சுரண்டை நகராட்சியில் தூய்மை பணிக்காக 13 பேட்டரி வாகனங்கள்-பழனிநாடார் எம்.எல்.ஏ., சிவபத்மநாதன் தொடங்கி வைத்தனர்

சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பழனிநாடார் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் பேட்டரி வாகனத்தை தொடங்கி வைத்தனர். அருகில் நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் உள்ளார்.
பழனிநாடார் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் பேட்டரி வாகனத்தை தொடங்கி வைத்தனர். அருகில் நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் உள்ளார்.
Published on

சுரண்டை:

சுரண்டை நகராட்சி தூய்மை பணிக்காக 15-வது நிதிக்குழு மானியத்தில் 13 பேட்டரி வாகனங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், துணை தலைவர் சங்கராதேவி முருகேசன், பொறியாளர் ஹரிஹரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுரண்டை நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சுகந்தி வரவேற்று பேசினார்.

இதில் பழனிநாடார் எம்.எல்.ஏ. மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணிக்காக பேட்டரி வாகனங்களை வழங்கி பேசினர்.

நிகழ்ச்சியில் கரையாளனுர் சண்முகவேல், ஆறுமுகசாமி, பூல்பாண்டியன், சாமுவேல் மனோகர், ஆலடிப்பட்டி ராமசாமி, அப்துல்காதர், சங்கரநயினார், கூட்டுறவு கணேசன், ஸ்டீபன் சத்யராஜ், முல்லை கண்ணன், கோமதிநாயகம், செல்வகுமார், சசிகுமார், ஜோசியர் தங்க இசக்கி, மோகன், பால் என்ற சண்முகவேல், தேவேந்திரன், சமுத்திரம், கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், ராஜ்குமார், வேல்முத்து, ரமேஷ், பரமசிவன், அந்தோணி சுதா ஜேம்ஸ், சிவஞான சண்முகலட்சுமி, அம்சா பேகம், ஜெயச்சந்திரன், சாலமோன், கந்தையா, தபேந்திரன் மற்றும் தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com