search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK member arrest"

    • மதுபோதையில் பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • தி.மு.க. பிரமுகர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    போரூர்:

    ராமாபுரம், திருவள்ளுவர் சாலையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு தீமிதி திருவிழா நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி அங்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்து இருந்தனர். ராமாபுரம் இன்ஸ்பெக்டர் கோவிந்த ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது மதுபோதையில் இருந்த நபர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை பெண் போலீசிடம் திடீரென தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் அருகில் இருந்த போலீசாரிடம் இதுபற்றி தெரிவித்தார்.

    இதையடுத்து மதுபோதையில் பெண் போலீசிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் அதே பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் கண்ணன் (வயது51) என்பது தெரிந்தது. தி.மு.க. பிரமுகரான அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாக்குச்சாவடி மையத்தில் பெண் போலீசிடம் தவறாக நடக்க முயன்ற தி.மு.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அக்கிசெட்டிபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டு இருந்தது.

    இந்த வாக்குப்பதிவு மையத்தில் ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் சசிகலா என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் விஜய் (வயது 29) என்பவர் அங்கு வந்து பொதுமக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். இதை பார்த்த சசிகலா, வாக்குச்சாவடி அருகே நிற்கக்கூடாது, இங்கிருந்து செல்லுங்கள் என கூறினார்.

    அதற்கு விஜய், ஆபாசமாக பேசி தகராறு செய்தார். மேலும் மிரட்டல் விடுத்து தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதையறிந்ததும், சக போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே விஜய் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து சசிகலா ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கேசவன் விசாரணை நடத்தி, பெண் போலீசை ஆபாசமான வாத்தையால் பேசியது, அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, அவமானப்படுத்தி வன்கொடுமை செயலில் ஈடுபட்டது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயை கைது செய்தார்.

    பின்னர் போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திண்டுக்கல் அருகே அரசு பஸ்சை எரிக்க முயன்ற தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
    வடமதுரை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதனால் அன்று மாலை பரபரப்பான சூழல் காணப்பட்டது. அலுவலகம் மற்றும் பள்ளி, கல்லூரி முடிந்து அனைவரும் அவசர அவசரமாக வீடு திரும்பினர்.

    பல இடங்களில் கருணாநிதியின் மரண செய்தி கேட்டு ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதனால் பலர் தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதியடைந்தனர்.

    தி.மு.க. தொண்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்து உணர்ச்சி பிழம்பாய் காணப்பட்டனர். பல்வேறு பகுதிகளில் அமைதியான முறையில் மவுன ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தினர். ஒரு சில இடங்களில் உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள் ஆவேசமாக காணப்பட்டனர்.

    சென்னையில் இருந்து கம்பம் நோக்கி அரசு விரைவு பஸ் வந்து கொண்டு இருந்தது. திண்டுக்கல் அருகே வடமதுரை மூணாண்டி பட்டிபிரிவு பகுதியில் வந்த போது ஒரு கும்பல் பஸ்சை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டவாறு பஸ்சில் இருந்து இறங்கினர்.

    மேலும் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடியதால் பெட்ரோல் கேன்களை தூக்கி எறிந்து விட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் உத்தரவுப்படி வடமதுரை இன்ஸ்பெக்டர் வைரம் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அரசு பஸ்சை எரிக்க முயன்றவர்கள் தி.மு.க.வினர் என தெரிய வந்தது. முன்னாள் துணைச் சேர்மன் கர்ணன் தலைமையில் நிர்வாகிகள் கருப்பையா, முருகன், தங்கராசு, பிரகாஷ் ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். இது குறித்து 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கருப்பையா, முருகன், தங்கராசு, பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். தப்பி ஓடிய கர்ணனை தேடி வருகின்றனர்.
    முகநூலில் முதல்வர் மற்றும் துணை முதல்வரை அவதூறாக விமர்சித்த கம்பம் தி.மு.க. நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் கம்பம் தி.மு.க. நகர துணைச் செயலாளராக இருப்பவர் கராத்தே ராமகிருஷ்ணன். இவர் கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தூத்துக்குடி உள்பட பல்வேறு சம்பவங்களில் சரியாக செயல்படவில்லை என்று தனது முகநூலில் பதிவு செய்திருந்தார்.

    மேலும் அவர்களைப் பற்றி தரக்குறைவாகவும், விமர்சனம் செய்திருந்தார். இது குறித்து தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் உத்தமபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

    இது குறித்து கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் தெரிவிக்கையில், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. முகநூலில் தனது கருத்தை பதிவு செய்ததற்காக தி.மு.க. நிர்வாகியை கைது செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது. எனவே இது குறித்து செயல் தலைவரிடம் எடுத்து கூறி தேனி மாவட்டத்தில் போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார். #Tamilnews

    ×