search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 arrested"

    • விரட்டி சென்ற மடக்கி பிடித்தனர்
    • 10 லிட்டர் பறிமுதல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் கள்ள சாராயம் விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது தாமலேரிமுத்தூர் கிராமத்தில் சோதனை செய்தபோது முட்புதர் அடர்ந்த மறைவான பகுதியில் கள்ளத்தனமாக கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த நபர்களை பிடிக்க முயன்ற போது போலீசாரை கண்டதும் அங்கிருந்து 2 பேர் தப்பி ஓட முயன்றனர்.

    பின்னர் போலீசார் இருவரையும் விரட்டி பிடித்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 120 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே அழித்தனர்.

    மேலும் இதே போன்று ஜோலார்பேட்டை அடுத்த சக்கரகுப்பம் பகுதியில் கள்ள சாராயம் விற்றுக் கொண்டிருந்த 2 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தலா 5 லிட்டர் கள்ள சாராயம் வீதம் 10 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர்.

    கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கரட்டடிபாளையத்தில் உள்ள மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள், பான்மசாலா பாக்கெட்டுகள் என மொத்தம் 107 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் போன்றவற்றை விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கோபி கரட்டடிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் கரட்டடிபாளையத்தில் உள்ள மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள், பான்மசாலா பாக்கெட்டுகள் என மொத்தம் 107 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 159 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • திருட்டு நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • போலீசார் விசாரித்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.

    காரமடை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை போலீஸ்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் சந்திரசேகர்.

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் பணி முடிந்து தனது மோட்டார்சைக்கிளில் காரமடை தொட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். வீட்டு முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார்ைசக்கிள் காணாமல் போய் இருந்தது. இதுகுறித்து சந்திரசேகர் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதேநாளில் காரமடை கண்ணார்பாளையம் பாலாஜிநகரைச் சேர்ந்த தனபால் என்பவரது மோட்டார்சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோட்டார்சைக்கிள் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருட்டு நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மோட்டார்சைக்கிளை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நிசார் முஹம்மது, ஹரிகரன், தமிழ்ச்செல்வன் மற்றும் காரமடை பகுதியை சேர்ந்த நித்திஷ் ஆகி யோர் என்பது தெரிய வந்தது. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசனை தாக்கி அவரது கைப்பையை பறித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் மணியரசன். இவர் காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளராக உள்ளார். கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி சென்னை செல்வதற்காக தனது வீட்டில் இருந்து தஞ்சை ரெயில் நிலையத்திற்கு நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மணியரசன் புறப்பட்டார்.

    தஞ்சை மணிமண்டபம் அருகே அவர்கள் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் சென்ற மர்ம நபர்கள் திடீரென மணியரசனை தாக்கினர். மேலும் அவரின் கைப்பையையும் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

    இதற்கிடையில் மணியரசனை தாக்கியது உள்நோக்கத்துடனே என்று பரபரப்பு பரவியது. அவரை வேண்டும் என்றே சிலர் தாக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்பு சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடந்தது.

    இதைத் தொடர்ந்து ஐ.ஜி.வரதராஜ், டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவின் பேரில் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சுகுமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரகாசம், தலைமை காவலர்கள் மோகன், இளையராஜ், சிவக்குமார், சண்முகம் மற்றும் போலீஸ் அருண் கொண்ட குழுவினர் இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.

    அப்போது தஞ்சை நகரில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கரந்தை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் சந்தேகப்படும்படி சிலரின் உருவப்படம் பதிவாகி இருந்தது. அந்த படத்தை வைத்து விசாரணை நடத்தியபோது, சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த முருகவேல் (வயது 33), அரியலூர் மாவட்டம் கீழப்பழூரை சேர்ந்த வினோத்குமார் (28), தஞ்சை குருவாடியை சேர்ந்த புஷ்பராஜ் (26), திருவையாறு நடுக்கடையை சேர்ந்த முகமது தவுபீக் (22) ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் நாங்கள் 4 பேர் தான் பணத்திற்காக மணியரசனை தாக்கியது என்று வாக்குமூலம் அளித்தனர். இதைத் தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.உள்நோக்கத்துடன் மணியரசன் தாக்கப்பட்டார் என்று வதந்தியாக பரவிய தகவலை முறியடித்து உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். #tamilnews
    ×