search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Battery vehicles"

    • சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சி தூய்மை பணிக்காக 15-வது நிதிக்குழு மானியத்தில் 13 பேட்டரி வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், பொறியாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுகந்தி வரவேற்று பேசினார்.

    இதில் பழனிநாடார் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணிக்காக பேட்டரி வாகனங்களை வழங்கி பேசினர்.

    நிகழ்ச்சியில் கரையாளனுர் சண்முகவேல், ஆறுமுகசாமி, பூல்பாண்டியன், சாமுவேல் மனோகர், ஆலடிப்பட்டி ராமசாமி, அப்துல்காதர், சங்கரநயினார், கூட்டுறவு கணேசன், ஸ்டீபன் சத்யராஜ், முல்லை கண்ணன், கோமதிநாயகம், செல்வகுமார், சசிகுமார், ஜோசியர் தங்க இசக்கி, மோகன், பால் என்ற சண்முகவேல், தேவேந்திரன், சமுத்திரம், கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, ரமேஷ், பரமசிவன், அந்தோணி சுதா ஜேம்ஸ், சிவஞான சண்முகலட்சுமி, அம்சா பேகம், ஜெயச்சந்திரன், சாலமோன், கந்தையா, தபேந்திரன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • முதற்கட்டமாக, வாங்கப்பட்ட 4 பேட்டரி குப்பை வாகனங்களை நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.
    • நகராட்சி சார்பில் நடந்த ரத்த தான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய நகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள், கல்லூரி மாணவர்களுக்கு நகராட்சி தலைவர், ஆணையாளர், துணைத் தலைவர் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர்.

    பழனி:

    பழனி நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில் 3,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மக்கும் மற்றும் மக்காத குப்பையை, வீடு வீடாக சென்று தூய்மைப் பணியாளர்கள் பெற்றுச் செல்கின்றனர். இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க வசதியாக பேட்டரியால் இயங்கும் குப்பை வாகனங்கள் வாங்க திட்டமிட்டனர். முதற்கட்டமாக, வாங்கப்பட்ட 4 பேட்டரி குப்பை வாகனங்களை நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கினார்.

    மேலும் நகராட்சி சார்பில் நடந்த ரத்த தான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய நகராட்சி பணியாளர்கள், கவுன்சிலர்கள், கல்லூரி மாணவர்களுக்கு நகராட்சி தலைவர், ஆணையாளர் ராமர், துணைத் தலைவர் கந்தசாமி ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கினர். மக்களுக்கான தூய்மை இயக்கம் சார்பில் காந்திகிராம பல்கலைக் கழகத்திற்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. நகர் நல அலுவலர் மனோஜ்குமார், பொறியாளர் வெற்றிச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • ஆலங்குளம் பேரூராட்சியில் 18 பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டன.
    • தொடக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட 18 பேட்டரி வாகனங்களும் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டன.

    இந்த பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டுக்கு அளிப்பதற்கான தொடக்க நிகழ்ச்சி, பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் ஜாண் ரவி முன்னிலை வகித்தார். தி.மு.க. நகரச் செயலாளர் நெல்சன் வரவேற்றார்.

    தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் ஆகியோர் இணைந்து வாகனங்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

    பின்னர் பொதுமக்கள் நலன் கருதி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் சாலமோன் ராஜா, ம.பழனிசங்கர், சுந்தரம், ரவிக்குமார், தொழிலதிபர்கள் மாரிதுரை, மணிகண்டன், மோகன்லால், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜ துரை, அருணாசலம், சொரிமுத்து, தி.மு.க. நகர துணைச் செயலாளர் சரஸ்வதி, மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், சாமுவேல்ராஜா, ஒன்றியப் பிரதிநிதி ஆதிவிநாயகம், துரை, கிளைக் கழகம் சாலமோன் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    தொடர்ந்து, தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின், இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப் பேற்றுள்ளதை கொண்டாடும் விதமாக, தி.மு.க. சார்பில் அனை வருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் எம்.சுதா மோகன்லால், ஆலங்குளம் நகர செயலாளர் எஸ்.பி.டி.நெல்சன், கீழப்பாவூர் நகர செயலாளர் ஜெகதீஷன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • 10 பேட்டரி வாகனங்கள் சீரமைக்கப்பட்டு 1-வது மண்டல அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.
    • பேட்டரி வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் குப்பை அள்ளுவதற்கு வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்களில் முறைகேடு புகார் எழுந்து, ஆவணங்களில் உள்ள, வாங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் அனைத்தையும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பழுதடைந்த வாகனங்களை சீரமைத்து குப்பை அள்ளுவதற்கு வழங்க வேண்டும் என்று உதவி ஆணையாளர்கள், தனியார் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக தற்போது 10 பேட்டரி வாகனங்கள் சீரமைக்கப்பட்டு 1-வது மண்டல அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த குப்பை அள்ளும் வாகனங்களை ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆய்வு செய்தார். வீடு, வீடாக சென்று குப்பை பெறுவதற்கு இந்த பேட்டரி வாகனங்களின் பங்களிப்பு முக்கியமாக உள்ளது. இதனால் பேட்டரி வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணிகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    • அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வருகின்றனர்.
    • குப்பைகளை சேகரிக்க ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பேட்டரி வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி வைத்தார்.

    அந்தியூர்:

    அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் கழிவுகளை மறுசுழற்சி செய்து தார்சாலை போட பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கின்றனர்.

    இந்த பணியாளர்கள் தள்ளு வண்டி மூலமாக சென்று வரும் பொழுது மிகுந்த காலதாமதமும், பணியாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனை களையும் விதமாக 14 மற்றும் 15-வது நிதிக் குழு மானியம் திட மற்றும் திரவ கழிவு திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பேட்டரி வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் சங்கராபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி ஊராட்சி செயலாளர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன், முன்னாள் கிளைச் செயலாளர் கவின் மற்றும் கவுன்சிலர்கள் அலுவலகப் பணியாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×