்சத்து:

    முருங்கைக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ, கால்சியம், பொட்டாசியம், இரும்பு, தாதுக்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளிட்ட அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு அவசியமானவை. நோய் எதிர்ப்பு செயல்பாடு, எலும்பு ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

    3. குளிர்ச்சித்தன்மை:

    முருங்கைக்காயில் இயற்கையான குளிர்ச்சித் தன்மை உள்ளது. வெப்பமான காலநிலையில் உடலின் உட்புற வெப்பநிலையை தணிப்பதற்கு உதவுகிறது. முருங்கைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் அதிக வியர்வை, சோர்வு மற்றும் உடல் உஷ்ணம் போன்ற வெப்பம் தொடர்பான அசவுகரியங்களை தவிர்க்கலாம்.

     4. செரிமானம்:

    அஜீரணம், மலச்சிக்கல், வீக்கம் போன்ற செரிமான பிரச்சினைகளைப் போக்க பாரம்பரிய மருத்துவத்தில் முருங்கைக்காய் பயன்படுத்தப்படுகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து, செரிமானப் பாதையில் உணவு சீராக செல்ல உதவும். அதன் மூலம் செரிமான செயல்பாடு விரைவாக நடைபெறுவதற்கு உதவும்.

    5. அழற்சி எதிர்ப்பு பண்புகள்:

    முருங்கைக்காயில் பிளாவனாய்டுகள், பீனாலிக் அமிலங்கள் போன்றவை உள்ளன. அவை வலிமையான அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. தொடர்ந்து முருங்கைக்காயை உட்கொள்வதன் மூலம் கீல்வாதம், ஒவ்வாமை போன்ற அழற்சி அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம்.

    6. நோய் எதிர்ப்பு சக்தி:

    முருங்கைக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதிலும், நோய்த்தொற்றுகளைத் தடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து செல்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது.

    7. எடை மேலாண்மை:

    முருங்கைக்காயில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாகவே உள்ளன. ஆனால் நார்ச்சத்து மிகுந்திருக்கிறது. பசியை கட்டுப்படுத்தி அதிக அளவு உணவு உட்கொள்வதை தடுக்கும். இதன் மூலம் உடல் எடை குறைவதற்கும், உடல் எடையை சீராக பராமரிப்பதற்கும் உதவி செய்யும்.

    முருங்கைக்காயை குழம்பு வகைகளில் சேர்ப்பதோடு சூப் தயாரித்தும் பருகலாம். முருங்கைக்காய் சூப் வெப்பமான கோடை நாட்களில் உடலுக்கு ஊட்டமளிக்கும். முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலைகளை பிற காய்கறி, பழங்களுடன் சேர்த்து சாலட்டுகளாக தயார் செய்தும் சாப்பிடலாம். பழங்கள், தயிர், ஐஸ் ஆகியவற்றுடன் கலந்து பானமாகவும் ருசிக்கலாம்.

    • உடன்குடி பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
    • பனைமரங்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஊடுபயிராக முருங்கை, தென்னை போன்றவற்றை நடவு செய்து வருகின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியான குலசேகரன்பட்டினம், கொட்டங்காடு, பிறைகுடியிருப்பு, மெய்யூர், வாகவிளை, லட்சுமிபுரம் ஊராட்சி, பரமன்குறிச்சி, சீருடையார்புரம், மாநாடு, வெள்ளாளன்விளை, சிதம்பரபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பருவமழை பெய்து வருகிறது.

    இதனால் அங்கு விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் முற்றிய முருங்கை மரத்தை வெட்டி விடுவதும், பனைமரங்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஊடுபயிராக முருங்கை, தென்னை போன்றவற்றை நடவு செய்வது உள்ளிட்ட விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது பருவ மழை காலம் தொடங்கி விட்டது. இதைத் தொடர்ந்து பனி, குளிர் காலம் வரும் வெயிலின் தாக்கம் இனி குறைவாகவே இருக்கும். எனவே புதிதாக விவசாயம் செய்வதற்கு சரியான காலநிலை உருவாகியுள்ளது. இதனால் பல்வேறு விவசாய பணிகளை ஆரம்பித்து உள்ளோம் என்றார்.

    • குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர்.
    • கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்ததால் முருங்கைக்காய் எல்லாம் புள்ளியடித்து கருப்பு நிறமாக மாறி விட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதி என்பது 17 கிராம ஊராட்சியும் ,ஒரு பேரூராட்சியும் அடங்கிய பகுதியாகும்.

    மெஞ்ஞானபுரம், பரமன்கு றிச்சி, லட்சுமிபுரம், வாகவிளை, குலசேகரன்பட்டினம். மணப்பாடு, செட்டியா பத்து, தண்டுபத்து, சீர்காட்சி, போன்ற பெரும் ஊரை அடக்கிய பகுதியாகும். இங்கு தற்போது பனை, தென்னை, முருங்கை ஆகிய 3 விவசாயம் மட்டுமே மும்முரமாக நடந்து வருகிறது.

