search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 arrested"

    • அப்போது அங்கு இருந்த 4 இளம் வாலிபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர்.
    • வழுதலம்பட்டு காலனி சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வடலூர் பார்வதிபுரம் சேர்ந்தவர் ஜோதிமணி (வயது 37). இவர் நேற்று வழுதலம்பட்டு செந்தாமரை வாய்க்கால் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த 4 இளம் வாலிபர்கள் திடீரென்று ஜோதி மணியை வழிமறித்தனர். பின்னர் ஜோதி மணியை தாக்கி மிரட்டி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு, ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்து தப்பித்து சென்றனர். இதில் காயமடைந்த ஜோதிமணி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இது குறித்து ஜோதிமணி குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இதில் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் சேர்ந்த சுரேஷ் ராகுல் (வயது 19), நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சேர்ந்த 18 வயது சிறுவன், திருப்பூர் மாவட்டம் சேர்ந்த 15 வயது சிறுவன், குறிஞ்சிப்பாடி வழுதலம்பட்டு காலனி சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • மாணிக்கம் (வயது 55). இவர் வீராணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் அம்மையப்பன் நகர் பகுதியில் வசித்து வந்தார்.
    • அங்கிருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி மனக்காடு குள்ளர் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 55). இவர் வீராணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூர் அம்மையப்பன் நகர் பகுதியில் வசித்து வந்தார். அங்கு குடியிருந்த வீட்டை காலி செய்யும் போது, பின்னர் எடுத்துக் கொள்ளலாம் என கருதி பாதி பொருட்களை அந்த வீட்டிலேயே வைத்து இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மீதி பொருட்களை எடுக்க வீட்டிற்கு சென்றபோது, அங்கிருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணிக்கம் வீராணம் போலீசில் புகார் செய்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணக்கம் வீட்டில் கொள்ளையடித்தது மேட்டுப்பட்டி தாதனூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சதீஸ்குமார் (27), சுரேஷ் (21), பரமசிவம் (27), கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சூர்யா (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  

    • வெண்ணந்தூர் அருகே உள்ள வடுகம்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடந்தது.
    • ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள வடுகம்பாளையத்தில் சில தினங்களுக்கு முன்பு ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடந்தது. அப்போது சப்பை யபுரத்தைச் சேர்ந்த அஜித் ( வயது 25) என்பவருக்கும் வடுகம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் (25) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அங்கிருந்த வர்கள் இருவரையும் சமா தானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் மறுநாள் வடுகம்பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பர்கள் பெரியசாமி(27), ராஜேஸ்குமார் (28), ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சபரி (18) ஆகியோர் அஜித் வீட்டுக்குச் சென்று அஜித் மற்றும் அவரது நண்பர் ஹரிஹரன் ஆகி யோரை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அஜித் மட்டும் ஹரிஹரன் இருவரும் ராசிபுரம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது பற்றி வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று சக்திவேல், பெரியசாமி, ராஜேஷ்குமார், சபரி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பிறகு அவர்களை ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.நீதிபதி உத்தரவின் பேரில் அவர்கள் 4 பேரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

    • 4 டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் அவர்களிடம் இருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விருத்தாசலம் மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பியோ தங்கதுரை தலைமையிலான மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் 4 டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். விருத்தாசலம் பகுதியில் சதீஷ் மற்றும் ஆனந்த், கச்சிராயநத்தம் பகுதியை சேர்ந்த குமார் மற்றும் பாலகொல்லையை சேர்ந்த துரைசாமி ஆகியோர் சட்ட விரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 79 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அனுமதி யின்றி அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
    • இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் அனுமதி யின்றி அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட துணை கண்காணிப்பாளர் தையல் நாயகி தலைமையிலான போலீசார் ஏற்காடு மலை கிராமங்களில் தீவிர சோதனை நடத்தினர்.

    இதில், கீரைக்காடு பகுதியில் மலர் கொடி என்பவரும், ஒண்டிக்கடை பகுதியில் சசிகலா என்பவரும், அரங்கம் கிராமத்தில் ராணி என்பவரும், பட்டிபாடி கிராமத்தில் சின்னம்மா என்ப வரும் அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • மதுரை வைகை ஆற்றில் கொள்ளையடிப்பதற்காக பதுங்கியிருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    மதுரை

    மதுரை வைகை தென்கரை பகுதியில் ஆயுதங்களுடன் 10 பேர் கும்பல் கொள்ளை யடிப்பதற்காக பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. இவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

