search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "108 ambulance"

    சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் பணியாற்றிய போலி பெண் டாக்டரை போலீசார் கைது செய்தனர். #FakeDoctor
    சென்னை:

    வேலூரைச் சேர்ந்தவர் ரேச்சல் ஜெனிபர். இவர் சென்னையில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் அவரது சான்றிதழ்களை ஆய்வு செய்த போது அவை போலியானது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்தார்.

    ரேச்சல் ஜெனிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் ரூ.35 ஆயிரம் சம்பளம் வாங்குவதும், போலி சான்றிதழ் பெற தினேஷ், விஜயலட்சுமி ஆகிய 2 பேர் உதவி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    போலி சான்றிதழுடன் டாக்டர் வேலையில் சேர்ந்த ரேச்சல் ஜெனிபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். #FakeDoctor
    குடிபோதையில் 108 ஆம்புலன்ஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூரை சேர்ந்தவர் சந்திரன். 108 ஆம்புலன் டிரைவர். இவர் நேற்று திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ்சில் அமர்ந்திருந்தார்.

    அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர் கும்பல் சந்திரனிடம் வீண்தகராறு செய்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். காயமடைந்த சந்திரன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவரது தரப்பில் மருத்துவ அலுவலர் செல்வகுமார் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திருப்பத்தூர் சிவராஜ்நகரை சேர்ந்த கணேசன் (வயது 25). என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தன்ராஜ் மற்றும் ஜெயகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

    ஏற்காட்டில் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்ட பெண்ணுக்கு வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது.
    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு வெள்ளக்கடை அருகே உள்ள பெரியேரிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கரியராமர். இவரது மனைவி மஞ்சுளா (வயது 24). கர்ப்பிணியான இவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    ஆனால் வழியிலேயே மஞ்சுளாவுக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் அவர் வலியால் துடித்தார். இதை பார்த்த ஆம்புலன்சில் சென்ற அர்ஜுன் என்பவர் அவருக்கு பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்தில் மஞ்சுளாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

    தாயும், சேயும் நாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு இருவரும் நலமாக உள்ளனர்.  #tamilnews
    போனஸை வலியுறுத்தி தீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #MadrasHC #108Ambulance
    சென்னை:

    108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் போனஸ் தொகை கேட்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்து வருகின்றனர்.

    இந்த போராட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விசாரித்து, ஐகோர்ட்டும் ஒவ்வொரு ஆண்டும் போராட்டத்துக்கு தடை விதித்து வருகிறது.

    அதன்படி, வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு ஐகோர்ட்டு இந்த ஆண்டும் தடை விதித்துள்ளது.

    தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 950 உள்ளன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர், இந்த ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த 108 ஆம்புலன்ஸ் சேவையை, 2 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வருகின்றன.

    இந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு 30 சதவீத போனஸ் வேண்டும் என்றும் தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில், 30 சதவீத போனஸ் தொகை கேட்டு வருகிற 5-ந்தேதியும் அதற்கு மறுநாளான தீபாவளி நாளிலும் (6-ந்தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.


    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கு அத்தியாவசியமானது. தீபாவளி அன்று வெடிவிபத்து ஏற்படும்போது, பாதிக்கப்படுபவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவை அத்தியாவசியமானது. எனவே, இவர்களது வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் இன்று விசாரித்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #MadrasHC #108Ambulance
    திருநின்றவூரை சேர்ந்த 11 வயது சிறுமி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #Threat

    போரூர்:

    சென்னை அவசர ஆம்புலன்ஸ் சேவை பிரிவு எண் 108-க்கு செல்போனில் பேசிய மர்ம நபர் ராமாபுரத்தில் குண்டு வைத்துள்ளதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

    இது குறித்து காவல் கட்டுபாட்டு அறைக்கும் ராமாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனுக்கும் தகவல் தெரிவித்தனர் இதையடுத்து அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் போலீசார் ஆய்வு செய்ததில் ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் இருந்து அழைப்பு வந்தது தெரிந்தது.

    இதுபற்றி திருநின்றவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் போனில் பேசியது கூலி தொழிலாளியான சேகர் என்பவரின் 11 வயது மகள் என்பது தெரிந்தது. மேலும் சிறுமி பேசிய செல்போன் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடையது என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Threat

    கேரள மாநிலம் ஆழப்புழாவில் 108 ஆம்புலன்சில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் மூச்சு திணறல் நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆழப்புழாவை அடுத்த சம்பக்குளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மோகனன் நாயர்(வயது66) என்பவர் சிகிச்சைக்கு சென்றார்.

    மூச்சுதிணறல் காரணமாக அவதிப்பட்ட மோகனன் நாயருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவரை எடத்து வாவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வந்ததும் அதில் சுகாதார நிலைய ஊழியர்கள், மோகனன் நாயரை ஏற்றினர்.

    மோகனன் நாயர் ஆம்புலன்சுக்குள் படுக்க வைக்கப்பட்ட சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. சற்று நேரத்தில் ஆம்புலன்சும் தீப்பிடித்து எரிந்தது.

    இதில் ஆம்புலன்சில் இருந்த நோயாளி மோகனன் நாயரும், ஆம்புலன்ஸ் டிரைவர் சைபுதீனும் தீயில் கருகினார். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். வழியிலேயே மோகனன் நாயர் இறந்தார். டிரைவர் சைபுதீன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆம்புலன்ஸ் வெடித்து சிதறியதில் ஆம்புலன்ஸ் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், 2 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமானது. அருகில் உள்ள ஒரு கடையும் சேதமானது.

    இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூரில் 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்ததில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
    திருப்பூர்:

    திருப்பூர் கல்லாங்காடு திருக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுசில். இவருடைய மனைவி கோகிலா (வயது 20). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கோகிலாவின் உறவினர்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் அருணா உடன் இருந்தார். ஆம்புலன்ஸ் கருப்பன கவுண்டம்பாளையம் அருகே வந்தபோது கோகிலாவுக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே டிரைவர் வாகனத்தை ரோட்டின் ஓரத்தில் நிறுத்தினார்.

    மருத்துவ உதவியாளர் கோகிலாவுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். இதில் கோகிலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும் குழந்தையையும் அதே ஆம்புலன்சில் அழைத்துக் கொண்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவரும் நலமாக உள்ளனர். ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு சுகபிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளரை உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினார்கள்.
    ×