    குறைந்த காலத்தில் அதிக வருமானம் தரும் என்பதால் முருங்கையை பனை, தென்னை மரத்திற்குள் ஊடுபயிராக பயிரிட்டனர். திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் மும்முரமாக நடந்தது.முருங்கையும் கொத்து கொத்தாக காய்க்கிறது.

    ஒரு கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது படிப்படியாக விலை குறைந்தது. கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு தொடர்ந்து மழை பெய்ததால் முருங்கைக்காய் எல்லாம் புள்ளியடித்து கருப்பு நிறமாக மாறி விட்டது.

    இதனால் கருப்பு நிறமுருங்கையை வாங்குவதற்கு கமிஷன் கடைகாரர்கள் தயாராக இல்லை. இதனால் 1 கிலோ ரூ.10-க்கு கொள்முதல் செய்கின்றனர். இருந்தாலும் விவசாயிகள் தவறாமல் முருங்கைக்காய் பறித்து கொண்டு வந்து கமிஷன் கடையில் குவிக்கின்றனர்.

    தற்போது மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை கொண்டு குவிப்பதால், வியாபாரிகள் இதை வாங்கி, மதுரை, திருச்சி விருதுநகர். சென்னை, கோவை போன்ற பெரும் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் .உற்பத்தி செலவுக்கூட கட்டுபடியாகவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

    • தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய் கொள்முதல் செய்வது வழக்கம்.
    • மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் தனியார் கொள்முதல் நிலையங்களில் முருங்கைக்காய் கொள்முதல் செய்வது வழக்கம். இந்த சந்தைக்கு மூலனூர், கன்னிவாடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த முருங்கைக்காய்களை மூலனூர் மற்றும் கன்னிவாடி பகுதியில் உள்ள தனியார் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர்.

    திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், தாராபுரம், மூலனூர் ஆகிய பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்து முருங்கைக் காய்களை வாங்கி செல்கின்றனர். பின்னர் இதை மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்து பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். வடமாநில வியாபாரிகள் முருங்கை கொள்முதல் செய்வதை தொடங்கியுள்ளதால் மூலனூர் பகுதிகளில் தற்போது முருங்கை வரத்து தொடங்கியுள்ளது. கடந்த வாரம் கிேலா ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் இந்த வாரம் சற்று உயர்ந்து செடி முருங்கை, மரம் முருங்கை, கரு முருங்கை என அனைத்தும் சராசரியாக ரூ.23-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    விலை உயர தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • 100 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்
    • கரும்பு முருங்கை ரூ. 8 முதல் ரூ.10 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். நேற்று 100 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 4 முதல் 5 வரைக்கும், மரம் முருங்கை ரூ.4 முதல் 5 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ. 8 முதல் ரூ.10 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து தெரிவித்தார்.

    • 125 விவசாயிகள் 100 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 8 க்கும், மரம் முருங்கை ரூ.7 க்கும், கரும்பு முருங்கை ரூ. 10 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

    நேற்று 125 விவசாயிகள் 100 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 8 க்கும், மரம் முருங்கை ரூ.7 க்கும், கரும்பு முருங்கை ரூ. 10 க்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர். இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • மர முருங்கைக்காய் கிலோ ரூ. 9க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
    • முருங்கைக்காய்கள் வாரச் சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் சந்தைக்கு 24 டன் முருங்கைக்காய் வரத்து ஞாயிற்றுக்கிழமை இருந்தது.வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக்காய்கள் இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

    வெள்ளக்கோவில் -முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்தில் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 11, செடி முருங்கைக்காய் ரூ.11, மர முருங்கைக்காய் கிலோ ரூ. 9க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். 

    • மர முருங்கைக் காய் கிலோ ரூ. 20க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.
    • வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவில் முருங்கைக் காய் சந்தைக்கு 13 டன் முருங்கைக்காய்கள் வரத்து ஞாயிற்றுக்கிழமை இருந்தது.

    வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக் காய்கள், இப்பகுதியில் செயல்பட்டு வரும் வாரச் சந்தைகள் மற்றும் தனியாா் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை தனியாா் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த வாரம் கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ. 23, செடி முருங்கைக் காய் ரூ. 23, மர முருங்கைக் காய் கிலோ ரூ. 20க்கு விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். 