    இதையடுத்து மாநகர தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், உதவி கமிஷனர் சுவாதி ஆலோசனையின் பேரில், திலகர் திடல் இன்ஸ்பெக்டர் சங்கர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று காலை வைகை தென்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அனுமார் கோவில் படித்துறை பகுதியில் 10 பேர் கும்பல் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடினர். அவர்களில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் மேற்கண்ட 4 பேரையும் திலகர்திடல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    அவர்கள் சிம்மக்கல், வெங்கடசாமி அக்ரஹாரம் செந்தில்குமார் மகன் சந்தோஷ் (20), சிம்மக்கல் சுப்பையா பிள்ளை தோப்பு, பாரதி மகன் பூமிநாதன் (23), மேல அண்ணாதோப்பு, சுடுதண்ணீர் வாய்க்கால் தெரு, கதிரேசன் மகன் ராமர் என்ற யுவா ராம்குமார் (20), அவரது சகோதரர் லட்சுமணன் என்ற யுவராஜ்குமார் என்பது தெரியவந்தது. யுவராம்குமார், யுவராஜ்குமார் ஆகியோர் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரிஷிவந்தியம் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர்.
    • கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்து ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுநாதன் மற்றும் போலீசார் கெடிலம்கூட்டு்ரோட்டில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கீழ்ப்பாடி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் மாதவன் (வயது 19), ரிஷிவந்தியத்தை சேர்ந்த சாமுண்டி மகன் விஜயகுமார் (19) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. அவர்கள் கா.பாளையம் கிராமத்தில் உள்ள அமைச்சரம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,122 மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

    • திண்டிவனம் பகுதியில் காரில் ஆடு திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • 20 ஆடுகள் 38 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கார் பறி முதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் அடுத்த சாரம் லேபை அருகே ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் அய்யப்பன், போலீசார் செந்தில், சங்கர், பூபாலன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்து க்கிடமாக வந்த ஒரு காரை மடக்கிய போது அதிலி ருந்து நபர்கள் தப்ப ஓட முயன்றனர். அவர்களை மடக்கி பிடித்து காரை போலீசார் சோதனை செய்தனர். அதில் ஆடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    விசாரணையில் திண்டி வனம் நத்தமேடு பகுதியை சேர்ந்த குமார் (வயது 25), சத்யராஜ் (26), சுதாகர் (22), கமல் (34) ஆகியோர் என்பது தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக வியாபாரம் செய்வதற்கா கவும், கடைகளில் விற்பனை செய்வதற்காகவும் ஆடு திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த 20 ஆடுகள் 38 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கார் பறி முதல் செய்யப்பட்டது. ஆடு திருடியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    • வானூர் அருகே கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் கஞ்சா, புகயிலைப் பொருட்கள் மற்றும் மது கடத்தல் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட செயல்கள் தற்போது அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிளியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி தலைமையி லான போலீசார் நேற்று புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் 4 வழிச்சாலையில் கொண்டா மூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடு பட்டனர்.

    அப்போது அந்த வழி யாக 4 பேர் 2 மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த னர். உடனே போலீசார் அவர்களை நிறுத்தி சோதனை செய்த னர். அந்த சோதனையில் அவர்களிடமிருந்து 40 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை கடத்தி வந்த அதே பகுதி யை சேர்ந்த தினேஷ் (வயது 24), ரூபன் ராஜ் (23), வாஞ்சிநாதன் (25) உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர் பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
    • செம்பட்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராஜன் (24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொடர் பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சி களைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்து க்களை சேதப்ப டுத்தியதாக கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே சோலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் மணி கண்டன் (வயது 22), மேலும் போலீசார் மீது கற்களை வீசி வன்முறை யில் ஈடுபட்டதாக சின்ன சேலம் அருகே பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை (46), தெங்கியா நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (41), சங்கரா புரம் அருகே செம்பட்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதிராஜன் (24) ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • திட்டக்குடி அருகே வெள்ளாற்றில் மணல் திருடிய கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    • ஒரு ஜேசிபி, ஒரு மினி லாரி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழக்கல்பூண்டி கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் நேற்று இரவு அனுமதி இன்றி மணல் திருடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெள்ளாற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த புதுக்குளம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் (28), புலிக்கரைம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (29), கீழக்கல் பூண்டி கிராமத்தை சேர்ந்த மணிரத்தினம் (32), கண்டமத்தான் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (43) மற்றும் இவர்களுடன்2 சிறுவர்கள் இணைந்து மினி லாரியில் ஜேசிபி உதவியுடன் மணல் அள்ளிக்கொண்டிருந்த போது போலீசார் கையும் களவுவமாக பிடித்தனர். தகவலின் பேரில் இரவு சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி காவியா மற்றும் ராமநத்தம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், மற்றும் போலீசார் ராமநத்தம் காவல் நிலையம் அவர்களை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு ஜேசிபி, ஒரு மினி லாரி, ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து செய்துள்ளனர்.

    • கள்ளக்குறிச்சியில் ரோந்து பணியில் கஞ்சா வியாபாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • இவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பீத்தாங்கரை ஏரிக்கரை அருகே சந்தேகப்படும்படியாக 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் சின்னசேலம் அருகே பெத்தாசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பன் (வயது 30), நயினார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முகமது ரபிக் (24), கள்ளக்குறிச்சி கரியப்பா நகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (21) இதே பகுதியைச் சேர்ந்த உதயசூரியன் (21) என தெரியவந்தது. இவர்கள் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பிரித்துக் கொண்டிருந்தனர். . இவர்களிடமிருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

    ×