புகையிலை பொருட்கள்- ஹான்ஸ் விற்ற 4 பேர் கைது

கரட்டடிபாளையத்தில் உள்ள மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள், பான்மசாலா பாக்கெட்டுகள் என மொத்தம் 107 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள்- ஹான்ஸ் விற்ற 4 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் போன்றவற்றை விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது கோபி கரட்டடிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை-ஹான்ஸ் பொருட்கள் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் கரட்டடிபாளையத்தில் உள்ள மளிகை கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள், பான்மசாலா பாக்கெட்டுகள் என மொத்தம் 107 பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த குமார்(32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் சூரம்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 159 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com