    • உடன்குடி வட்டார பகுதியில் திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் சிறப்பாக உள்ளது.
    • கடந்த ஆண்டு இதேமாதம் முருங்கைக்காய் ரூ.30 முதல் 40 வரை கொள்முதல் செய்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் தற்போது முருங்கை விவசாயம் முழு முயற்சியுடன் நடைபெறுகிறது. முன்பு ஒரு காலத்தில் தென்னை, பனை விவசாயம் நடந்த இடங்களில் எல்லாம் தற்போது முருங்கையை ஊடுபயிராக பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

    திரும்பிய திசைகளில் எல்லாம் முருங்கை விவசாயம் சிறப்பாக உள்ளது. ஆனால் 1 கிலோ ரூ.20 முதல் ரூ.25-க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.

    கடந்த ஆண்டு இதேமாதம் முருங்கைக்காய் ரூ.30 முதல் 40 வரை கொள்முதல் செய்தனர். தற்போது அடிக்கடி குளிர்ந்த காற்று வீசுவது, திடீர் என சாரல் சாரல் மழை பெய்வதால் முருங்கைபூக்கள் எல்லாம் உதிர்ந்துவிடுகிறது.

    முருங்கைக்கு மருந்துகள் தெளித்தல், உரம் வைத்தல் கூறி தொழிலாளி ஊதியம் என செலவு அதிகமாக வருகிறது. ஆனால் இந்த செலவுக்கு ஏற்றபடி விளைச்சலும் இல்லை, விலையும் இல்லை. முருங்கை காயுடன் முருங்கை இலை, முருங்கைப்பூ, முருங்கை பட்டை என 4 விதமாக கொள்முதல் செய்து வெளியிடங்களுக்கு அனுப்பினால் தான் முருங்கை விவசாயத்துக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் கிலோ ரூ.20-க்கு விற்பனையானது
    • இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கரூர்

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் கிணற்றில் உள்ள குறைந்த அளவு நீரைக்கொண்டு முருங்கைக்காய் பயிரிடுதல் மற்றும் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். அரவக்குறிச்சி சுற்று வட்டாரப்பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கைக்காய் பயிரிட்டுள்ளனர். இப்பகுதி விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மட்டுமே தற்போது வாழ்வாதாரமாக விளங்குகிறது. முருங்கையில் செடி முருங்கை, மரமுருங்கை என இரு வகை உள்ளன.

    கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் முருங்கைக்காய்கள் விளைச்சல் குறைவாக இருந்ததால் 1 கிலோ ரூ.100-க்கு விலைபோனது. பிறகு மார்ச் முதல் முருங்கை சீசன் தொடங்கி காய்கள் விளைச்சல் அதிகமானது. இதனால் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 1 கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை விலை போனது. இதனால் விவசாயிகள் முருங்கை காய்களை பறிப்பதற்கு கூட கூலி கட்டாமல் பாதிக்கப்பட்டனர். தற்போது ஜூன் மாதம் விளைச்சல் குறைந்துள்ளதால் 1 கிலோ முருங்கை காய்கள் ரூ.20 முதல் ரூ.25 வரை முருங்கை மார்க்கெட்டுகளில் விலை போகின்றது.

    இந்த விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு ஆண்டில் ஜனவரி, டிசம்பர் மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயிகள் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் உள்ளிட்ட அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள முருங்கைக்காய் மார்க்கெட் கமிஷன் மண்டிகளில் முருங்கைக்காயை விற்று விடுவார்கள். அங்கு விவசாயிகளிடமிருந்து வாங்கிய முருங்கைக்காய்கள் பெங்களூரு, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, விஜயவாடா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் லாரிகளில் அனுப்பி வருகின்றனர். தற்போது முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளதால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம், என்றனர்.

    • 80 விவசாயிகள் 20டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்,
    • மரம் முருங்கை ரூ.6முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.14 முதல் 15வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    நேற்று 80 விவசாயிகள் 20டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர், இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.8க்கும், மரம் முருங்கை ரூ.6முதல் 7வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.14 முதல் 15வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், மைசூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.இத்தகவலை முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக வெள்ளகோவிலைச் சேர்ந்த முருங்கைக்காய் வியாபாரி எம்.பி.முருகேசன் கூறினார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிற்றுக்கிழமை தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    அதன்படி இந்த வாரம் 30 விவசாயிகள் 2 டன் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.35-க்கும், மரம் முருங்கை ரூ.30-க்கும், கரும்புமுருங்கை ரூ.45-க்கும் கொள்முதல் செய்தனர்.

    கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூரு ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக வெள்ளகோவிலைச் சேர்ந்த முருங்கைக்காய் வியாபாரி எம்.பி.முருகேசன் கூறினார்.

    இந்த மாதம் முருங்கைக்காய் சீசன் இல்லாததாலும் முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. தற்போது முருங்கைப்பூ பூத்துள்ளது. அடுத்த மாதத்திற்கு பிறகுதான் முருங்கைக்காய் வரத்து அதிகரிக்கும் என்று விவசாயிகள் கூறினார்கள்.

    ×