search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alankulam Town Panchayat"

    • ஆலங்குளம் பேரூராட்சியில் 18 பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டன.
    • தொடக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்ட 18 பேட்டரி வாகனங்களும் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கப்பட்டன.

    இந்த பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டுக்கு அளிப்பதற்கான தொடக்க நிகழ்ச்சி, பேரூராட்சி வளாகத்தில் நடைபெற்றது.பேரூராட்சித் தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் ஜாண் ரவி முன்னிலை வகித்தார். தி.மு.க. நகரச் செயலாளர் நெல்சன் வரவேற்றார்.

    தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன், ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன் ஆகியோர் இணைந்து வாகனங்கள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.

    பின்னர் பொதுமக்கள் நலன் கருதி நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் சாலமோன் ராஜா, ம.பழனிசங்கர், சுந்தரம், ரவிக்குமார், தொழிலதிபர்கள் மாரிதுரை, மணிகண்டன், மோகன்லால், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜ துரை, அருணாசலம், சொரிமுத்து, தி.மு.க. நகர துணைச் செயலாளர் சரஸ்வதி, மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், சாமுவேல்ராஜா, ஒன்றியப் பிரதிநிதி ஆதிவிநாயகம், துரை, கிளைக் கழகம் சாலமோன் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

    தொடர்ந்து, தி.மு.க. மாநில இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின், இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப் பேற்றுள்ளதை கொண்டாடும் விதமாக, தி.மு.க. சார்பில் அனை வருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றியக் குழுத் தலைவர் திவ்யா மணிகண்டன், பேரூராட்சித் தலைவர் எம்.சுதா மோகன்லால், ஆலங்குளம் நகர செயலாளர் எஸ்.பி.டி.நெல்சன், கீழப்பாவூர் நகர செயலாளர் ஜெகதீஷன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    ×